Father and son arrested for cheating Lithauanian woman: சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியைச் சேர்ந்த தந்தையும் மகனும் லிதுவேனியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லிதுவேனியாவைச் சேர்ந்த இந்த பெண் எறா ஏற்றுமதியாளர் ருமைஸ் அஹமதுவை துபாயில் ஒரு பார்ட்டியில் சந்தித்திருக்கிறர். அவர் அப்போது அங்கே ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். மேலும், அவர் ஒரு மாடலாகவும் இருந்துவந்துள்ளார். இதன் விளைவாக அவர்கள் உறவில் இருந்துள்ளனர். அதன் பிறகு ருமைஸ் அஹமது அந்தப் பெண்ணை சென்னைக்கு அழைத்து வந்து ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.
இதனால், கர்ப்மான இந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள மறுத்த ருமைஸ் அஹமது பெண்ணி கர்ப்பத்தை கலைக்கவும் கட்டாயப்படுத்தியுள்ளார்.
தற்போது இந்த பெண் மூன்று மாத கர்ப்பினியாக உள்ளார். அது மட்டுமில்லாமல் அஹமதுவின் தந்தையும் இந்தப் பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததோடு அச்சுறுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த பெண் அகில இந்திய இயக்கப் பணிகள் என்ற தொண்டு நிறுவனத்தின் இணை நிறுவனர் கன்யா பாபுவின் உதவியை நாடினார். அவர் இந்தப் பெண்ணை, குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் துணை காவல் ஆணையர் எச்.ஜெயலக்ஷ்மியிடம் அழைத்துச் சென்றார். பின்னர், அவர் விசாரணை நடத்தி புகாரை சென்னை ஆயிரம் விளக்குப் பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பினார். இதையடுத்து ருமைஸ் அஹமது மற்றும் அப்துல் கரீம் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில், போலீசார் அவர்கள் இருவரையும் வியாழக்கிழமை அமைந்தகரையில் உள்ள அவர்களது விட்டில் வைத்து கைது செய்தனர். மேலும், கன்யா பாபு தனக்கும் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து அச்சுறுத்தி போன் அழைப்புகள் வருவதாக தெரிவித்துள்ளார்.
கன்யா பாபு, விரிவான புகாரை தயார் செய்து சென்னை காவல் ஆணையரிடம் ஏ.கே.விஸ்வநாதனிடம் அளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, லிதுவேனிய பெண் வெள்ளிக்கிழமை மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.