வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் யாரும் இறக்கவில்லை – சென்னை போலிஸ்

நேற்று நடந்த வண்ணாரப்பேட்டை போரட்டத்தில் யாரும் இறக்கவில்லை, தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் – சென்னை போலிஸ் ட்வீட்

Anti CAA Protest, Chennai
chennai police , Chennai Caa protest

நேற்று சென்னை வண்ணாரப்பேட்டை நடந்த அமைதி போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனகளை பதிவு செய்து வருகின்றனர்.

காவல்துறையின் கைது நடவடிக்கை, தடியடி போன்றவைகள் அசாதரான சூழ்நிலைகளை உருவாகியதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். எதிர்ப்பாளர்களின் செயல் முறைகள் தான் வன்முறைக்கு காரணம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்ட முதியவர் ஒருவர் மரணம் அடைந்ததாக கூறப்படும் தகவல் சென்னை போலிஸ் சுத்தமாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்,”  இந்த 70 வயது முதியவர் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தால் தான் இறந்தார் என்று தவறுதலாக, வேண்டுமென்றே பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள். இந்த பெரியவர் இயற்கையான மரணம் அடைந்தார். காவல்துறையினரின் நடவடிக்கையால் யாரும் இறக்கவில்லை, கவனம் தேவை. இது போன்ற பொய்யான தகவலை யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறியுள்ளது.

CAA Protest Live Updates : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம்

முன்னதாக, சென்னை வண்ணாரபேட்டை போராட்டத்தால் உயிர்நீத்த போராளியின் மறுமை வாழ்விற்காக துஆ செய்வோம் என்ற செய்தி சமூக ஊடங்களில் பரப்பப்பட்டு வந்தது.

 

பாரம்பரியத்தை காக்க வேண்டும் :

செய்தியாளர்களிடம் பேசிய சென்னை போலிஸ் ஆணையாளர், தமிழகம் சட்டம்-ஒழுங்கை கடைபிடிக்கும் அமைதியான மாநிலம், அந்த பாரம்பரியத்தை அனைவரும் காக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai caa protest dont spread fake news chennai city police

Next Story
பெங்களூரில் இருந்து மைசூரை அடைய 45 நிமிடங்கள் மட்டுமே! புதிய திட்டத்தின் பலன்கள் இதோ!Mysuru-Chennai high speed rail corridor gets off the blocks
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com