New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/08/Monsoon.jpg)
சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
Chennai Tamil News: தமிழகத்தில் அடுத்த வார இறுதியில் இருந்து மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், அதுவரை வறண்ட வெப்பமான வானிலை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
Chennai Tamil News: தமிழகத்தில் அடுத்த வார இறுதியில் இருந்து மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், அதுவரை வறண்ட வெப்பமான வானிலை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நிலவும் வலுவான வறண்ட மேற்குக் காற்றிற்கு இதுவே காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், இனிவரும் சில நாட்களுக்கும் இந்த நிலை நீடிக்கும் என்று குறிப்பிடுகின்றனர். அடுத்த வார இறுதியில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு, அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என கணித்துள்ளது. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளனர்.
திங்கள்கிழமை முதல், நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் ஆகிய இரண்டு பகுதிகளிலும் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருகிறது. வெள்ளிக்கிழமை, வானிலை நிலையத்திலும் 36.5 டிகிரி செல்சியஸ் பதிவானது, அங்கு இயல்பை விட 2.1 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது என்று கூறுகின்றனர்.
"வட வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மேற்கு திசையில் இருந்து காற்று வீசுவதால் சென்னை மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை வானிலை நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் ஏற்படாது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்," என்று வானிலை ஆய்வாளர் மகேஷ் பலாவத் கூறினார்.
காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் குஜராத்தை நோக்கி நகர்ந்து காற்றின் திசையில் மாற்றத்தை கொண்டு வரும் போது ஆகஸ்ட் 17 க்குள் வானிலை மாறக்கூடும் என்று பலாவத் கூறினார்.
வானிலை பதிவர் பிரதீப் ஜான் கூறுகையில், ஆகஸ்ட் 20 அல்லது 21 ஆம் தேதிக்குள் சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.