தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை இரவு முதல் திடீரென கனமழை பெய்து வருகிறது. இந்த மழை அடுத்த இரண்டு நாள்களுக்கு தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடயே, வரும் நவம்பர் 22-ஆம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடகரையோர மாவட்டங்களில் பருவமழை தீவிரமடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நவம்பர் 22 முதக் 28 வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்தமிழகம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உருவான சூறாவளி சுழற்சியானது, தற்போது மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய இலங்கைக் கடற்கரையில் அமைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 18 மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“