ஃபார்முலா போர் கார் பந்தயம் சென்னையில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் இன்று முக்கிய நிகழ்விகள் நடைபெற உள்ளது.
இன்றும் நாளையும் இந்தியாவில் முதல் இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயத்தை த்மிழக அரசு நடத்த உள்ளது. இதன் மூலம் தெற்காசியாவிலேயே இரவு ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாக சென்னை உள்ளது. தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு ஆகியவற்றில் இந்த சர்க்யூட் அமைந்துள்ளது.
பந்தயம் நடைபெறும் தீவுத்திடலை சுற்றியுள்ள சாலைகளில் எஃப்ஐஏ எனும் சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பினர் காலை 11 மணியளவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். ஒரு மணி நேர ஆய்விற்கு பிறகு அந்த கூட்டமைப்பு சார்பில் தரச்சான்றிதழ் மற்றும் அனுமதி வழங்கப்படும்.
அதன்பின்பு பந்தய சாலை எப்படி உள்ளது என்பதை ரேஸர்கள் தெரிந்துகொள்ள நண்பகல் 12 மணி முதல் 12.30 வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பயிற்சி ரேஸ் மதியம் 1.45 தொடங்கிறது. முதலில் இந்திய ரேஸிங் லீக் ரேஸர்கள் பயிற்சி மேற்கொள்கின்றனர்.
முதல் நாளில் முக்கிய நிகழ்வான ஃபார்முலா 4 பந்தயத்திற்கான தகுதிச் சுற்று இரவு 7.40 முதல் 7.50 வரை என 10 நிமிடங்கள் நடக்கிறது. இரவு 7.55 முதல் 8.05 வரை இரண்டாவது தகுதிச் சுற்று நடைபெறும்.