சென்னை சென்ட்ரல் – கோவை இடையே வந்தே பாரத் ஸ்பெஷல் ரயில் இயக்கப்பட உள்ளது.
வந்தே பாரத் ஸ்பெஷல் ரயில் கடந்த சில மாதங்களாக இயக்கப்பட்டு வருகிறது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டெல்லி டூ பாட்னா ஜங்சன், சென்னை எழும்பூர் முதல் திருநெல்வேலி வரை, ஹவுரா முதல் ஜல்பைகுரி வரை இயக்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை சென்ட்ரல் – கோவை வரை செல்லும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. 06035 இந்த ரயில் எண் சென்னை செண்ட்ரல் – கோவை வரைச் செல்லும். 06036 இந்த ரயில் எண் கோவை – சென்னை வரை செல்லும்.
இந்த ரயில் 497 கி.மீ தூரத்தை 7 மணி நேரம் மற்றும் 5 நிமிடங்களில் கடந்து செல்லும். இது வாரத்தில் செவ்வாய் கிழமைகளில் மட்டுமே இயக்கப்படும். இந்த 5 முக்கிய நிறுத்தங்களில் நின்று செல்லும். காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடி, திருப்பூர், உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அடுத்த வருடம் ஜனவரி 30ம் தேதி வரை இந்த ரயில் செயல்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“