சட்டவிரோத குடிநீர் நிறுவனங்கள் விவகாரம் - கலெக்டர்களுக்கு அபராதம் : உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
Chennai high court : சட்டவிரோதமாக செயல்படக்கூடிய குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட கலெக்டர்களுக்கு பெரும் தொகையை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சட்டவிரோதமாக செயல்படக்கூடிய குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட கலெக்டர்களுக்கு பெரும் தொகையை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சென்னையில் நிலத்தடி நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி புழலைச் சேர்ந்த சிவமுத்து என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு, தமிழகத்தில் உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக செயல்படும் தண்ணீர் உற்பத்தி நிறுவனங்களை மூடி, அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக 200-க்கும் மேற்பட்ட குடிநீர் நிறுவனங்கள், நிலத்தடி நீரை உறிஞ்சி வருவதாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து, சட்டவிரோதமாக செயல்படக்கூடிய குடிநீர் நிறுவனங்களை மூட பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாமல் நிறுவனங்களின் பட்டியலை மட்டும் அரசு தாக்கல் செய்துள்ளதாகவும், தண்ணீரின் அருமை அதிகாரிகளுக்கு தெரியவில்லை என்றும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சட்டவிரோத நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, பிப்ரவரி 26 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும் எனவும் எச்சரித்து, விசாரணையை பிப்ரவரி 26 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
நான் ஒரு பெரிய எழுத்து சோம்பேறி என்று பாலு மகேந்திரா கூறுவார்- கதைசொல்லி பவா செல்லதுரை...