சென்னை மெரினாவில் போக்குவரத்து இடையூறு இல்லாமல் கண்காணிப்பு - காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
Chennai high court : சென்னை மெரினாவில், கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையில் 24 மணி நேரமும் போக்குவரத்து இடையூறு இல்லாமல் கண்காணிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
chennai chennai high court, light house, pattinappakkam, traffic control, chennai corportation, chennai police commissioner, loop road, judges, february
சென்னை மெரினாவில், கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையில் 24 மணி நேரமும் போக்குவரத்து இடையூறு இல்லாமல் கண்காணிக்கும்படி சென்னை மாநகராட்சிக்கும், மாநகர காவல் துறைக்கும் அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணைக்காக பிப்ரவரி 21ம் தேி நேரில் ஆஜராகும்படி, சென்னை மாநகராட்சி ஆணையருக்கும், மாநகர காவல் ஆணையர், போக்குவரத்து காவல் இணை ஆணையருக்கும் உத்தரவிட்டுள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தை தொகையை அதிகரித்து வழங்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்துவது, லூப் சாலையில் மீன் விற்பனையை ஒழுங்குபடுத்துவது குறித்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.
நான் ஒரு பெரிய எழுத்து சோம்பேறி என்று பாலு மகேந்திரா கூறுவார்- கதைசொல்லி பவா செல்லதுரை...
இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மெரினா கடற்கரையில் கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை நடைபாதை அமைப்பதுதொடர்பாக, கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், லூப் சாலையில் புதிதாக கட்டப்பட உள்ள மீன் அங்காடியின் கட்டுமானப் பணிகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர். மேலும், லூப் சாலையில் மாலை 3 மணிக்கு மேல் மீன் விற்பனை நடப்பதால் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள், அப்பகுதியில் 24 மணி நேரமும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருப்பதை கண்காணிக்கும்படி, சென்னை மாநகராட்சிக்கும், மாநகர காவல் துறைக்கும் உத்தரவிட்டனர்.
இதுசம்பந்தமாக, சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகர காவல் ஆணையர், போக்குவரத்து காவல் இணை ஆணையர் ஆகியோரை பிப்ரவரி 21ம் தேதி நேரில் ஆஜராகும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.