குழந்தைகள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்ததோடு இல்லாமல், கல்லூரி மாணவி ஒருவருக்கு காட்டியது தொடர்பாக, சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த 72 வயது முதியவர் மோகன் என்பவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
”குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள், வீடியோக்களை பார்ப்பது சட்டப்படி குற்றம். ஆபாச படம், வீடியோக்களை, மொபைல் போன், லேப்டாப்களில் வைத்திருப்பதும், அது சம்பந்தப்பட்ட லிங்க்குகளை பதிவிறக்கம் செய்வதும் சட்டப்படி குற்றம். இப்படி செய்பவர்களுக்கு 3 முதல் 7 வருஷம் வரை இவர்களுக்கு ஜெயில் தண்டனை கிடைக்கும்” என்று காவல்துறை ஏற்கனவே எச்சரித்திருந்தது.
திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ், இந்த குழந்தைகள் ஆபாச வீடியோ தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த 72 வயது முதியவர் மோகனை, சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தைகள் ஆபாச வீடியோ தொடர்பாக, சென்னையில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகள் ஆபாச வீடியோ : இந்தியாவில் முதன்முறையாக திருச்சியில் போக்ஸோ சட்டத்தில் ஒருவர் கைது
மோகன், குழந்தைகள் ஆபாச வீடியோவை தான் பார்த்ததோடு மட்டுமல்லாது, வீட்டுக்கு வந்த வந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு ஐ-பேடில் குழந்தை ஆபாச வீடியோக்களை காட்டி உள்ளார்.. அந்த வீடியோக்களை பார்க்குமாறும் கட்டாயப்படுத்தி உள்ளார். இதனால் எரிச்சலும் ஆத்திரமும் அடைந்த அந்த மாணவி, போலீசில் புகார் தரவும்தான் மோகன் கைதாகி உள்ளார். கைது செய்யப்பட்ட மோகன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்டர்நெட் மையங்களில் சோதனை : சென்னையில் குழந்தைகள் ஆபாச படம் தொடர்பாக 30 பேரின் ஐ.பி., முகவரிகளை கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் சோதனையிட்டனர். மேலும், இன்டர்நெட் மையங்களில் சோதனை மேற்கொண்ட போலீசார், சிறார் ஆபாச படங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்தனர்.