ஆயிரத்து 189 சதுர கிமீ பரப்பு கொண்ட சென்னை பெருநகர வளர்ச்சி குழும எல்லையை, 8 ஆயிரத்து 878 சதுர கிமீ என 8 மடங்காக விரிவுப்படுத்தி கடந்த ஜனவரி 22 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணைக்கு தடை விதிக்க கோரி அண்ணா பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் சுப்ரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, புதிய அரசாணைப்படி, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.ஏற்கனவே, சிஎம்டிஏ அதிகாரிகள் பணிச்சுமையால் தவித்து வரும் நிலையில் எல்லைகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதால் கூடுதல் பணிச்சுமை ஏற்படும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. எல்லைகளை விரிவுபடுத்துவது பற்றி சென்னை மாநகர மக்களின் கருத்துகள் கேட்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் மனுவுக்கு வரும் 19 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி வீட்டுவசதி துறை செயலாளர், சிஎம்டிஏ உறுப்பினர் செயலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Chennai city extension case at high court