Chennai News Live Updates: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடலுக்கு இறுதி அஞ்சலி: மு.க.ஸ்டாலின் உத்தரவு

Tamilnadu News Live Updates (July 05): இன்றைய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamilnadu News Live Updates (July 05): இன்றைய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
stalin

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Jul 05, 2025 17:58 IST

    ஹாலிவுட்டில் களமிறங்கும் கோலிவுட் கிங் அஜித்?

    ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ், F1 படங்களின் அடுத்த பாகங்களில் நடிக்க விரும்பும் அஜித். அழைப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன்'' - நடிகர் அஜித் குமார்.  பிரான்சில் நடந்து வரும் கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ள அஜித்குமார் ரேசிங் அணி



  • Jul 05, 2025 17:56 IST

    பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடலுக்கு இறுதி அஞ்சலி: மு.க.ஸ்டாலின் உத்தரவு

    வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்திய பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், 100க்கும் மேற்பட்ட கவிதை நூல்கள் உள்ளிட்ட படைப்புகளைத் தந்த வா.மு.சேதுராமன், கலைமாமணி, திருவள்ளுவர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் வா.மு.சேதுராமனுக்கு தமிழ்நாடு அரசு காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்திட முதல்வர் உத்தரவு



  • Advertisment
  • Jul 05, 2025 17:14 IST

    தேர்தல் நிதிக்காக அம்பானியின் கடன் தள்ளுபடி - மாணிக்கம் தாகூர் எம்பி புகார்

    தேர்தல் நிதி பெறவே அம்பானியின் கடன் ரூ.48.545 கோடி தள்ளுபடி செய்ததாக மாணிக்கம் தாகூர் எம்.பி புகார் தெரிவித்துள்ளார். விருதுநகரில் ரூ.50 லட்சத்தில் சமூதாய கூடத்தை திறந்து வைத்து மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசியுள்ளார். 



  • Jul 05, 2025 16:44 IST

    மோடியின் சகோதரர் கைது - இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்றிய அமெரிக்கா

    அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு சமர்ப்பித்த நாடுகடத்தல் கோரிக்கைகளின் அடிப்படையில், தப்பியோடிய வைர வியாபாரி நிரவ் மோடியின் தம்பி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

    46 வயதான நேஹல் மோடி வெள்ளிக்கிழமை காவலில் எடுக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளனர். அவர்  நீதிமன்றத்தில் ஜூலை 17 ஆம் தேதி ஆஜராவார். அங்கு அவர் ஜாமீன் கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த நடவடிக்கையை அமெரிக்க வழக்கறிஞர்கள் எதிர்ப்பார்கள். 

    நாடுகடத்தல் கோரிக்கை இரண்டு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையது,  பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA), 2002 இன் பிரிவு 3 இன் கீழ் பணமோசடி குற்றச்சாட்டு, மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 120-B (குற்றவியல் சதி) மற்றும் 201 (ஆதாரங்களை மறைத்தல்) இன் கீழ் குற்றவியல் சதி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 

     



  • Advertisment
    Advertisements
  • Jul 05, 2025 16:37 IST

    பெட்ரோல், டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி  கவிழ்ந்து விபத்து

    சென்னை குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர் அருகே பெட்ரோல், டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4000 லிட்டர் பெட்ரோல், 8,000 லிட்டர் டீசல் சாலையில் வழிந்தோடுகிறது. தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்



  • Jul 05, 2025 16:18 IST

     'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் - ஜூலை 15ல் தொடக்கம்

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை ஜூலை 15ம் தேதி சிதம்பரத்தில் தொடங்கி வைக்கிறார் இத்திட்டத்தின் கீழ் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. கடைக்கோடி மக்களுக்கும் அரசுத் துறை திட்டங்கள் அவர்கள் வசிக்குமிடத்திற்கே சென்று வழங்குவது இத்திட்டம். 

    மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். உங்களுடன் ஸ்டாலின் முகாம்களுக்கு வரும் மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை முகாம்களும் நடத்தப்படும். உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முகாம் பணிக்காக சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.



  • Jul 05, 2025 16:16 IST

    சூழ்ச்சி செய்து நம்மை பிரித்தாளுகின்றனர் - அன்புமணி பேச்சு 

    ”சூழ்ச்சி செய்து நம்மை பிரித்தாளுகின்றனர், நமக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும்” என்று திருவள்ளூரில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். 

     

     

     



  • Jul 05, 2025 15:52 IST

    20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில்

    கருத்து வேறுபாட்டால் சிவசேனாவில் இருந்து 2005ம் ஆண்டு ராஜ் தாக்கரே பிரிந்து சென்ற நிலையில், ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரேவுடன் ஒரே மேடையை பகிர்ந்து கொண்டார்.



  • Jul 05, 2025 15:18 IST

    வேண்டுமென்றே மராத்தி பேசாவிட்டால் காதுகளுக்குக் கீழ் அடியுங்கள் - ராஜ் தாக்கரே

    "வேண்டுமென்றே மராத்தி பேசாவிட்டால் காதுகளுக்குக் கீழ் அடியுங்கள். நீங்கள் ஒருவரை அடித்தால் அந்த சம்பவத்தை வீடியோ எடுக்காதீர்கள். நீங்கள் அடித்ததை வெளியில் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். குஜராத்தி (அ) வேறு யாராக இருந்தாலும் மகாராஷ்டிராவில் மராத்தி பேச வேண்டும்'' என்று மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார். 

     



  • Jul 05, 2025 14:36 IST

    மணல் கொள்ளை: பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தர ஐகோர்ட் கிளை ஆணை

    பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கிய பேராசிரியை நிகிதா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவி.செழியன் தெரிவித்துள்ளார். திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மீது திருட்டு புகார் கொடுத்தவர் பேராசிரியை நிகிதா. திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரி தாவரவியல் துறை தலைவராக நிகிதா உள்ளார். 6 மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தவர் நிகிதா.



  • Jul 05, 2025 14:36 IST

    பேராசிரியை நிகிதா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் கோவி.செழியன்

    பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கிய பேராசிரியை நிகிதா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவி.செழியன் தெரிவித்துள்ளார். திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மீது திருட்டு புகார் கொடுத்தவர் பேராசிரியை நிகிதா. திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரி தாவரவியல் துறை தலைவராக நிகிதா உள்ளார். 6 மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தவர் நிகிதா.



  • Jul 05, 2025 14:05 IST

    மூத்த தமிழறிஞர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரங்கல்

    மூத்த தமிழறிஞர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. தமிழ் மொழி வளர்ச்சிக்காகவே தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்தவர் வா.மு.சேதுராமன் என தெரிவித்தார்.



  • Jul 05, 2025 14:02 IST

    அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பதவி உயர்வுக்கான பட்டியலை தயாரித்து நியமிக்க வேண்டும்: ஐகோர்ட்

    அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பதவி உயர்வுக்கான பட்டியலை தயாரித்து நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு 4 வாரங்கள் கெடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 14 அரசு மருத்துவ கல்லூரி முதல்வர்கள் நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



  • Jul 05, 2025 13:04 IST

    எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார பயணத்துக்கு எனக்கு இதுவரை அழைப்பு வரவில்லை: டிடிவி தினகரன் பேட்டி

    எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார பயணத்துக்கு எனக்கு இதுவரை அழைப்பு வரவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார பயணத்தில் கலந்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு தினகரன் பதில் தெரிவித்தார்.



  • Jul 05, 2025 12:59 IST

    ஸ்ரீகாந்த், கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

    போதைப் பொருள் வழக்கில் ஜாமின் கோரி நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு.



  • Jul 05, 2025 12:54 IST

    ஏர் இந்தியா விமானத்தில் பைலட் மயக்கம்

    கெம்பகவுடா விமான நிலையத்தில் டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்படவிருந்த போது பைலட்டுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மயக்கம். மற்றொரு பைலட் மாற்றி நியமிக்கப்பட்ட நிலையில் விமானம் தாமதமாக டெல்லி புறப்பட்டு சென்றது



  • Jul 05, 2025 12:49 IST

    ராஜ் தாக்கரே கருத்து

    இந்தி பேசாத மாநிலங்கள் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளன

    -ராஜ் தாக்கரே, எம்.என்.எஸ் தலைவர், மகாராஷ்டிரா



  • Jul 05, 2025 12:12 IST

    நான் தான் முதலமைச்சர் வேட்பாளர்: இபிஎஸ்

    வீடியோ: சன் நியூஸ்



  • Jul 05, 2025 12:11 IST

    ஓரணியில் தமிழ்நாடு - திமுகவின் பலவீனத்தைக் காட்டுகிறது- இபிஎஸ்

    "கோவை மேட்டுப்பாளையத்தில் 7ம் தேதி முதல் சுற்றுப்பயணம்; திமுக ஆட்சியை அகற்றவே சுற்றுப்பயணம் செல்கிறேன். தமிழ்நாட்டு மக்களின் குரலாகவே அதிமுக இருந்து வருகிறது,என் தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு மிகப்பெரிய நோக்கம் உண்டு. பிரச்சார பயணத்தில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு, பலமான கூட்டணி அமைக்கப்படும்


    ஓரணியில் தமிழ்நாடு - திமுகவின் பலவீனத்தைக் காட்டுகிறது"


    - எடப்பாடி பழனிசாமி



  • Jul 05, 2025 12:10 IST

    புதிய பாமக தலைமை நிர்வாகக் குழுவுடன் ராமதாஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

    பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், பாமகவில் நியமிக்கப்பட்ட புதிய தலைமை நிர்வாகக் குழு ஆலோசனை கூட்டம்

    அன்புமணி, திலகபாமா, பாலு, வெங்கடேஸ்வரன், வடிவேல் ராவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்த குழு கலைக்கப்பட்டது. புதிதாக சேர்க்கப்பட்ட நிர்வாகிகள் அடங்கிய பாமக தலைமை நிர்வாகக் குழுவுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை



  • Jul 05, 2025 11:45 IST

    உச்சநீதிமன்ற பணியாளர்கள் நியமனம்: ஓபிசி இடஒதுக்கீடு

    உச்சநீதிமன்ற பணியாளர்கள் நியமனத்தில் ஓபிசி இடஒதுக்கீடு முதன்முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பட்டியலின பழங்குடியினருக்கான (SC/ST) இட ஒதுக்கீடுகளைத தொடர்ந்து ஓபிசி இடஒதுக்கீடு அறிவிப்பு
    மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், சுதந்திரப் போராட்ட வீரர்கள் பிரிவிலும் இடஒதுக்கீடு



  • Jul 05, 2025 11:14 IST

    த.வெ.க-வின் சிறப்பு ஆலோசகர் தற்காலிக ஓய்வு

    த.வெ.கவின் சிறப்பு ஆலோசகராக செயல்படுவதில் இருந்து தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சிறிது காலம் ஓய்வு

    பீகார் சட்டமன்றத் தேர்தல் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறேன் நவம்பர் மாதத்திற்குப் பிறகு விஜய்யின் சிறப்பு ஆலோசகராக செயல்படுவது  குறித்து முடிவெடுப்பேன்- பிரசாந்த் கிஷோர்



  • Jul 05, 2025 11:09 IST

    எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்!

    Video: Sun News



  • Jul 05, 2025 11:09 IST

    மாணவர்கள் தவிப்பு

    நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி 21 நாட்கள்‌ கடந்தும், புதுச்சேரியில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பம் வழங்காததால் மாணவர்கள் தவிப்பு.


    பொறியியல் படிப்பிற்கு இன்னும் கலந்தாய்வு தொடங்காத நிலையில், தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சென்டாக் மாணவர், பெற்றோர் சங்கம் வலியுறுத்தல்.



  • Jul 05, 2025 11:07 IST

    ஜி.கே.மணி வேதனை

    Video: Sun News 



  • Jul 05, 2025 10:21 IST

    கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் - நடவடிக்கை

    மலப்புரம் மற்றும் பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழக்கமான பரிசோதனையின்போது 2 பேருக்கு நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டன. இதையடுத்து இவர்களின் ரத்த மாதிரிகள் உடனடியாக புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த வைரஸ் தொடர்பாக மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 



  • Jul 05, 2025 10:20 IST

    ஆம்ஸ்ட்ராங் நினைவு பேரணி - 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

    ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. நினைவு பேரணி நடந்து வருகிறது. இந்த பேரணியில் 1000-க்கும் மேற்பட்டோர் கழந்துகொண்டனர். முன்னெச்சரிக்கையாக சென்னை முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரமாக்கியுள்ளனர்.



  • Jul 05, 2025 10:06 IST

    சேதுராமனின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

    பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை விருகம்பாக்கம் சின்மயா நகரில் உள்ள பெருங்கவிக்கோ தமிழ்க்கோட்டம் அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.



  • Jul 05, 2025 09:34 IST

    நிகிதாவை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் - சீமான்

    கடலூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது 8-ந்தேதி காலையில் அம்மாவை போய் பார்த்துவிட்டு எங்கள் போராட்டம் தொடரும். அரசே ரூ.5 லட்சம் தான் கொடுக்கிறது. கள்ளச்சாராயம் குடித்து செத்தால் ரூ.10 லட்சம் கொடுக்கிறது. காவலர்கள் அடித்து செத்தால் ரூ.5 லட்சம்தான் கொடுக்கிறது. எளிய மகன் நானே எங்கள் அம்மாவுக்கு ரூ.5 லட்சம் கொடுக்கிறேன். என்னது இது, அவ்வளவுதான் உயிருக்கு மதிப்பா? நிகிதா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், கைது செய்ய வேண்டும். அதுவரை தொடர்ந்து போராடுவேன். இன்னும் 3 நாட்கள் இருக்கிறது என்றார்.



  • Jul 05, 2025 09:24 IST

    அமெரிக்கா: தொடர் மழை, வெள்ளத்திற்கு 13 பேர் பலி

    அமெரிக்காவின் தெற்கு-மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. குவாடலூப் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, நகரங்களுக்குள் புகுந்தது. இதில் பலர் சிக்கி கொண்டனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 13 பேர் வரை பலியானார்கள். இந்நிலையில், 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கோடை கால முகாமுக்கு சென்றுள்ளனர். அவர்களில், 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.



  • Jul 05, 2025 09:14 IST

    ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

    பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



  • Jul 05, 2025 08:47 IST

    இந்தியா-டிரினிடாட்&டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

    பிரதமர் மோடி மற்றும் டிரினிடாட் அண்டு டுபாகோ பிரதமர் கம்லா பெர்சாத்-பிஸ்ஸேசர் இருவரும் சந்தித்து பேசி கொண்டனர். இதன்பின்னர், பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய, தி ஆர்டர் ஆப் தி ரிபப்ளிக் ஆப் டிரினிடாட் அண்டு டுபாகோ என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அவர்கள் இருவரின் தலைமையில் இரு நாடுகளின் உயர்மட்ட குழுவினர் தலைமையிலான பேச்சுவார்த்தை நடந்தது. இதன் முடிவில், இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன.



  • Jul 05, 2025 08:46 IST

    அமெரிக்காவுக்கு பதிலடி வரி: இந்தியா திட்டவட்டம்

    அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், அதன் உதிரி பாகங்கள் மீது பதிலடி வரி விதிக்கவுள்ளதாக உலக வர்த்தக அமைப்பில் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பரஸ்பர வரிக்கு பதிலடியாக, WTO-வின் விதிகளுக்கு உட்பட்டு இந்தியா ரூ. 6,200 கோடி வரி விதித்துள்ளது.



  • Jul 05, 2025 08:34 IST

    கைதி தப்பியோடிய விவகாரத்தில் 2 காவலர்கள் சஸ்பெண்ட்

    மதுரையில் கைதி தப்பியோடிய விவகாரத்தில் 2 காவலர்களை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்காக ஆஜர்ப்படுத்திய பின்னர் மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு அரசுப்பேருந்தில் அழைத்து வந்த நிலையில் பகவதிராஜா தப்பியோடினார். இந்நிலையில் காவலர்கள் சரவணக்குமார், பாலமுருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.



  • Jul 05, 2025 08:16 IST

    கச்சத்தீவை விட்டுத் தர முடியாது: இலங்கை அமைச்சர்

    கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத் தர முடியாது என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜிதா ஹெராத் தெரிவித்துள்ளார். இப்பிரச்னையை தூதரக ரீதியாக தீர்வு காண இலங்கை தயாராக உள்ளது. இந்தியாவில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அரசியல் காரணங்களுக்காகவே கச்சத்தீவு விவகாரத்தை எழுப்புவதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.



  • Jul 05, 2025 08:15 IST

    2வது ஒருநாள் போட்டி: இலங்கை-வங்காளதேசம் அணிகள் மோதல்

    வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என இலங்கை கைப்பற்றியது. தொடர்ந்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் முதல் ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இலங்கை கடுமையாக போராடும். அதேவேளையில் தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வங்காளதேசம் முனைப்பு காட்டும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.



  • Jul 05, 2025 08:12 IST

    திருச்செந்தூர் குடமுழுக்கு: சிறப்பு ரயில் இயக்கம்

    திருச்செந்தூர் குடமுழுக்கை ஒட்டி சென்னையில் இருந்து நெல்லை வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. நாளை (ஜூலை 06) இரவு 9.55-க்கு சென்னை எழும்பூரில் இருந்து ரயில் புறப்படும். மறுமார்க்கத்தில் நாளை மறுநாள் (ஜூலை 07) இரவு 9.40 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு ரயில் கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Jul 05, 2025 08:08 IST

    உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் அடிதடி

    உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் இரு தரப்பினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பலரும் கடும் அவதி அடைந்தனர். இதனால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முதற்கட்ட தகவலாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இரு தரப்பினர் இடையே ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். 



  • Jul 05, 2025 07:54 IST

    பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 10-ஆக உயர்வு

    சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் கடந்த ஒன்றாம் தேதி நடந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



  • Jul 05, 2025 07:54 IST

    ராணிப்பேட்டை பள்ளிகளுக்கு ஜூலை 7-ம் தேதி விடுமுறை

    ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 7ஆம் தேதி (திங்கட்கிழமை ) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார். அதனை ஈடுசெய்யும் பொருட்டு 19-07-2025 (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவித்தும் ஆணையிட்டுள்ளார்.



  • Jul 05, 2025 07:25 IST

    ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்த நபர் கைது

    சென்னை சூளைமேட்டில் போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பயாஸ் அகமது என்பவர், நடிகர்கள் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்த பிரதீப்குமாரிடம் நடத்திய விசாரணையில், பயாஸ் அகமதுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இருவருக்கும் இடையே போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் whatsapp உரையாடல்கள் செல்போன் உரையாடல்கள் பண பரிவர்த்தனைகள் ஆகியவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Jul 05, 2025 07:23 IST

    மாணவனை தாக்கிய போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

    சென்னை துரைப்பாக்கத்தில் சில மாதங்களுக்கு முன், மதுபோதையில் ரகலையில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை போலீசார் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மாணவரை தாக்கிய நுண்ணறிவு பிரிவு போலீசார் ஹரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



  • Jul 05, 2025 07:21 IST

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

    தற்போதைய நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 50,000 கனஅடியாக மேலும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துவரும் நிலையில், தீவிர பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றுப் பகுதியில் குளிக்கவும் பரிசல் சவாரி மேற்கொள்ளவும் விதிக்கப்பட்ட தடை 11-வது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது.



  • Jul 05, 2025 07:18 IST

    உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா

    போர் தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவில் ரஷியா அதிகப்படியான டிரோன் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளதாக உக்ரைன் நேற்று அறிவித்துள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது நீண்ட தூர ஏவுகணை தாக்குதல்களை ரஷியா முடுக்கிவிட்டிருக்கிறது. முக்கியமாக கீவ் நகரில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாமல் தாக்குதல் நடந்தது. வானில் ஏவுகணை, டிரோன் குண்டுவெடிப்புகள் ஒளிர்ந்தபடி இருந்தன. இரவு முழுவதும் 550 டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக உக்ரைன் கூறி உள்ளது. இதில் 23 பேர் காயம் அடைந்ததாக அறிவித்துள்ளனர்.



  • Jul 05, 2025 07:16 IST

    மதுரை விமான நிலையத்தில் 104°F வெயில் கொளுத்தியது

    தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. மதுரை நகரம் 103, தூத்துக்குடி 101, பாளையங்கோட்டையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.



  • Jul 05, 2025 07:16 IST

    கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் இளைஞர் மீது தாக்குதல்

    கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகில் உள்ள கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் கொடுத்த தனது புகார் தொடர்பாக முறையிட சென்ற போது இளைஞரை போலீசார்கள் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல் நிலையத்தில் இளைஞரை தாக்கப்பட்ட விவகாரத்தில் காவலர் மணிகண்டன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கள்ளக்குறிச்சி எஸ்பி நடவடிக்கை மேற்கொண்டார்.



  • Jul 05, 2025 07:15 IST

    9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு

    தமிழ்நாட்டில் 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறை ஆணையராக வ.கலை அரசி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநராக ஜான் லூயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.



  • Jul 05, 2025 07:15 IST

    மேட்டூர் அணை நீர் வெளியேற்றம் 40,000 கனஅடியாக அதிகரிப்பு

    மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 30,000 கனஅடியில் இருந்து 40,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்கு 22,500 கனஅடியும், 16 கண் மதகு வழியாக 17,500 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.



  • Jul 05, 2025 07:14 IST

    ராமதாஸ் தலைமையில் இன்று பா.ம.க. நிர்வாகிகள் கூட்டம்

    திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. ராமதாஸ்-அன்புமணி இடையேயான மோதல் முற்றி வரும் நிலையில், நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் ராமதாஸ்.



Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: