ஒரே ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் போதும்… உங்கள் குறைதீர்க்க சென்னை மாநகராட்சி தயார்!

Chennai Corporation launches new WhatsApp number tamil news: சென்னை பெருநகரில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு தகவல்களை பெறுவதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி (கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன்) வாட்ஸ்அப் உதவி எண் அறிமுகம் செய்துள்ளது.

Chennai city news in tamil Chennai Corporation launches new WhatsApp number to address people problem
Chennai city news in tamil Chennai Corporation launches new WhatsApp number to address people problem

Chennai city news in tamil: சென்னை பெருநகரில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு தகவல்களை பெறுவதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி (கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன்) வாட்ஸ்அப் உதவி எண் அறிமுகம் செய்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்ட இந்த எண்ணின் (94999 33644) மூலம் சென்னை பெருநகரில் வசிக்கும் பொதுமக்கள் சென்னை மாநகராட்சியில் தேவைப்படும் உதவிகளை கோரலாம். இந்த எண்ணிற்கு ‘ஹாய்’ என்ற குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் நீங்கள் கோர உள்ள உதவிகளை உள்ளீடு செய்து கொள்ளலாம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உங்களது உதவிகளை கோரலாம் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

“‘வாட்ஸ்அப் சிட்டிசன் சர்வீசஸ்’ என்கிற புதிய முயற்சியை பெருநகர சென்னை மாநகராட்சியில் துவங்கியுள்ளோம். இந்த (94999 33644) எண்ணை பயன்படுத்தி உங்கள் குறைகளை எளிதில் தெரிவிக்கலாம்”என்று வருவாய் துணை ஆணையர் மேகநாத் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த வாட்ஸ்அப் எண் வழியாக பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். அதோடு புகாரின் நிலை, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் 2021 பற்றிய தகவல்கள், ஆன்லைன் சேவைகளான பிறப்பு / இறப்பு சான்றிதழ், சொத்து வரி செலுத்துதல், தொழில்முறை வரி செலுத்துதல் மற்றும் வர்த்தக உரிமம் புதுப்பித்தல் போன்ற விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். ஒருவர் இதில் உள்ள விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​அந்த விருப்பத்துடன் தொடர்புடைய தகவல்கள் கிடைக்கக்கூடிய வகையில் இணைப்பு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai city news in tamil chennai corporation launches new whatsapp number to address people problem

Next Story
News Highlights: முஸ்லிம் லீக், ம.ம.க.வுடன் இன்று திமுக பேச்சுவார்த்தை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com