Chennai city news in tamil: சென்னை விமான நிலையம் முதல், வண்டலூரை அடுத்து கிளம்பாக்கத்தில் அமையவுள்ள புதிய புறநகர் பேருந்து நிலையம் வரை அமைக்கப்பட உள்ள மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் இவ்வாண்டு இறுதியில் துவங்கப்பட வாய்ப்புள்ளதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகளால் சென்னை நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கென்று புதிய புறநகர் பேருந்து நிலையம், வண்டலூரை அடித்த கிளம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த புறநகர் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்து வரும் நிலையில், இந்த மாத இறுதியில் செயல்பட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் முதல், வண்டலூரை அடுத்து கிளம்பாக்த்தில் அமையவுள்ள புதிய புறநகர் பேருந்து நிலையம் வரை சுமார் 15 கிலோமீட்டரில் மெட்ரோ ரயில் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் குறித்து நேற்று தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், “விமான நிலையம் முதல் – கிளம்பாக்கம் வரை அமையவுள்ள மெட்ரோ ரயில் பாதைக்கான விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) மற்றும் வேளச்சேரி – தாம்பரம் ரயில் பாதைக்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை (டிஎஃப்ஆர்) தயராகி வருகிறது” என தெரிவித்திருந்தார். எனவே இதற்கான பணிகள் இந்த ஆண்டு இறுதியில் துவங்கப்படலம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை விமான நிலையம் முதல் – கிளம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரை சுமார் 15கி.மீ நீளத்தில் அமையும் மெட்ரோ ரயில் 13 நிலையங்களைக் இணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் குரோம்பேட்டை, தாம்பரம் வண்டலூர் போன்ற முக்கிய பகுதிகளும் அடங்கும். வேளச்சேரி முதல் – தாம்பரம் வரை இயக்கப்பட உள்ள மெட்ரோ ரயில்கள், இப்போது இயக்கப்படும் ரயில்களை விட எடை குறைவுள்ள ரயில்களாக தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த இரு மெட்ரோ ரயில் திட்டங்களும் அமைக்கப்பட்டால், புறநகரில் இருந்து நகருக்குள் பயணிக்கவிருக்கும் மக்கள் சிரமமின்றி மிக எளிதாக பயணிக்க வசதியாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil