சென்னையில் முடிவுக்கு வந்த மீன்பிடி தடை காலம்; 30% படகுகள் மட்டுமே கடலுக்குள் செல்ல வாய்ப்பு!

Fishing ban ends at Chennai Tamil News: காசிமேடு மீன்பிடித் தளத்தில் உள்ள 1,200 ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் வெறும் 350 படகுகள் மட்டுமே கடலுக்குள் செல்கின்றன.

Chennai city news in tamil: Fishing ban ends, only 30% deep-sea vessels likely to go

Chennai city news in tamil: சென்னையில் மீன்பிடித் தடை காலம் நேற்று திங்கள்கிழமையோடு முடிவடைந்துள்ள நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை முதல் மீன்பிடி படகுகள் கடலுக்குள் செல்கின்றன. இருப்பினும், 30% க்கும் அதிகமான ஆழ்கடல் படகுகள் மட்டுமே கடலுக்குள் செல்கின்றன எனவும், பெரும்பாலான படகுகள் இன்னும் பழுது செய்யப்படவில்லை எனவும் ஒரு மூத்த மீன்வளத் துறை அதிகாரி கூறியுள்ளார்.

மேலும், “காசிமேடு மீன்பிடித் துறைமுகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட 1,200 ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் 350 படகுகள் மட்டுமே கடலுக்குள் செல்கின்றன. மற்ற படகுகள் கடலுக்குள் செல்ல இன்னும் பதினைந்து நாட்கள் ஆகும்.” என அவர் கூறியுள்ளார்.

“2020ம் ஆண்டில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மீன்பிடி நடவடிக்கைகள் இல்லாததால், இந்த ஆண்டில் பெரும்பாலான மீனவர்களுக்கு பழுதுபார்க்க பணம் இல்லை. எனவே படகுகள் மீன்பிடி துறைமுகத்திலே இன்னும் சிறிது காலம் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

ஆழ்கடல் படகுகளை இயக்குபவர்களில் பெரும்பாலோர் ஆந்திரா மற்றும் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள். ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளதால், அவர்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.” என்று காசிமேடு படகு உரிமையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

“தற்போது, ​​கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக காசிமேட்டில் மொத்த மீன் வர்த்தகத்தை மட்டுமே துறை அனுமதித்துள்ளது. இப்போது, ​​மீன்பிடித் தடையை நீக்கியதன் மூலம், அங்கு சில்லறை விற்பனை தொடர்பாக தமிழக அரசு ஒருஅறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கிறோம். இது நகரின் 70% மீன் தேவையை பூர்த்தி செய்யும்

நகரின் மிகப் பெரிய மீன் சந்தையான சிந்தாதிரிபேட்டை சந்தைக்கு வரவிருக்கும் வார இறுதி முதல் மீன்களின் வருகை எப்போதும் போல் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

தவிர, தடை முடிவடைந்த ஓரிரு நாட்களில் பெரிய அளவில் மீன் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. அதிக அளவிளான மீன் பிடிக்க சில நாட்கள் ஆகும்” என்று அந்த மூத்த மீன்வளத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai city news in tamil fishing ban ends only 30 deep sea vessels likely to go

Next Story
அந்த 11 மாவட்டங்களில் குறையாத கொரோனா; சென்னையில் குறைந்த புதிய பாதிப்பு எண்ணிக்கைcoronavirus, covid cases, covid reports
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express