‘கொரோனா முதல் டோஸ் பெற்ற ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பணிக்கு திரும்பலாம்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Tamil Nadu health minister ma subramanian latest Tamil News: வருகிற செப்டம்பர் 1-ந் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணிக்குத் திரும்பலாம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Chennai city news in tamil: Teachers can return to work after taking first vaccine dose says TN Health minister

Tamil Nadu news in tamil: தமிழகத்தில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட உள்ளன. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை சைதாப்பேட்டை தொகுதியில் 109 பேருக்கு முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும்போது பணிக்குத் திரும்பலாம் எனத் தெரிவித்தார்.

மேலும், சென்னையில் உள்ள 122 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளதை உறுதி செய்யவேண்டும் என கல்லூரி முதல்வர்களிடம் சுகாதார துறை சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முகாமை தொடங்கி வைத்து பேசிய அவர், தமிழ்நாட்டில் சுமார் 90% ஆசிரியர்கள் மற்றும் 89% ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் முதல் டோஸ் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது எனவும், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றும் கூறினார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai city news in tamil teachers can return to work after taking first vaccine dose says tn health minister

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com