/indian-express-tamil/media/media_files/2025/04/03/fy8szLEYNJHR3BqIizex.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பிரதமர் வருகை - மீன்பிடிக்க தடை: பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6-ம் தேதி பிரதமர் மோடி, ராமேஸ்வரம் வருவதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைக்காக ஏப். 4 - 6ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீன்வளத் துறை சார்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நித்யானந்தா உயிரோடுதான் இருக்கிறார்: நித்யானந்தா உயிர் தியாகம் செய்து சமாதி அடைந்து விட்டதாக பரபரப்பு கிளம்பிய நிலையில், அவர் உயிரோடுதான் இருக்கிறார் என கைலாசா விளக்கமளித்துள்ளது. நித்யானந்தா ஆரோக்கியமாக உள்ளதாகவும் மார்ச் 30-ம் தேதி நடந்த உகாதி விழாவில் அவர் நேரலையில் பக்தர்களுக்கு ஆசி வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளது.
-
Apr 03, 2025 00:21 IST
லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதி
ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பீகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
Apr 02, 2025 21:10 IST
600 பேரை பணி நீக்கம் செய்த சொமேட்டோ
சொமேட்டோ நிறுவனம், அதன் நுகர்வோர் கூறும் புகார்களுக்கு தீர்வு தரும் பிரிவில் இருந்த 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. தற்போது, இப்பிரிவில் வரும் புகார்களை Nugget என்ற ஏ.ஐ செயலி மூலம் சொமேட்டோ நிறுவனம் கையாள்கிறது. இதன் மூலம் 80 சதவீத புகார்களுக்கு தீர்வு காண முடிவதாக சொமேட்டோ கூறியுள்ளது.
-
Apr 02, 2025 20:20 IST
சட்டவிரோத கட்டடங்கள் இடிக்கப்படும் - சென்னை மாநகராட்சி
சென்னை மயிலாப்பூரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட தேவாலயம் உள்ளிட்ட கட்டுமானங்கள் இடிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி நிர்வாகம் உறுதியளித்துள்ளது. மயிலாப்பூர், அபிராமபுரம் செயின்ட் மேரீஸ் சாலையில் விதிகளை மீறி கட்டுமானங்கள் கட்டப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இந்நிலையில், சட்டவிரோத கட்டுமானங்களை மூன்று மாதங்களில் அகற்ற நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Apr 02, 2025 19:30 IST
வக்ஃபு மசோதா குறித்து அமித்ஷா விளக்கம்
வக்ஃபு வாரிய மசோதா குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக, இஸ்லாமிய மத செயல்பாடுகளில் இதன் மூலம் எந்த விதமான தலையீடும் இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மசோதா குறித்து எதிர்க்கட்சி எம்.பி-க்கள் தவறான தகவல்களை பரப்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: "இஸ்லாமிய மத செயல்பாடுகளில் தலையீடு இருக்காது": வக்ஃபு மசோதா குறித்து அமித்ஷா விளக்கம்
-
Apr 02, 2025 18:29 IST
பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து தி.மு.க-வை வீழ்த்துவோம் - சைதை துரைசாமி
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி அறிக்கை: “அ.தி.மு.க-வினர் ஒன்றுபட வேண்டும். பா.ஜ.க மற்றும் தோழமைக் கட்சிகளை ஒன்றிணைத்து பலமான கூட்டணி அமைத்து தி.மு.க-வை வீழ்த்துவோம்.” என்று கூறியுள்ளார்.
-
Apr 02, 2025 17:13 IST
வருகிறது கோடை மழை: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
வருகிறது கோடை மழை: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மழை காரணமாக உள்மாவட்டங்களில் வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளது. அடுத்த 3 தினங்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Apr 02, 2025 16:25 IST
ஹோட்டலை பூட்டிவிட்டு சென்ற உரிமையாளருக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எச்சரிக்கை
சென்னை திருவல்லிக்கேணியில் பிரபல ஹோட்டலில் சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், அந்த ஹோட்டலில், சோதனைக்கு வருவது தெரிந்து உரிமையாளர் ஹோட்டலை பூட்டி விட்டு ஓடியுள்ளார். இது குறித்து பேசிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் என்னால முடிஞ்ச வரைக்கும் இந்த ஹோட்டல திறக்கவே விடமாட்டேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
Apr 02, 2025 15:39 IST
ஹோட்டலை பூட்டிய அதிகாரிகள்
சென்னை திருவல்லிக்கேணி பிலால் ஹோட்டலில் சாப்பிட்ட 18 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக வந்த புகாரையடுத்து, ஆய்வு செய்ய வந்த உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.கடை பூட்டப்பட்டிருந்த நிலையில், கடையின் உரிமையாளருக்குத் தொடர்பு கொள்ள முடியாததால் பூட்டிவிட்டுச் சென்றனர்.
-
Apr 02, 2025 15:38 IST
சீர்காழியில் புதிய தொழிற்பயிற்சி மையம்: சட்டசபையில் அமைச்சர் உறுதி
முதல்வர் ஸ்டாலினே சீர்காழி மாப்பிள்ளை தான். இப்படியிருக்கையில் சீர்காழியில் ஒரு தொழிற்பயிற்சி மையம் அமைக்காமல் இருக்கலாமா? என்று சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் சொன்னதும் புன்னகைத்த முதல்வர் ஸ்டாலின். இறுதியில் சீர்காழியில் புதிய தொழிற்பயிற்சி மையம் அமைக்கப்படும் என அமைச்சர் சி.வி.கணேசன் உறுதி அளித்தார்.
-
Apr 02, 2025 14:49 IST
தேர்வுக் கட்டணங்களை UPI மூலம் செலுத்த வசதி
TNPSC தேர்வுக்கான கட்டணங்களை UPI மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை UPI மூலம் இனி செலுத்தலாம்
-
Apr 02, 2025 14:47 IST
வக்ஃப் சட்டத் திருத்த முன்வடிவினை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின் கடிதம்.
“வக்ஃப் சட்டத் திருத்த முன்வடிவினை ழுமையாக திரும்பப் பெற வேண்டும்” என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். வக்ஃப் சட்டம் 1995ல் முன்மொழியப்பட்ட திருத்தங்கள், முஸ்லீம் சமூகத்தின் நலனுக்கு கடும் பாதிப்புகளை விளைவிப்பதாக உள்ளது -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
Apr 02, 2025 14:35 IST
மீன் உணவு விற்பனை செய்ததில் ரூ.8.79 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது - மீன்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.
தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் மூலம் 2024-25ம் ஆண்டில் பிப்ரவரி 2025 முதல் ரூ.1.04 கோடி மதிப்பில் மதிப்புக் கூட்டப்பட்ட மீன் உணவு விற்பனை செய்ததில் ரூ.8.79 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 470.60 டன் மீன்கள் விற்பனை செய்யபட்டதில் ரூ.14.60 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இணையதளம் மூலம் 9.78 டன் மீன்கள் ரூ.61.30 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மீன்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.
-
Apr 02, 2025 14:18 IST
“கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது தவறில்லை” - தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை
“கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது சரிதான்; காங்கிரஸ் ஒருபோதும் அதை தவறு என சொல்லாது; வெறும் 272 ஏக்கர் நீர் இல்லாத அந்த வானம் பார்த்த பூமியை கொடுத்துவிட்டு, பல லட்சம் ஏக்கர் நிலத்தை இந்தியாவிற்கு பெற்று கொடுத்தவர் இந்திரா காந்தி இப்போது மீனவர்கள் தங்களது உரிமை வேண்டும் என சொல்கிறார்கள்; அதற்காக அவற்றை திரும்பப் பெற வேண்டும் என்பதை ஆதரிக்கிறோம்" - தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை
-
Apr 02, 2025 13:59 IST
72 வயது முதியவரை கொடுமைப்படுத்திய இளைஞர்
ராட்வைலர் நாயை ஏவி 72 வயது முதியவரை கொடுமைப்படுத்திய இளைஞர். நாயை கயிறு கட்டாமல், வாய் பகுதியை மூடாமல் வாக்கிங் அழைத்துச் சென்ற இளைஞர். தட்டிக்கேட்க சென்றவரையும் கடித்த ராட்வைலர் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
Apr 02, 2025 13:58 IST
நேரு நினைவுகள்... ஒப்படைத்த கோபண்ணா!
10 ஆண்டுகளாக நேரு நினைவு நூலகத்தில் இருந்து தான் சேகரித்த 7,000 நேரு புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் அதற்கான குறிப்புகள் அடங்கிய பென்டிரைவை சோனியா காந்தியிடம் ஒப்படைத்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் கோபண்ணா டெல்லி ஜவஹர்லால் நேரு நினைவு மையம் தொடங்க இருக்கும் நேரு தொடர்பான இணையதளத்திற்காக இவற்றை வழங்கியுள்ளார் கோபண்ணா
-
Apr 02, 2025 13:28 IST
கச்சத்தீவு தீர்மானம் மீனவர்களை ஏமாற்றும் ஒரு நாடகம் - எடப்பாடி பழனிசாமி
மத்தியில் 16 ஆண்டுகள் ஆட்சியில் அங்கம் வகித்த போது திமுக என்ன செய்தது? அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ளதால்தான் கச்சத்தீவு தீர்மானத்தை திமுக கொண்டு வந்துள்ளது. கச்சத்தீவு தீர்மானம் மீனவர்களை ஏமாற்றும் ஒரு நாடகம் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
-
Apr 02, 2025 13:27 IST
ரூ. 1,757 கோடி இழப்பு
தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு பகிர்வுக்கான தொகையை JIO நிறுவனத்திடம் இருந்து 10 ஆண்டுகளாக BSNL வசூலிக்காததால் ஒன்றிய அரசுக்கு ரூ.1,757 கோடி இழப்பு. மே 2014 - மே 2024 வரை JIOவிடம் உள்கட்டமைப்பு பகிர்வுத் தொகை வசூலிக்கப்படவில்லை என CAG அறிக்கையில் தகவல்.
-
Apr 02, 2025 13:04 IST
4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். 7 முதல் 11 செமீ வரை மழை பொழிவிற்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது
-
Apr 02, 2025 12:43 IST
கச்சத்தீவு தீர்மானம்: அதிமுக ஆதரவு
கச்சத்தீவை மீட்கக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்துக்கு அதிமுகவினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது உணர்வுபூர்வமான பிரச்சனை; நமது உரிமையை மீட்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
Apr 02, 2025 12:26 IST
வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டது.
-
Apr 02, 2025 12:23 IST
கட்சத்தீவு தீர்மானம் - பாஜக ஆதரவு
கட்சத்தீவை மீட்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் கொண்டுவந்த தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு அளித்துள்ளது.மீனவர்கள் நலனை மத்திய அரசு பிரித்துப் பார்க்கவில்லை, கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட நாள்முதல் அது தவறென்று பாஜக கூறிவருகிறது. வரலாற்று தவறை பிரதமர் மோடியால் மட்டுமே சரிசெய்ய முடியும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
-
Apr 02, 2025 11:46 IST
பெண் கல்லால் அடித்துக் கொலை
பல்லாவரம் அருகே அனகாபுத்தூரில் விவாகரத்து ஆன பெண் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சித்தனுடன் தொடர்பில் இருந்த நிலையில், வேறொரு நபருடன் தொடர்பு வைத்ததால் கொலை என தகவல். சித்தனுடன் தொடர்பில் இருந்த நிலையில், வேறொரு நபருடன் தொடர்பு வைத்ததால் கொலை என மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Apr 02, 2025 11:44 IST
வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை
சென்னையில் வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது. வீட்டில் படித்து கொண்டிருந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற சக்திவேல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சக்திவேலை போக்சோவில் கைது செய்து அயனாவரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
-
Apr 02, 2025 11:05 IST
ஐபிஎல் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள சிஎஸ்கே - டெல்லி அணிகளுக்கு இடையேயான
ஐபிஎல் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது. டிக்கெட் பெறுவதற்கான காத்திருப்போர் பட்டியல்
3 லட்சம் வரையில் இருப்பதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஐபிஎல் டிக்கெட் விற்பனையை ஒழுங்குமுறை படுத்த வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -
Apr 02, 2025 10:59 IST
கட்சத் தீவை மீட்பதே நிரந்தத் தீர்வு - ஸ்டாலின்
கட்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களுக்கான நிரந்தத் தீர்வாக அமையும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஆட்சி மாறினாலும் தமிழக மீனவர்களின் நிலை மாறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக இது அமைந்திருக்கிறது.
-
Apr 02, 2025 09:51 IST
கோடை விடுமுறை - கூடுதல் விமானங்கள் இயக்கம்
கோடை விடுமுறையால் அதிகரிக்கும் கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளடு. பயணிகளின் வசதிக்காக 42 சர்வதேச விமானங்கள் உள்பட 206 'Summer Special' விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 02, 2025 09:08 IST
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் சந்திக்க நேரம் கேட்டு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். கூட்டு நடவடிக்கை குழுவின் தீர்மானங்களை நேரில் வழங்க பிரதமர் நேரம் வழங்க வேண்டும் என கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் விரைவாக பதிலளிப்பார் என நம்புவதாக எக்ஸ்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.
-
Apr 02, 2025 08:19 IST
ஐபிஎல்: பெங்களூரு-குஜராத் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு-குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை. 2 போட்டிகளில் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பெங்களூருவை குஜராத் எதிர்கொள்கிறது.
-
Apr 02, 2025 08:17 IST
இலங்கை சிறையில் இருந்து 13 மீனவர்கள் சென்னை திரும்பினர்
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 13 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர். தாங்கள் கொண்டுசென்ற படகுகள் அனைத்தும் வீணாகி விட்டதாகவும், வீட்டில் இருந்த நகைகள் அனைத்தையும் அடமானம் வைத்து தான் அபராதம் செலுத்தியதாகவும் மீனவர்கள் வேதனையடைந்து உள்ளனர்.
-
Apr 02, 2025 08:13 IST
ஐ.பி.எல். சென்னை-டெல்லி போட்டி டிக்கெட் இன்று விற்பனை
சென்னை-டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் இன்று காலை 10.15 மணிக்கு தொடங்க உள்ளது. www.chennaisuperkings.com என்ற தளத்தில் டிக்கெட்டுகளை பெறலாம். வரும் 5-ம் தேதி சேப்பாக்கத்தில் போட்டி நடைபெற உள்ளது.
-
Apr 02, 2025 07:16 IST
இன்று தாக்கலாகிறது வக்பு வாரிய சட்டத் திருத்தம்
பரபரப்பான சூழலில், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதன்மீது, 8 மணி நேரம் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் வக்பு மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி கட்சிகள் ஒருமனதாக முடிவெடுத்துள்ளன.
-
Apr 02, 2025 07:15 IST
கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி இன்று தீர்மானம்
கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 2) தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொண்டு வருகிறார். இலங்கைக்கு செல்லும் பிரதமர் மோடி தமிழ்நாட்டு மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை நல்லெண்ண அடிப்படையில் மீட்டு வர வேண்டும் என வலியுறுத்த உள்ளார். தமிழ்நாடு மீனவர்களின் பிரச்னையை போக்க இதுவே நிரந்தர தீர்வாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.