Chennai News Updates: தமிழகத்தில் அக். 16 -18ஆம் தேதிக்குள் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு

Chennai News Updates: செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Chennai News Updates: செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil nadu rains

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

தமிழக மீனவர்கள் 47 பேர் கைது: ராமேசுவரத்தில் இருந்து நேற்று 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1500-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்தபோது 2 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். அப்போது, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 47 மீனவர்களையும், 5விசைப்படகுகளையும் சிறைபிடித்தனர். ஒரே நாள் இரவில் 47 மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையின் அத்துமீறிய நடவடிக்கையானது, ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலம் இன்று திறப்பு: கோவையில் அவிநாசி சாலையில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கி.மீ. நீளத்துக்கு கட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவின் 3-வது பெரிய தரைவழிப்பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு இந்தப் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கின. ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டு கோவையின் புதிய அடையாளமாக திகழும் கோவை- அவினாசி ரோடு மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு கோல்டுவின்ஸ் பகுதியில் திறந்து வைக்கிறார். பின்னர் காரில் பயணித்தபடி பாலத்தை பார்வையிடுகிறார். அதன் பிறகு வாகனங்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. திறப்பு விழாவையொட்டி மேம்பாலம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

  • Oct 10, 2025 07:02 IST

    அக்டோபர் 16 -18ஆம் தேதிக்குள் வடகிழக்குப் பருவ மழை

    தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை  அக்டோபர் 16 -18ஆம் தேதிக்குள் தொடங்குவதற்கு சாத்தியமுள்ளது 

    -  சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Oct 09, 2025 22:06 IST

    ஈரானுடன் வர்த்தகம் - இந்திய தொழிலதிபர்கள் மீது அமெரிக்கா தடை!

    ஈரான்எரிசக்திதுறையுடன்வர்த்தகத்தில்ஈடுபட்டதற்காகஇந்தியதொழிலதிபர்கள் 3 பேர்மீதுதடைவிதிப்பதாகஅமெரிக்கஅரசுஅறிவித்துள்ளது. அமெரிக்காவின்பொருளாதாரதடைகளால் 2018 ஆம்ஆண்டுமுதல்ஈரானிடம்கச்சாஎண்ணெய்வாங்குவதைஇந்தியாநிறுத்தியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

     



  • Advertisment
    Advertisements
  • Oct 09, 2025 21:28 IST

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

    காசாஅமைதிஒப்பந்தம்ஏற்பட்டதற்குஅமெரிக்கஅதிபர்ட்ரம்பைதொலைபேசியில்தொடர்புகொண்டுமோடிவாழ்த்துதெரிவித்துள்ளார். ட்ரம்பின் 20 அம்சதிட்டங்களைபடிப்படியாகசெயல்படுத்தஇஸ்ரேல்மற்றும்ஹமாஸ்ஒப்புக்கொண்டுள்ளன.

     



  • Oct 09, 2025 20:48 IST

    ''தேசிய தலைவர்கள் பெயர் எதையும் வைக்கக் கூடாதா?'' - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

    பார்க்கும்இடமெல்லாம்தந்தைகருணாநிதியின்பெயர்இருக்கவேண்டும்எனகனவுகாண்கிறார்முதலமைச்சர்மு. . ஸ்டாலின். மிழகத்தில்உள்ளதெருக்களுக்குதேசியதலைவர்கள்பெயர்எதையும்வைக்ககூடாதா? தமிழகத்திற்காகதிமுகமட்டுமேஉழைத்ததுபோன்றமாயதோற்றத்தைஉருவாக்கும்முதலமைச்சரின்செயல்கண்டிக்கத்தக்கதுஎனமத்தியஇணைஅமைச்சர்எல்.முருகன்தெரிவித்துள்ளார்.

     



  • Oct 09, 2025 20:21 IST

    "குழந்தைகளுக்கு பாலியல் கல்வி" - உச்ச நீதிமன்றம் அறிவுரை

    சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு பாலியல் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தற்போது 9 ஆம் வகுப்புக்கு பிறகே அதுசார்ந்த கல்வி வழங்கப்படுவதாகவும் இதில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.



  • Oct 09, 2025 20:06 IST

    கேரளா வரும் மெஸ்ஸி

    உலகின் முன்னணி கால்பந்து வீரரான மெஸ்ஸி, நவம்பர் 14 ஆம் தேதி மெஸ்ஸி தனது அணியினருடன் கேரளா வருகை தர உள்ளார். நவம்பர் 17ஆம் தேதி கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இந்த கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனை அக்டோபர் 15ஆம் தேதி தொடங்க இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 



  • Oct 09, 2025 20:04 IST

    கரூர் சம்பவம் - ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல்

    சமூக ஊடகங்களில் சா்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல் செய்துள்ளார். "என் எக்ஸ் தள பதிவை உடனடியாக நீக்கிவிட்டேன் - எந்த உள்நோக்கமும் இல்லை. எந்த ஒரு அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

    புகார் குறித்து காவல்துறை முழுமையாக கவனத்தை செலுத்தவில்லை. ஆளும் ஆட்சியை விமர்சிப்பது கிரிமினல் குற்றத்திற்கும் சமமானதல்ல - அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வழக்கு பதிவு" என்று அதில் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். 



  • Oct 09, 2025 19:59 IST

    ஆயுள் தண்டனைக் கைதி நாகேந்திரன் மரணம் - மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த வழக்கு 

    ஆயுள் தண்டனைக் கைதி நாகேந்திரன் மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்துவதற்கான பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதியாக இருக்கும் ஒருவர் உயிரிழந்துள்ளதால், இதற்கான விதிகளின்படி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நாளை நாகேந்திரனின் உடலுக்கு பிரேதப்பரிசோதனை நடத்தப்பட உள்ளது.



  • Oct 09, 2025 19:50 IST

    சென்னையில் பறக்கும் ரயில் - திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்

    சென்னையில் 3 இடங்களை மேம்படுத்துவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.53லட்சத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடையாறு புரோக்கன் பிரிட்ஜ், வேளச்சேரி ரயில்வே மேம்பாலம் உள்ளிட்டவை அழகுபடுத்தப்பட உள்ளது.



  • Oct 09, 2025 19:24 IST

    டாஸ்மாக் கடைகளுக்கு ஒரு மணி நேரம் கூட விடுமுறை இல்லை ஏன்? - நயினார் நாகேந்திரன் கேள்வி 

    தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க அரசின் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற விளம்பர நாடகத்திற்காக அரசுப்பள்ளிகளின் வகுப்பறைகள் பறிக்கப்பட்டு, பிள்ளைகள் கொளுத்தும் வெயிலில் வெளியே அமர வைக்கப்படுவது குறித்து நாம் பல முறை கண்டித்துள்ளோம். இந்நிலையில் இதுகுறித்த பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு, “ஒரு நாளில் அப்படி ஒன்றும் பாடம் நடக்கப்போவதில்லை, ஒரு நாளில் பிள்ளைகளின் படிப்பிற்கு எந்த இடையூறும் வரப்போவதில்லை” எனக் கூறி அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனையும் மாணவர்களின் கற்றல் திறனையும் ஒருசேர அவமானப்படுத்தியுள்ளார் திமுக அமைச்சர் துரை முருகன். ஆணவம் தெறிக்கும் திமுக அமைச்சரின் இந்தப் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

    அரசுப்பள்ளிகள் ஒருநாள் செயல்படவில்லை எனில் ஒன்றும் குடிமுழுகிப் போகாது என்ற தொனியில் ஒரு அரசு அமைச்சர் பொதுவெளியில் பேசுகிறார் என்றால், ஏழை எளிய பிள்ளைகளின் கல்வியின் மீது திமுகவினருக்கு எத்தனை அலட்சியம் இருக்க வேண்டும்? எங்கள் பிள்ளைகளுக்கு ஒருநாள் கல்வி தேவையில்லை என முடிவு செய்வதற்குத் திமுக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?

    ஒன்றுக்கும் உதவாத ஆளும் அரசின் விளம்பரங்களுக்காக அரசுப்பள்ளிகளை ஒருநாள் முடக்கும் திமுக அரசு, பலர் குடியைக் கெடுக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு ஒரு மணி நேரம் கூட விடுமுறை கொடுப்பதில்லையே ஏன்? இந்த டாஸ்மாக் மாடல் அரசுக்கு மது விற்பதைத் தவிர வேறு எதிலும் நாட்டமில்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? இந்த லட்சணத்தில் இவர்களுக்குக் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற விளம்பரம் வேறு." என்று அவர் தெரிவித்துள்ளார்.



  • Oct 09, 2025 19:18 IST

    காரைக்கால் மீனவர்கள் 17 பேருக்கு சிறை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    காரைக்கால் மீனவர்கள் 17 பேரை அக்.15-ம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டியதாக கைதான மீனவர்கள் 17 பேரும் ஊர்க்காவல்துறை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி உத்தரவை அடுத்து 17 காரைக்கால் மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.



  • Oct 09, 2025 18:43 IST

    விஜய் கரூர் வருவதற்கு எதற்கு அனுமதி? அண்ணாமலை கேள்வி 

    கரூருக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்; எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என முன்னாள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அண்ணாமலை, "கரூர் வருவதற்கு எதற்கு அனுமதி? விஜய் தாராளமாக வரலாம். இது பாதுகாப்பான ஊர், யார் வேண்டுமானாலும் வரலாம். கரூருக்கு சென்றால் அச்சுறுத்தல் என்ற சூழலை ஏற்படுத்த வேண்டாம்" என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



  • Oct 09, 2025 18:40 IST

    புராதன சின்ன ஆணையத்தை 4 வாரங்களில் அமைக்க வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

    சின்னங்கள், கோயில், கட்டடங்களை பாதுகாக்க புராதன சின்ன ஆணையத்தை 4 வாரங்களில் அமைக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் நினைவு மண்டபம் போன்ற எந்த கட்டுமானங்களையும் கட்டக்கூடாது என அண்ணாமலையார் கோயில் கோபுரம் முன், வணிக வளாகம் கட்டும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Oct 09, 2025 18:38 IST

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - தேதி அறிவித்த வானிலை ஆய்வு மையம்

    தெற்கு வங்கக் கடல்  பகுதியில் வருகிற 22 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவ மழைக் காலத்தின் முதல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி அதற்கடுத்த 2 நாட்களில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



  • Oct 09, 2025 17:44 IST

    இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

    2025ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.



  • Oct 09, 2025 17:15 IST

    மீனவர்கள் விவகாரம் - முதல்வர் ஸ்டாலின் கடிதம்

    இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டு பணிக்குழுவை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.



  • Oct 09, 2025 16:24 IST

    தேர்தல் வெற்றி குறித்த வழக்கு - ஓபிஎஸ் நீதிமன்றம் வருகை

    இராமநாதபுரம் தேர்தலில்  நவாஸ்கனி எம்.பி., வெற்றி பெற்றதை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கில் சாட்சியம் அளிக்க ஓபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். வேட்பு மனுக்களில் உண்மை தகவல்களை நவாஸ் கனி மறைத்துள்ளதால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.



  • Oct 09, 2025 15:44 IST

    சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சம்

    சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சம் அடைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.91,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,425-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.177க்கு விற்பனை செய்யப்படுகிறது.



  • Oct 09, 2025 15:44 IST

    ஆப்கன் விமான தளத்தை அமெரிக்கா கைப்பற்ற இந்தியா எதிர்ப்பு

    ஆப்கானிஸ்தான் விமான தளத்தை அமெரிக்கா கைப்பற்ற கோரும் நிலையில், ஆப்கனில் வெளிநாட்டு ராணுவம் நிலைநிறுத்தப்படுவதற்கு இந்தியா உள்ளிட்ட கூட்டமைப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு ராணுவம் வந்தால் அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவிக்கப்பட்டது.



  • Oct 09, 2025 15:22 IST

    ரவுடி நாகேந்திரன் மரணம் - மகனுக்கு ஜாமீன்

    தந்தை நாகேந்திரன் இறுதிச்சடங்கில் பங்கேற்க மகன் அஸ்வத்தாமனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ரவுடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. கல்லீரல் பாதிப்பு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் ரவுடி நாகேந்திரன் உயிரிழந்தார்.



  • Oct 09, 2025 15:21 IST

    எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு

    எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தென்மாநிலம் முழுவதும் 5,000 கேஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்கால் தென் மாநிலம் முழுவதும் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



  • Oct 09, 2025 15:10 IST

    குகையில் தியானம் செய்த ரஜினி

    இமயமலை பாபாஜி குகைக்கு நடந்தே சென்று தியானம் மேற்கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்



  • Oct 09, 2025 14:45 IST

    இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்

    20 குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். டிரான்சிஸ்ட் வாரண்ட் மூலம் அவர் மத்தியப் பிரதேசத்திற்கு அம்மாநில போலீசாரால் அழைத்துச் செல்லப்பட உள்ளார்.



  • Oct 09, 2025 14:24 IST

    உ.பியில் சிறிய ரக விமானம் விபத்து

    உத்தரபிரதேசம், ஃபரூக்காபாத்தில் சிறிய ரக தனியார் விமானம் விபத்து. புறப்படும்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் அருகிலுள்ள புதர்களில் பாய்ந்த‌து. விமானத்தில் இருந்த 2 விமானிகளும், பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். 



  • Oct 09, 2025 14:09 IST

    அசைக்க முடியாத அர்ப்பணிப்பு - மோகன்லால்

    77 ஆண்டுகால தன்னலமற்ற சேவை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவைதான் பிராந்திய (பகுதி நேர தன்னார்வலர்களை கொண்டு செயல்படும்) ராணுவத்தின் மரபு இந்தியாவின் உண்மையான உணர்வை வெளிப்படுத்தும் அத்தகைய துணிச்சல் மிக்கவர்களுடன் 122-வது படைப்பிரிவில் பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். இன்று (அக். 9) பிராந்திய ராணுவ தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி நடிகரும், கவுரவ அடிப்படையில் பிராந்திய ராணுவத்தின் லெப்டினண்ட் கர்னலாக செயல்படுபவருமான மோகன்லால் தெரிவித்துள்ளார்



  • Oct 09, 2025 13:50 IST

    விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

    த.வெ.க தலைவர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவல் வந்ததையடுத்து, மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். சோதனையின் முடிவில், அது வெறும் புரளி எனத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் எண்ணைக் கொண்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், முகமது சபிக் என்பவர் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.



  • Oct 09, 2025 13:44 IST

    ம.பி., ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்து 20 குழந்தைகள் பலி: கவலை தெரிவித்த உலக சுகாதார நிறுவனம்

    ம.பி., ராஜஸ்தானில் இருமல் மருந்து உட்கொண்ட 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியான சம்பவம் உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. "இந்தியாவில் இருமல் சிரப் உட்கொண்ட குழந்தைகள் பலியான சம்பவம் கவலை அளிக்கிறது. குழந்தைகள் உயிரிழப்பு குறித்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான கோல்ட்ரிப் சிரப் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை. குழந்தைகள் உயிரிழப்பு விவகாரத்தில் இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்” என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.



  • Oct 09, 2025 12:56 IST

    மாவட்ட நீதிபதிகள் நியமனத்திற்கு 3 மாதத்தில் புதிய விதிகளை வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

    நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று (09-10-2025) முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மாவட்ட நீதிபதிகளை நியமிப்பதற்காகப் புதிய விதிமுறைகளை 3 மாதங்களுக்குள் வகுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மேலும், நீதிபதி பதவிக்கு விண்ணப்பிப்போர் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும், விண்ணப்பிக்கும் தேதியில் 35 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Oct 09, 2025 12:31 IST

    ம.நீ.ம அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் 

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில், இது புரளி என தெரிய வந்தது.



  • Oct 09, 2025 12:14 IST

    பா.ஜ.க புது அடிமை கிடைக்குமா என தேடுகிறது - உதயநிதி ஸ்டாலின் காட்டம்

    தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பா.ஜ.க வுக்கு அ.தி.மு.க என்ற அடிமை கிடைத்துள்ளது; புது அடிமை கிடைக்குமா என பா.ஜ.க தேடுகிறது. புது அடிமைகள் கிடைக்கும். எத்தனை அடிமைகள் வந்தாலும் தி.மு.க-வை ஒன்றும் செய்ய முடியாது” என்று காட்டமாக விமர்சித்தார்.



  • Oct 09, 2025 11:43 IST

    இருமல் மருந்து விவகாரம்: 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்- மா.சுப்பிரமணியன்

    இருமல் மருந்து விவகாரத்தில் முறையாக ஆய்வு செய்யாத மூத்த மருந்து தர ஆய்வாளர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஓரிரு நாட்களில் நிறுவனத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்; மருந்து நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்
     

    -சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி



  • Oct 09, 2025 11:36 IST

    உலகப் பிரச்சினைகளைப் பேசி தப்பிக்கப் பார்க்கிறது: எஸ்.ஜி.சூர்யா

    "வேங்கைவயல் குற்றவாளிகள் எங்கே என்றால், காலாவைப் பாருங்கள் என்கிறார்கள்; பெண்கள் மீதான வன்முறைகள் குறையாதது ஏன் என்றால், பாலஸ்தீனத்தைப் பற்றி பேச என்கிறார்கள்; கஞ்சா புழக்கம் எப்படி கட்டுப்படுத்தப்படும் என்றால், இஸ்ரேலைக் கண்டி என்கிறார்கள்; தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காத அரசு, உலகப் பிரச்சினைகளைப் பேசி தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது"

    - பாஜக மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் எஸ்.ஜி.சூர்யா



  • Oct 09, 2025 10:59 IST

    வைகோவை, நேரில் சென்று நலம் விசாரித்த திருமாவளவன்

    சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, திருமாவளவன்நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். 



  • Oct 09, 2025 10:55 IST

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ரவுடி நாகேந்திரன் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் A1 குற்றவாளியாகக் கருதப்படும் நாகேந்திரன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். கல்லீரல் பாதிப்பு காரணமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 



  • Oct 09, 2025 10:50 IST

    அதிமுகவின் 54வது ஆண்டு தொடக்க விழா: இபிஎஸ் உத்தரவு

    அதிமுகவின் 54வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்த எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.



  • Oct 09, 2025 10:21 IST

    நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்: தேர்தல் ஆணையம்

    நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படும். மாநில வாரியாக சிறப்பு திருத்த அட்டவணை தனியாக அறிவிக்கப்படும்.

    உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயாவின் மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதில்



  • Oct 09, 2025 09:33 IST

    மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

    மரணதண்டனைகைதிகளின்கருணைமனுநிராகரிக்கப்பட்ட 7 நாட்களுக்குள்தண்டனைநிறைவேற்றப்படவேண்டும்என்றஒன்றியஅரசின்மனுவைஉச்சநீதிமன்றம்தள்ளுபதிசெய்தது. மரணதண்டனைகைதிகள்சட்டநிவாரணம்பெறகாலவரையேஇல்லை. கொடியகுற்றங்களைசெய்தவர்கள், இதைசாதகமாகபயன்படுத்துகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின்நலன்களையும்நீதிமன்றம்கருத்தில்கொள்ளவேண்டும்எனமனுவில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

     



  • Oct 09, 2025 09:30 IST

    தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.91,200க்கு விற்பனை

    சென்னையில்ஆபரணதங்கத்தின்விலைகிராமுக்கு 15 உயர்ந்துஒருசவரன் 91,200க்குவிற்பனையாகிறது. ஒருகிராம் 11,400க்குவிற்பனையாகிறது.

     



  • Oct 09, 2025 08:38 IST

    சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டு கோவையின் புதிய அடையாளமாக திகழும் கோவை- அவினாசி ரோடு மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு கோல்டுவின்ஸ் பகுதியில் திறந்து வைக்கிறார். பின்னர் காரில் பயணித்தபடி பாலத்தை பார்வையிடுகிறார். அதன் பிறகு பொதுமக்களின் வாகனங்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. 



  • Oct 09, 2025 08:24 IST

    கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிப்பு

    கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தொடர் மழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கொடிவேரி அணைப்பகுதியில் 1,691 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாதுகாப்பு கம்பிகளைத் தாண்டி தண்ணீர் செல்வதால் சுற்றுலாப் பயணிகளுக்கு நீர்வளத்துறையினர் தடை விதித்துள்ளனர்.



  • Oct 09, 2025 08:16 IST

    காசா அமைதி திட்டத்திற்கு இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்புதல்: டிரம்ப்

    காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 2 வருடமாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வருவதில், இது ஒரு வரலாற்று மற்றும் முன்னெப்போது நிகழாத நிகழ்வாகும் எனவும் டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிரம்ப் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது; இஸ்ரேலும், ஹமாஸும் அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதனால் அனைத்து பிணைக் கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள். அமைதியை உருவாக்க, முதல்கட்ட ஒப்பந்தத்தின் படி தனது பாதுகாப்பு படையினரை இஸ்ரேல் திரும்ப பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.



  • Oct 09, 2025 08:04 IST

    அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, திருப்பூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 09, 2025 08:03 IST

    தென்காசி: ஒரே நாளில் 24 பேரை கடித்துக் குதறிய தெருநாய்கள்

    தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ஒரே நாளில் சிறுவர்கள்,பெண்கள், முதியவர்கள் என 24 பேரை தெருநாய்கள் கடித்துக் குதறியுள்ளன. காயமடைந்தவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சாலையில் நடந்து சென்ற பெண்ணை தெருநாய் விரட்டி விரட்டி கடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.



  • Oct 09, 2025 08:02 IST

    த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்-சோதனை

    சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வீட்டுக்கு அதிகாலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. காவல் கட்டுப்பாட்டு அறையை செல்போனில் தொடர்புகொண்ட நபர், விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். உடனடியாக விஜய் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய நிலையில், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது.



  • Oct 09, 2025 07:58 IST

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் சிவராஜ்குமார் தரிசனம்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் குடும்பத்துடன் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார். சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் எழுந்தருளிய தங்கத்தேரினை அவர் வடம் பிடித்து இழுத்துசென்றார். நடிகர் சிவராஜ்குமாரை அடையாளம் கண்டுகொண்ட பக்தர்கள் சிலர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.



  • Oct 09, 2025 07:39 IST

    20 குழந்தைகள் பலி: சிரப் மருந்து நிறுவன உரிமையாளர் கைது

    மத்தியப் பிரதேசத்தில் இருமல் மருந்து சாப்பிட்ட 19 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவன உரிமையாளரை இன்று கைது செய்தனர். சென்னை அசோக் நகரில் மறைந்து இருந்த இருமல் சிரப் நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.



  • Oct 09, 2025 07:36 IST

    சென்னை: மதுபோதையில் கார் ஓட்டி விபத்து-ஒருவர் மரணம்

    சென்னை அடுத்த கானாத்தூர் நயினார் குப்பத்தில் மதுபோதையில் அதிவேகமாகக் காரை ஓட்டிச் சென்ற உதயகுமார் என்ற இளைஞர், சைக்கிளில் சென்ற 25 வயது இளைஞர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றபோது, மற்றொரு பெண் மீது கார் மோதியதில் அப்பெண் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய உதயகுமாரை, பொதுமக்கள் விரட்டிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.



  • Oct 09, 2025 07:34 IST

    அவிநாசி மேம்பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் ஸ்டாலின்

    கோவை மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். ரூ.1791 கோடி மதிப்பீட்டில், 10.10 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்ட இந்த பாலத்திற்கு ஜி.டி.நாயுடுவின் பெயர் வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



  • Oct 09, 2025 07:21 IST

    வளிமண்டல சுழற்சி - 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Oct 09, 2025 07:14 IST

    தமிழக மீனவர்கள் 47 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

    ராமேசுவரத்தில் இருந்து நேற்று 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1500-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்தபோது 2 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். அப்போது, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 47 மீனவர்களையும், 5விசைப்படகுகளையும் சிறைபிடித்தனர். ஒரே நாள் இரவில் 47 மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையின் அத்துமீறிய நடவடிக்கையானது, ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: