/indian-express-tamil/media/media_files/2025/01/04/I9S51vIM4c94vZzYwtbM.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Jul 02, 2025 21:51 IST
தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகள் தரம் உயர்வு - அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, 10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை
பேரூராட்சிகளாகவும், 8 முதல் நிலை பேரூராட்சிகள் தேர்வு நிலை
பேரூராட்சிகளாகவும், 13 இரண்டாம் நிலை பேரூராட்சிகள் முதல் நிலை பேரூராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. -
Jul 02, 2025 21:11 IST
மலையேற்ற வீராங்கனைக்கு நிதியுதவி
புதுச்சேரியில் மலையேற்ற பயிற்சி பெற்ற முதல் பெண் வீராங்கனையான திவ்யா அருளுக்கு திமுக மாநில அமைப்பாளரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சிவா முன்னிலையில், திமுக பிரமுகர் எரிக் ஆஸ்பென் ரூ.1,00,000 வழங்கினார். ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரமான எல்ப்ரஸ், கார்கில் மலைகளான குன் மற்றும் நன் மலைகளை ஏறி சாதனைப் புரிந்திட நிதி உதவி வழங்கி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
-
Jul 02, 2025 21:03 IST
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 9000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல்
தொழில்நுட்ப உலகின் முன்னணி நிறுவனமான மக்ரோசாஃப்டில் சுமார் 9000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பெரிய அளவில் பணி நீக்கம் நடந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது மீண்டும் பணி நீக்கம் தொடர்பாக தகவல் பரவி வருகிறது.
-
Jul 02, 2025 19:12 IST
சென்னை புறநகர் பகுதிகளில் பரவலாக மழை
சென்னை ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை
-
Jul 02, 2025 18:57 IST
யானை சின்னம் பயன்படுத்த தடை கோரி தொடர்ந்த வழக்கு: த.வெ.க.வுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை உரிமையியல் நீதிமன்றம் நாளை உத்தரவு வழங்க இருக்கும் நிலையில், கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அனுமதி கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் புதிய மனுத்தாக்கல். ஆவணங்கள் தாக்கல் செய்ய அனுமதிப்பது தொடர்பாக பதிலளிக்க த.வெ.க.வுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
-
Jul 02, 2025 18:55 IST
கல்வி நிதி-7ம் தேதி முதல்வர் முக்கிய முடிவு
மத்திய அரசு இந்த ஆண்டும் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.1800 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கடிதம் அனுப்பி உள்ளது. புதிய கல்வி கொள்கை திட்டத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே. இந்த நிதியும் விடுவிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. வரும் 7ம் தேதி நடைபெறும் கல்வித்துறை கூட்டத்தில் முதல்வர் முக்கிய முடிவெடுப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
-
Jul 02, 2025 18:54 IST
குரூப் 4 தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு
தமிழகத்தில் வரும் 12ம் தேதி நடைபெற உள்ள குரூப் 4 போட்டி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
-
Jul 02, 2025 18:53 IST
கவரைப்பேட்டை - கும்மிடிப்பூண்டி தண்டவாள பராமரிப்பு பணிகள்: 40 புறநகர் ரயில்கள் ரத்து
சென்னை கவரைப்பேட்டை - கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 3) 40 புறநகர் ரயில்கள் ரத்து
காலை 9.15 மணி முதல் மாலை 3.15 மணி வரை ரயில் சேவையில் மாற்றம்
பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் - பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 21 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு
-
Jul 02, 2025 18:20 IST
சாந்தோம் புனித தோமையார் தேசிய திருத்தல பேராலயத்தின் புனித தோமையார் பெருவிழா
சென்னையில் புகழ்பெற்ற சாந்தோம் புனித தோமையார் தேசிய திருத்தல பேராலயத்தின் புனித தோமையார் பெருவிழா இன்னும் சற்று நேரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் கொடியேற்றம் நடைபெற உள்ளது.
-
Jul 02, 2025 16:56 IST
கொடிக்கம்பங்கள் அகற்றம் - உயர்நீதிமன்றம் கேள்வி
பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிட்டும், சென்னையில் 31% கொடிக்கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளது ஏன் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அனுமதியில்லாத கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Jul 02, 2025 16:53 IST
கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் போலீசாருக்கு அறிவுறுத்தல்
திருப்புவனம் லாக்அப் மரணத்தை தொடர்ந்து காவல் உயரதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். மண்டல ஐ.ஜி.க்கள், சரக டி.ஐ.ஜி.க்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
-
Jul 02, 2025 16:22 IST
நிகிதா மீது ஏற்கெனவே பண மோசடி வழக்கு
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா மீது ஏற்கனவே மோசடி வழக்கு உள்ளது. வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் வரை மோசடி செய்ததாக 2011 யில் நிகிதா மீது எஃப்.ஐ.ஆர் உள்ளது. 2010யில் துணை முதல்வரின் உதவியாளரை தெரியும் என்று கூறி நிகிதா மோசடி செய்துள்ளார்.
-
Jul 02, 2025 16:14 IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் சேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து 3 நீதிபதிகள் கொண்ட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.
-
Jul 02, 2025 15:48 IST
மடப்புரம் காவலாளி விவகாரம்: தவெக போராட்டம் 6ஆம் தேதிக்கு மாற்றம்
மடப்புரம் கோயில் காவலாளி விவகாரம் சென்னையில் நாளை அறிவிக்கப்பட்டிருந்த தவெக போராட்டம் 6 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை சிவானந்தம் சாலையில் வரும் 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் என ஆனந்த் தெரிவித்துள்ளார்.
-
Jul 02, 2025 15:37 IST
திராவிட இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது - வைகோ
திராவிட இயக்கத்தை அழிக்க வேண்டும் என சனாதன சக்திகள் செயல்படுகின்றன். இமயத்தைக் கூட அசைத்து விடலாம்; திராவிட இயக்கத்தை அசைக்க முடியாது. சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் வைகோ பேட்டி அளித்துள்ளார்.
-
Jul 02, 2025 15:34 IST
அன்புமணி என்னை நீக்கியது செல்லாது: பாமக எம்எல்ஏ அருள்
கட்சியில் அதிகாரம் இல்லாத அன்புமணி, என்னை நீக்கியது செல்லாது என பாமக எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்து என்னை நீக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு மட்டுமே உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளவரை அன்புமணிக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
-
Jul 02, 2025 15:22 IST
விஸ்மயா வழக்கு; கணவன் கிரண் குமாரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்
2021ம் ஆண்டு வரதட்சணை விவகாரத்தில் புதுமணப்பெண் விஸ்மயா தற்கொலை செய்த வழக்கில், அவரின் கணவன் கிரண் குமாருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம், ஜாமினில் விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளது. சிறை தண்டனைக்கு எதிரான கணவன் கிரண் குமாரின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரிக்க, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
-
Jul 02, 2025 15:21 IST
அனைத்து ரயில் சேவைகளையும் பெறும் வகையில் புதிய செயலி அறிமுகம்.!!
அனைத்து ரயில் சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில் ‘ரயில் ஒன்’ என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டது. முன்பதிவு ரயில் டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட், பி.என்.ஆர். எண் குறித்த விசாரணை, ரயிலில் உணவு முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெறலாம்
-
Jul 02, 2025 15:21 IST
நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த வழக்கில் கைதானவர்களில் இருவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது
2023 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த வழக்கில், UAPA சட்டத்தில் கைதான இருவருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அன்மோல் ஷிண்டே, மகேஸ் குவாமத் இருவரும் டெல்லியை விட்டு வெளியேறக் கூடாது, வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்கள் டிவி சேனல்களில் பேசக் கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
-
Jul 02, 2025 14:49 IST
தமிழ்நாட்டில் பாஜக எண்ணம் நிறைவேறாது: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
திராவிட இயக்கம் இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜக எண்ணம் நிறைவேறாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். திராவிட இயக்கத்தை யாரும் அசைக்க முடியாது. இந்தியாவுக்கே முன்னோடியாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது. சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
-
Jul 02, 2025 14:46 IST
திராவிட இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது - மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் வைகோ பேட்டி
திராவிட இயக்கத்தை அழிக்க சனாதன சக்திகள் செயல்படுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இமயமலையைக் கூட அசைத்து விடலாம், ஆனால் திராவிட இயக்கத்தை அசைக்க முடியாது என்று ஆணித்தரமாகக் கூறினார். சனாதன சக்திகளின் இந்த முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும், திராவிட இயக்கம் தொடர்ந்து வலிமையுடன் செயல்படும் என்றும் வைகோ தனது பேட்டியில் வலியுறுத்தினார்.
-
Jul 02, 2025 14:31 IST
தெலுங்கானா ரசாயன ஆலை விபத்து: நிர்வாகம் விளக்கம்
தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்துக்கு பாய்லர் வெடித்தது காரணமல்ல என நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஆலை விபத்தில் இறந்தவர்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று சிக்காச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்தை அடுத்து ரசாயன ஆலை 3 மாதம் தற்காலிகமாக மூடப்படும் என சிக்காச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
-
Jul 02, 2025 14:14 IST
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார். திமுக கூட்டணியிலேயே மதிமுக தேர்தலை சந்திக்கும் என்று கூறியிருந்த நிலையில் ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு
-
Jul 02, 2025 13:49 IST
ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு கட்டணம் உயர்த்த மத்திய அரசு அனுமதி - புதிய விதிகள் அமல்
ஓலா மற்றும் ஊபர் போன்ற டாக்சி சேவை நிறுவனங்கள், உச்ச நேரங்களில் (Peak-Hours) வழக்கமான கட்டணத்தை விட இரண்டு மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதிய கட்டண விதிமுறைகள் குறித்த முக்கிய அம்சங்கள்:
உச்ச நேரக் கட்டணம்: சாதாரண கட்டணத்தை விட 1.5 முதல் 2 மடங்கு அதிகமாகக் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவசரமில்லாத நேரக் கட்டணம்: அவசரமில்லாத நேரங்களில், அடிப்படை கட்டணத்தை விட 50 சதவீதம் குறைவாகக் கட்டணம் வசூலிக்க வேண்டும்.
பயண ரத்து கட்டணம்: காரணம் இல்லாமல் ஒரு பயணம் ரத்து செய்யப்பட்டால், ஓட்டுநருக்கு ரூ. 100 அபராதம் விதிக்கப்படும்.
மாநில அரசுகளுக்கு அதிகாரம்: திருத்தப்பட்ட விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைத் தவிர, கூடுதலாக விதிகளைச் சேர்க்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது.
-
Jul 02, 2025 12:16 IST
பா.ம.க. எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்கினார் அன்புமணி
பாமக எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதாக அன்புமணி அறிவிப்பு. கட்சி தலைமை குறித்து ஊடகங்களில் தவறான அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருவதால் நீக்கம் என அறிக்கை
-
Jul 02, 2025 11:54 IST
ஃபெப்சி பிரச்சினை: மத்தியஸ்தர் நியமனம்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் - ஃபெப்சி இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார். திரைப்படங்கள் தயாரிப்புக்கு இடையூறு இல்லாமல் ஒத்துழைப்பு வழங்க ஃபெப்சி அமைப்புக்கு உத்தரவிட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை
மத்தியஸ்தர் நியமிக்கப்பட்டு விட்டதாக கூறி, உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
-
Jul 02, 2025 11:30 IST
கேலி கார்ட்டூனுக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்.
Video: Sun News
#WATCH | வாரப் பத்திரிகையின் கார்ட்டூனுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.#SunNews | @mkstalin | #TNGovt pic.twitter.com/pWxN95cYC6
— Sun News (@sunnewstamil) July 2, 2025 -
Jul 02, 2025 11:00 IST
கொரோனா தடுப்பூசிக்கும், திடீர் மரணங்களுக்கும் தொடர்பில்லை
கொரோனா தடுப்பூசிகளுக்கும் திடீர் மரணங்களுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. வாழ்க்கை முறை மற்றும் ஏற்கனவே உள்ள நிலைமைகள் முக்கிய காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ICMR மற்றும் AIIMS நடத்திய விரிவான ஆய்வுகளில் உறுதி
திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா கருத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் -
Jul 02, 2025 10:57 IST
உண்மையான பக்தர்கள் திராவிட மாடல் அரசை பாராட்டுகின்றனர்- மு.க.ஸ்டாலின்
பக்தியின் பெயரில் பகல் வேஷம் போடுகின்றனர். உண்மையான பக்தர்கள் திராவிட மாடல் அரசை பாராட்டுகின்றனர். வெறுப்பையும், சமூகத்தில் பிளவுபடுத்தும் எண்ணங்களைக் கொண்டவர்களால் எங்களைப் பார்த்துத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் பணி தொடரும்.
- மு.க.ஸ்டாலின் பேச்சு -
Jul 02, 2025 09:47 IST
2-வது நாளாக தங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ.360 உயர்வு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,520-க்கும் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,065-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Jul 02, 2025 09:46 IST
தமிழ்நாட்டில் நாய்க் கடியால் 2.80 லட்சம் பேர் பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களில் 2.80 லட்சம் பேர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். இதில், 18 பேருக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. நாய் கடித்தால் உடனடியாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கான சிகிச்சை முறை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 02, 2025 09:27 IST
ரிதன்யாவின் குடும்பத்தினர் இபிஎஸ் உடன் சந்திப்பு
திருப்பூரில் தற்கொலை செய்த இளம்பெண் ரிதன்யாவின் குடும்பத்தினர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு மேற்கொண்டனர். வழக்கு விசாரணையில் காங்கிரஸ் கட்சியின் தலையீடு இருப்பதாக ரிதன்யாவின் தந்தை குற்றச்சாட்டியிருந்தார். திருமணமான 78 நாட்களில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார்.
-
Jul 02, 2025 09:06 IST
'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கம்: திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள்
தமிழ்நாடு முழுவதும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை திமுக தலைவர்கள் தொடங்கிவைத்தனர். இதனைத் தொடர்ந்து, திமுகவின் அமைப்புரீதியான 76 மாவட்டங்களிலும் திமுக மாவட்டச் செயலாளர்கள் இன்று பொதுக் கூட்டத்தை நடத்துகின்றனர். நாளை முதல் வீடு வீடாகச் சென்று மக்கள் சந்திப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 02, 2025 09:06 IST
11-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி?
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஏற்கனவே இருமுறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்ற நிலையில், 8-ம் தேதி மீண்டும் தமிழ்நாடு வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடியும் தமிழ்நாடு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேசிலில் நடைபெற இருக்கும் உச்சி மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று செல்லும் பிரதமர், வரும் 9-ஆம் தேதி வரை தாயகம் திரும்புகிறார். அதனைத் தொடர்ந்து, வரும் 11-ஆம் தேதி அவர் தமிழ்நாடு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பயணத்தின்போது, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
-
Jul 02, 2025 09:05 IST
8 நாட்கள்.. 5 நாடுகள்.. புறப்பட்டார் பிரதமர் மோடி
5 நாடுகள் பயணத்தை இன்று தொடங்கும் பிரதமர் நரேந்திர மோடி, கானா, டிரினிடாட் அண்ட் டொபாக்கோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா நாடுகளுக்கு 8 நாட்கள் சுற்றுப்பயணமாக செல்கிறார். முதல்கட்டமாக, ஆப்பிரிக்காவில் உள்ள கானாக்கு இன்று செல்கிறார். 30 ஆண்டுகளில் முதல்முறையாக கானாவுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார். பிரேசிலுக்கு 5-ஆம் தேதி செல்லும் மோடி, 17ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார். மாநாட்டின் இடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களை மோடி சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்
-
Jul 02, 2025 08:55 IST
மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க முகமது ஷமிக்கு உத்தரவு
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, அவரது முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவாகரத்து வழக்கில் மனைவி ஹசின் ஜஹான் மாதம் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட நிலையில் ரூ.1.3 லட்சம் வழங்க அலிபூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஹசின் வழக்கு தொடர்ந்திருந்தார்.
-
Jul 02, 2025 08:53 IST
"திருப்புவனம் இளைஞர் மரண விவகாரத்தில் உடனடி நடவடிக்கை"
திருப்புவனம் இளைஞர் மரண விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறி உள்ளார். சம்பந்தப்பட்ட காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வேறுயாரும் இதில் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக கூட்டணி மட்டும் தான் வலுவாக உள்ளது என்றார்.
-
Jul 02, 2025 08:28 IST
டெல்லியில் தடையை மீறி இயக்கப்பட்ட 80 வாகனங்கள் பறிமுதல்
டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 80 வாகனங்களைப் பறிமுதல் செய்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பெட்ரோல் பங்குகள் 24 மணி நேர கண்காணிப்பில் உள்ளனர்.
-
Jul 02, 2025 08:27 IST
”காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்”
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கிட்டதட்ட 2 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில்தான், 60 நாள் காசாவில் போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
-
Jul 02, 2025 08:03 IST
மேட்டுப்பாளையம்-நெல்லை சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
கோவை மேட்டுப்பாளையம்-நெல்லை இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. நெல்லை-மேட்டுப்பாளையம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:- 06030) 6-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் வந்தடையும். இதேபோல மேட்டுப்பாளையம்-நெல்லை இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:-06029) 7-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 1-ந் தேதி வரை திங்கட்கிழமை தோறும், மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லை சென்றடையும்.
-
Jul 02, 2025 08:00 IST
மேட்டூர் அணையில் வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைப்பு
மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 56,000 கனஅடியில் இருந்து 35,000 கன அடியாக இன்று காலை 8 மணியளவில் குறைக்கப்படவுள்ளது. டெல்டா பாசனத்திற்காக 22,500 கனஅடியும், 16 கண் மதகு வழியாக 12,500 கனஅடி உபரி நீரும் வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
Jul 02, 2025 07:58 IST
10 மணி வரை 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
இன்று காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 02, 2025 07:45 IST
ஒகேனக்கல் காவிரியாற்றில் 7வது நாளாக குளிக்க தடை
தற்போதைய நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 43 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், தீவிர பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும், அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டடுள்ளது.
-
Jul 02, 2025 07:42 IST
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறாது: வைகோ
திருப்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: தேர்தலுக்கு 3, 4 மாதங்களுக்கு முன்பு கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும். அப்போது எங்களுக்கு அழைப்பு விடுத்ததும் அங்கே போய் சொல்வோம். எந்த சூழ்நிலையிலும் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியே போகாது. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மதிமுகவை துச்சமாக மதித்து விமர்சித்து பேசுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
-
Jul 02, 2025 07:22 IST
விருதுநகர் ஜவுளி பூங்கா: ரூ.1894 கோடி ஒதுக்கியது மத்திய அரசு
விருதுநகர் மாவட்டத்தில் அமையவுள்ள ஜவுளி பூங்காவிற்கு வளர்ச்சி மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.1,894 கோடி ஒதுக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு துணியின் துவக்கம் முதல் இறுதி வரை என்னென்ன தொழில் செய்யப்படுகின்றனவோ அதற்கான ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. தையல், டிசைனிங், டை உள்ளிட்ட ஜவுளி தொடர்பான அனைத்து தொழில்களும் இந்த பூங்காவில் இடம்பெற உள்ளன. இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கான குடியிருப்பு வசதிகளும் செய்யப்பட உள்ளன. இதில் 51% மத்திய அரசும், 49% மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது.
-
Jul 02, 2025 07:20 IST
அனைத்து ரயில் சேவைகளுக்கும் 'ரயில்ஒன்' ஆப் அறிமுகம்
இந்திய ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில் 'ரயில்ஒன்' என்ற செல்போன் செயலியை ரயில்வே அமைச்சகம் உருவாக்கி வந்தது. இந்த செயலியை ரயில்வே அமைச்சர் அறிமுகம் செய்துவைத்தார். இந்த ரயில் ஒன் செயலியில், முன்பதிவு ரயில் டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட், நடைமேடை டிக்கெட், ரயில்கள் மற்றும் பி.என்.ஆர். எண் குறித்த விசாரணை, பயண திட்டமிடல், ரயில் உதவி சேவைகள், ரயிலில் உணவு முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெறலாம். இதனால், ரயில்வே சேவைகளுக்கு இனி இனி தனித் தனி செயலி பதிவிறக்கம் செய்து வைத்து இருக்க தேவையில்லை என்பதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
Jul 02, 2025 07:19 IST
அரசு ஊழியர்களுக்கு திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்வு
தமிழக சட்டசபையில் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது அவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்களின் பணிக்காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணம் வழங்கப்படுகிறது. பெண் ஊழியர்களுக்கு ரூ.10,000 மற்றும் ஆண்களுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. இதை பல மடங்கு உயர்த்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
Jul 02, 2025 07:17 IST
மேட்டூர் அணையிலிருந்து 56,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்
மேட்டூர் அணையில் இருந்து 2-வது நாளாக 56 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுவதால், காவிரிக் கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. பொதுமக்கள் யாரும் நீர்நிலைப்பகுதிகளில் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன் பிடிக்கவோ மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலோ ஈடுபட வேண்டாம். அபாயகரமான இடங்களிலும் செல்பி எடுப்பதையும், இரவு நேரங்களில் ஆற்றில் இறங்குவதையும் தவிர்த்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.