/indian-express-tamil/media/media_files/2025/05/27/Lp1SMvHffde9FLSwl8i0.jpg)
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி - 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக மீனவர்கள் 47 பேர் கைது: ராமேசுவரத்தில் இருந்து நேற்று 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1500-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்தபோது 2 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். அப்போது, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 47 மீனவர்களையும், 5விசைப்படகுகளையும் சிறைபிடித்தனர். ஒரே நாள் இரவில் 47 மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையின் அத்துமீறிய நடவடிக்கையானது, ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் குமரிக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஆகியவற்றின் காரணமாக இன்று முதல் 14-ந் தேதி வரை 6 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Oct 09, 2025 07:19 IST
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Oct 08, 2025 20:41 IST
ஒருநாள் அமித்ஷா மிகப்பெரிய நம்பிக்கை துரோகி ஆகலாம் - மம்தா பானர்ஜி
அமித்ஷா செயல் பிரதமர் போல் நடந்துகொள்கிறார். பிரதமர் மோடி அவரிடம் கவனமாக இருக்க வேண்டும். இது எல்லாம் தெரிந்தும் பிரதமர் மோடி கண்மூடித்தனமாக நம்பிக்கையை அமித்ஷா மீது வைத்துள்ளார். ஒருநாள் அமித்ஷா மிகப்பெரிய நம்பிக்கை துரோகி ஆகலாம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
- Oct 08, 2025 20:38 IST
ஆயுள் தண்டனை கைதி குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனு
அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை கைதி ஞானசேகரன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனு மீது 4 வாரங்களில் பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
- Oct 08, 2025 20:38 IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமின் கோரி மனு: அக்டோபர் 10-ல் விசாரணை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களின் ஜாமின் மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்ற விசாரணைக்கு பிறகு முடிவெடுக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ள நிலையில், ஜாமின் கோரிய வழக்கின் விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளி வைத்தார் நீதிபதி.
- Oct 08, 2025 19:28 IST
வெளிநாடு செல்ல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு அனுமதி மறுப்பு
தொழிலதிபட்ரைரூ.60 கோடிமோசடிசெய்ததாகஎழுந்தபுகாரில்ஷில்பாஷெட்டிக்குலுக்அவுட்நோட்டீஸ்கொடுக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிஒன்றுக்காகஇலங்கைசெல்லஅனுமதிகோரிமும்பைஉயர்நீதிமன்றத்தைஷில்பாஷெட்டிஅணுகியுள்ளார்.
- Oct 08, 2025 18:47 IST
பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 6 பேர் பலி
ஆந்திராவில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 6 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- Oct 08, 2025 18:28 IST
விமான நிலையத்தில் பாசப் போராட்டம்
தங்கையை வழியனுப்ப மனமில்லாமல் கதறி அழுது அக்கா மயங்கி விழுந்தார். சகோதரி திடீரென மயங்கி விழுந்ததால் பயணத்தை தொடர தங்கை மறுத்துள்ளார். தங்கை உடன் வந்த உறவினர்கள் அந்தமான் செல்ல, தங்கை அக்காவை கவனித்து வருகிறார்.
- Oct 08, 2025 18:12 IST
உள்நாட்டு பொருட்களை பயன்படுத்துங்கள் - பிரதமர் மோடி
பலபொருட்கள்மலிவுவிலையில்கிடைக்கஜி.எஸ்.டிசீர்திருத்தம்வழிவகைசெய்துள்ளது. இதனால்இந்தநவராத்திரியில்மக்களின்செலவுவிகிதம்உயர்ந்துள்ளது. உள்நாட்டுபொருட்களைபயன்படுத்துமாறுஅனைவரையும்நான்கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில்இந்தியபணத்தைநாட்டிற்குள்வைத்திருப்பதன்மூலம்நமதுபொருளாதாரத்தைவலுப்படுத்தமுடியும்எனமோடிதெரிவித்துள்ளார்.
- Oct 08, 2025 17:40 IST
குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை - டென்மார்க் அரசு உத்தரவு
மனநலனை காக்கும் விதமாக 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த டென்மார்க் அரசு தடை விதித்துள்ளது.
- Oct 08, 2025 17:02 IST
ஐ.டி ஊழியர் தாக்கப்பட்ட வழக்கு - நடிகை லஷ்மி மேனனுக்கு முன்ஜாமின்
ஐ.டி ஊழியரை கடத்தி, தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை லஷ்மி மேனனுக்கு கேரள உயர் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது. தங்களுக்குள் சமரசம் ஏற்பட்டதாக ஐ.டி ஊழியர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
- Oct 08, 2025 16:58 IST
சாதிப் பெயர்களை நீக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - தலைவர்கள், பூக்கள் பெயர் வைக்க அறிவுறுத்தல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலி அறிவுறுத்தலின் படி தமிழ்நாட்டில் தெருக்கள், நீர்நிலைகள், சாலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தெருக்கள் மற்றும் சாலைகளுக்கு தலைவர்கள், பூக்கள் பெயரை வைக்க அறிவுறுத்தல்
- Oct 08, 2025 16:24 IST
உடல் உறுப்புகள் தானம் - அரசு மருத்துவமனை கல்வெட்டில் பொறிக்கப்படும் பெயர்கள்
உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களின் பெயரை அரசு மருத்துவமனை கல்வெட்டுகளில் பொறிக்கும் திட்டம் அடுத்த வாரம் முதல் செயல்படுத்தப்பட உள்ளது என்று திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
- Oct 08, 2025 15:59 IST
பாமக நிறுவனர் ராமதாஸை 12ம் தேதி வரை பார்வையாளர்கள் சந்திக்க வர வேண்டாம் என அறிவுறுத்தல்
பாமக நிறுவனர் ராமதாஸை 12ம் தேதி வரை பார்வையாளர்கள் சந்திக்க வர வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அறிவுரைப்படி 12ம் தேதி வரை ராமதாஸ் ஓய்வெடுக்க உள்ளார் என்றும் 13ம் தேதி முதல் நிர்வாகிகள், தொண்டர்கள், பார்வையாளர்கள் ராமதாஸை சந்திக்கலாம் என்றும் பாமக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- Oct 08, 2025 15:59 IST
நமச்சிவாயத்துக்கு எதிராக பாஜக எம்எல்ஏ போர்க்கொடி
அமைச்சராக இருக்க நமச்சிவாயத்துக்கு என்ன தகுதி உள்ளது என புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ. சாய் சரவணன் கேள்வி எழுப்பி உள்ளார். அமைச்சர் பதவி இல்லை என்ற விரக்தியில் நான் பேசுவதாக நமச்சிவாயம் கூறியுள்ளார். சட்டமன்ற உறுப்பினருக்கும், நாடாளுமன்ற உறுப்பினருக்கும் கேள்வி கேட்கும் உரிமை உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த நமச்சிவாயத்துக்கு அமைச்சராக இருக்க என்ன தகுதி? உள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்.
- Oct 08, 2025 15:36 IST
வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிப்பு
2025ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வேதியியலுக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது. ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன், ஓமர் எம்.யாஹி ஆகியோருக்கு நோபல் பரிசு. உலோகம்-கரிமம் கட்டமைப்பு தொடர்பான கண்டுபிடிப்புக்காக 3 விஞ்ஞானிகளுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
- Oct 08, 2025 15:13 IST
ஆற்றில் வெள்ளம் - மாணவர்கள் அவதி
தொடர் மழையால் ஜவ்வாது மலை கானாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் , ஆற்றை கடக்க முடியாமல் சுமார் 7 மணி நேரம் வனப்பகுதியில் தவித்த மாணவர்கள். இதனால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிப்படுவதால் மேம்பாலம் அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
- Oct 08, 2025 15:11 IST
திமுக இருக்கும் வரை அநீதிக்கு எதிராக தொடந்து போராடிக் கொண்டுதான் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
திமுக இருக்கும் வரை அநீதிக்கு எதிராக தொடந்து போராடிக் கொண்டுதான் இருக்கும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு யாருடன் போராடப் போகிறது என்ற ஆளுநரின் கேள்விக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அளித்த பதிலில், "கடந்த 4 ஆண்டுகளாக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன்தான் தமிழ்நாடு போராடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்துள்ளது,"இவ்வாறு தெரிவித்தார்.
- Oct 08, 2025 14:44 IST
காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை - ஜாய் கிரிசில்டா
மாதம்பட்டி ரங்கராஜ் மீதான புகாரில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கின்றனர். மகளிர் ஆணையம் மீது நம்பிக்கை வைத்து புகார் அளித்துள்ளோம். என்று மகளிர் ஆணையத்தில் புகார் அளித்த பின் ஜாய் கிரிசில்டா தரப்பு பேட்டியளித்துள்ளார்.
- Oct 08, 2025 14:24 IST
தமிழ்நாட்டில் காலியாக உள்ள காவலர் தேர்வு இறுதிப்பட்டியலை 30 நாட்களில் வெளியிட ஐகோர்ட் ஆணை
தமிழ்நாட்டில் காலியாக உள்ள காவலர் தேர்வு இறுதிப்பட்டியலை 30 நாட்களில் வெளியிட ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 621 போலீஸ் எஸ்.ஐ.க்கள், 129 தீயணைப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான இறுதி தேர்வுப் பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்று ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தயாரித்த தேர்வுப் பட்டியலில் எந்தக் குறையும் இல்லை எனக்கூறி, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- Oct 08, 2025 14:24 IST
சி.விஜயபாஸ்கர் சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கை அக்டோபர் 17ம் தேதிக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
- Oct 08, 2025 14:15 IST
தங்கம் விலை மீண்டும் உயர்வு
தங்கம் விலையில் இன்று முன்னெப்போதும் இல்லாத மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் இரண்டாவது முறையாக விலை உயர்ந்துள்ள நிலையில், ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.680 அதிகரித்து, மொத்தமாக ரூ.91,080 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று மட்டும் ஒரு சவரனுக்கு மொத்தமாக ரூ.1,480 உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.85 உயர்ந்து ரூ.11,385 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து விலை ஏறி வரும் நிலைமை மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் வாங்க திட்டமிட்டவர்கள் தற்போது காத்திருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
- Oct 08, 2025 13:49 IST
பா.ஜ.க-வின் நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் துணை போகிறதா? - கே.என்.நேரு கேள்வி
பா.ஜ.க-வின் நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் துணை போகிறதா? என அமைச்சர் கே.என்.நேரு கேள்வி எழுப்பி உள்ளார்.நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “எஸ்.ஐ.ஆர். என்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை அனைத்து மாநிலங்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்திருக்கிறார். இந்தியா கூட்டணி சார்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக ஆதாரங்களோடு தொடர்ந்து எழுப்பிய கேள்விகளுக்குத் தேர்தல் ஆணையம் இதுவரை உரிய பதிலை அளிக்கவில்லை.ஆட்சிகளை மாற்றுவது, அமைப்பது ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்களான வாக்காளர்களின் உரிமை. அதனைத் தேர்தல் ஆணையம் கையில் எடுப்பது, மத்திய அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவது ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைப்பதற்குச் சமம். அந்தச் செயலைத் தமிழ்நாடு நிச்சயம் அனுமதிக்காது.பீகாரைப் போலத் தற்போது எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் ஏதேனும் செயல்படுத்த மத்திய பாஜக அரசு முயன்றால், அதற்கு எதிராக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு ஒன்று சேர்ந்து போராடும். தமிழ்நாட்டு மக்களை நேர் நின்று வீழ்த்த முடியாத எதிரிகளும் துரோகிகளும் குறுக்கு வழியைக் கையாண்டு வென்றிடலாம் எனப் பகல் கனவு காண்கிறார்கள். அதற்குத் தமிழர்கள் தக்கப் பதிலடி கொடுப்பார்கள். எஸ்.ஐ.ஆர். என்ற அநீதிக்கு எதிராகத் தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்.” என்று கூறியுள்ளார். - Oct 08, 2025 13:26 IST
‘உள்ளூர் நிலைமை ஊசலாடும் போது உலக அரசியல் தேவைதானா?’ ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி
காஸாவில் இஸ்ரேலால் நடத்தபடும் படுகொலைகளைக் கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றது குறித்து அண்ணாமலை விமர்சித்துள்ளார். பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காஸாவை பற்றிய கவலை எதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே?
உள்ளூர் நிலைமையே ஊசலாடும் போது உலக அரசியல் உங்களுக்கு தேவைதானா?
பாலஸ்தீனத்திற்கு விடிவு காலம் பிறக்க வேண்டும் என பேசும் உங்களால் வேங்கைவயல் போன்ற கொடுமைகளில் இருந்து மக்களை விடுவிக்க முடியவில்லையே ஏன்?
கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த நீங்கள் காஸாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகசிறந்த நகைச்சுவை!” என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காஸாவை பற்றிய கவலை எதற்கு முதல்வர் திரு. @mkstalin அவர்களே?
— K.Annamalai (@annamalai_k) October 8, 2025
உள்ளூர் நிலைமையே ஊசலாடும் போது உலக அரசியல் உங்களுக்கு தேவைதானா?
பாலஸ்தீனத்திற்கு விடிவு காலம் பிறக்க வேண்டும் என பேசும் உங்களால் வேங்கைவயல் போன்ற கொடுமைகளில் இருந்து மக்களை… https://t.co/UcDPR4R3rd - Oct 08, 2025 12:58 IST
1GB டேட்டா ஒரு ரூபாயை விடக் குறைவு - மோடி
டெல்லியில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் 2025 நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவில் தற்போது 1GB வயர்லெஸ் டேட்டாவின் விலை ஒரு ரூபாயை விடவும் குறைவாகவே உள்ளது. இது நாட்டில் டிஜிட்டல் தொழில்நுட்பம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்திருப்பதைக் காட்டுகிறது" என்று பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், 2014-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், நாட்டின் மின்னணு உற்பத்தி 6 மடங்கு அதிகரித்துள்ளது என்றும், மொபைல் போன் உற்பத்தி 28 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
- Oct 08, 2025 12:55 IST
விஜய் எப்போது கரூர் செல்வார்? த.வெ.க வழக்கறிஞர் பதிலளிக்க மறுப்பு
கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து ஆறுதல் த.வெ.க தலைவர் விஜய் கரூர் செல்வதற்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி த.வெ.க தரப்பில் சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மனு அளித்த பின்னர், த.வெ.க வழக்கறிஞர் அறிவழகனிடம், விஜய் எப்போது கரூர் செல்வார் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
- Oct 08, 2025 12:24 IST
நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்
நடிகை விஜயலட்சுமி குறித்து அவதூறு பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கூறுவதாக உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். தனது சொல் செயல்களால் நடிகைக்கு ஏற்பட்ட வலி காயத்திற்கு நிபந்தனை இன்றி மன்னிப்பு கேட்பதாக சீமான் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. நடிகைக்கு எதிராக தனது அனைத்து அறிக்கைகள், குற்றச்சாட்டுகளையும் திரும்ப பெறுவதாக சீமான் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். நடிகை குறித்து எந்த ஊடகத்திலும் எந்த கருத்தையும் இனி தெரிவிக்க மாட்டேன் என பிரமாண பத்திரத்தில் சீமான் உறுதியளித்துள்ளார்.
நிபந்தனையற்ற மன்னிப்பு கூறியதால் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல் படி சீமான் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற தயார் என நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். சீமான் அவரது ஏஜென்ட்களால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் எனது குடும்ப பொருளாதாரம் நலிவடைந்துள்ளது என நடிகை விஜயலட்சுமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் சீமானால் பாதிக்கப்பட்டு உள்ளேன் எனது வாழ்வாதாரத்துக்கான உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என நடிகை விஜயலட்சுமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - Oct 08, 2025 12:18 IST
சீமான் மீதான நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த பாலியல் வழக்கு ரத்து - உச்ச நீதிமன்றம்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை அளித்த பாலியல் வழக்கு ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. சீமானுக்கு எதிரான புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை கூறியதை தொடர்ந்து வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளதைப் போல் இருதரப்பும் பரஸ்பரம் அவதூறு கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- Oct 08, 2025 12:15 IST
கரூர் செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு கோரி டி.ஜி.பி அலுவலகத்தில் த.வெ.க-வினர் மனு
கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டவரை சந்தித்து ஆறுதல் கூற த.வெ.க தலைவர் விஜய் கரூர் செல்ல பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர். ஏற்கனவே, இமெயில் மூலமாக மனு அளித்த நிலையில் டி.ஜி.பி அலுவலகத்திற்கு நேரில் சென்று த.வெ.க-வினர் மனு அளித்துள்ளனர்.
- Oct 08, 2025 11:45 IST
தமிழ்நாட்டின் 4வது பல்லுயிர் பாரம்பரிய தளமாக நாகமலை குன்று காடுகள் அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாகமலை குன்று காடுகளை மாநிலத்தின் 4வது பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவித்தது தமிழ்நாடு அரசு.
32.22 ஹெக்டேரில் அமைந்துள்ள நாகமலையில் 135 பறவை இனங்கள், 138 தாவர இனங்கள், 106 பூச்சிகள், 23 எட்டுக்காலிகள், 17 ஊர்வனங்கள், 10 பாலூட்டிகள், என மொத்தம் 437 உயிரினங்கள் வாழ்வதாக கூறப்படுகிறது
- Oct 08, 2025 11:43 IST
தஷ்வந்தை உடனே விடுவிக்க உத்தரவு
குற்றத்தை உறுதிசெய்ய தவறிவிட்டதாகக் கூறி தஷ்வந்ததை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 2017இல் போரூர் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் தவறிவந்த கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டான்.
- Oct 08, 2025 11:36 IST
கரூர் வழக்கை நாளை(அக்.9) விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்குகளில், உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரணைக்கு எதிராகத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தாக்கல் செய்த மனுவை நாளை (அக். 9) விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நாளை விசாரிக்க வேண்டும் என்று தவெக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை மற்ற மனுக்களுடன் சேர்த்து மறுநாள் அக்டோபர் 10 அன்று விசாரிப்பதாக அறிவித்தது. கரூர் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை கோரும் மனுக்கள் உட்படச் சில மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
- Oct 08, 2025 11:34 IST
காசாவிற்காகச் சட்டமன்றத்தில் தீர்மானம்: - மு.க.ஸ்டாலின்
பாலஸ்தீன மக்களுக்கான ஆதரவை மனப்பூர்வமாக வழங்குகிறோம். காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலைக் கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வர வலியுறுத்தியும், அதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வலியுறுத்தியும், வரும் 14 ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த சிபிஎம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) போராட்டத்தில் கலந்துகொண்டு அறிவித்துள்ளார்.
- Oct 08, 2025 11:11 IST
41 பேரின் குடும்பத்திற்கு விஜய் தலா ரூ. 1 கோடி வழங்கக் கோரி வழக்கு
கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு விஜய் தலா ரூ. 1 கோடி நிவாரணத் தொகை வழங்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ். மணி மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும், தமிழ்நாடு அரசு தலா ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும், வழக்கை சிபிசிக்கு (CB-CID) மாற்ற வேண்டும், அத்துடன் காவல்துறை, மாவட்ட நிர்வாகம், மின்சாரத் துறை மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- Oct 08, 2025 11:08 IST
இஸ்ரேலை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) சார்பில் சென்னையில் நடைபெற்று வரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், திமுக தொண்டர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து அந்நாட்டு கொடியுடன் பங்கெடுத்தனர்.
- Oct 08, 2025 11:06 IST
கரூர் சம்பவம்- சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு எதிராக தவெக மேல்முறையீடு
கரூர் துயரச் சம்பவத்தை விசாரிக்க உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மேல்முறையீடு செய்துள்ளது.
- Oct 08, 2025 11:04 IST
இதுவரை 33 பேருக்கு விஜய் வீடியோ கால்
கரூர் நெரிசலில் உயிரிழந்த 41 பேரில் இதுவரை 33 குடும்பத்தினரிடம் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார். கரூர் சுற்றியுள்ள மற்ற மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களிடமும் விரைவில் விஜய் வீடியோ கால் பேசவுள்ளார்.
தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் பேட்டி
- Oct 08, 2025 10:55 IST
பிரதமர் மோடி விமானப்படை தின வாழ்த்து
இந்திய விமானப்படை துணிச்சல், ஒழுக்கம், துல்லியத்தை எடுத்துக்காட்டுகிறது. விமானப்படை வீரர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்.
இந்திய விமானப்படையின் 93வது தொடக்க தினத்திற்கு பிரதமர் மோடி X பக்கத்தில் வாழ்த்து
- Oct 08, 2025 10:54 IST
17 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
சொகுசு கார் முறைகேடு புகாரில் நடிகர்கள் மம்மூட்டி, துல்கர் சல்மான், பிரித்விராஜ் தொடர்புடைய 17 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. சென்னையில் உள்ள துல்கர் சல்மானின் வீடு உட்படப் பல இடங்களில் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
- Oct 08, 2025 10:52 IST
மருத்துவ சிகிச்சையில் ராமதாஸ்: நலம் விசாரித்த திருமா
"பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலன் விசாரித்தேன். அவர் முழுமையாக நலம்பெற வேண்டுமென விசிக சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்"
திருமாவளவன் X பதிவு
- Oct 08, 2025 10:28 IST
இந்தியா வந்தடைந்தார் பிரிட்டன் பிரதமர்
இருநாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தகக் குழுவுடன் மும்பை வந்தடைந்தார்.
நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
- Oct 08, 2025 10:25 IST
25ம் ஆண்டில் பிரதமர்: இபிஎஸ் வாழ்த்து
பிரதமர் மோடி 25 ஆண்டு அரசு தலைமை பொறுப்பு வகிப்பது வரலாற்று சாதனை. பிரதமர் மோடியின் சாதனை அவரின் அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு சான்று. அதிமுக சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்
- இபிஎஸ் X பக்கத்தில் வாழ்த்து
- Oct 08, 2025 10:22 IST
பிரேமலதாவின் தாயார் உடலுக்கு திருமாவளவன் நேரில் அஞ்சலி
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணி உடலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
- Oct 08, 2025 09:50 IST
துல்கர் சல்மான், மம்மூட்டி, பிரித்விராஜ் வீட்டிலும் இ.டி. ரெய்டு
சென்னையில் கிரீன்வே சாலையில் உள்ள துல்கர் சல்மானிற்கு சொந்தமான வீட்டில் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது தயாரிப்பு நிறுவன அலுகத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோன்று, கொச்சியில் உள்ள மலையாள நடிகர்களான மம்முட்டி மற்றும் ப்ருத்விராஜ் ஆகியோர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். பூடானில் இருந்து சொகுசு கார்கள் இறக்குமதி செயப்பட்ட விவகாரத்தி சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
- Oct 08, 2025 09:26 IST
தங்கம் விலை புதிய உச்சம்: ரூ.90,000-ஐ கடந்தது சவரன்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.90,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.167க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Oct 08, 2025 09:16 IST
பிரேமலதாவின் தாயார் உடலுக்கு கனிமொழி நேரில் அஞ்சலி
தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணி உடலுக்கு தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். எல்.கே.சுதீஷின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
- Oct 08, 2025 09:05 IST
2026 தேர்தல் கூட்டணி பற்றி விரைவில் அறிவிப்பு - அன்புமணி
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க.வின் நிலைபாடு குறித்து விரைவில் அறிவிப்பேன். வதந்திகளை நம்ப வேண்டாம். த.வெ.கவுடன் பாமக கூட்டணி வைக்குமா என்பது போகபோக தெரியும் என்றார் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்.
- Oct 08, 2025 08:50 IST
பீகார் தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் குழு இன்று ஆலோசனை
பீகாரில் சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு டெல்லியில் இன்று கூடுகிறது. கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் வாக்காளர் திருத்த பட்டியல், தேர்தல் பணி, கள நிலவரம், தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
- Oct 08, 2025 08:40 IST
கரூர் சம்பவத்தில் விஜய் கைது தேவையற்றது - கே.எஸ்.அழகிரி
கரூரில் மக்கள் சந்திப்பு பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததில் விஜய்யை கைது செய்வதென்பது தேவையற்றது என்று விழுப்புரத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். விஜய் கைது செய்யப்பட்டால் தவறான செயல்பாடாகும். 4 புறத்திலும் தவறு உள்ளது. இச்சம்பவத்தில் செந்தில்பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக கூறுவது தவறானது. கரூரில் யாருமே எதிர்பாராத அளவிற்கு அதிக கூட்டம் என்பதால் விபத்து ஏற்பட்டது என்றார்.
- Oct 08, 2025 08:39 IST
திருச்சி அரசு பேருந்தின் டிஜிட்டல் பெயர் பலகையில் சீனமொழி
திருச்சியில் அரசு பேருந்தின் டிஜிட்டல் பலகையில் சீன மொழி இடம்பெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சத்திரம் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு லால்குடி, பெருவளநல்லூர், குமுளூர் வழியாக கொளக்குடி வரை செல்லும் அரசு டவுன் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பேருந்தின் டிஜிட்டல் பெயர் பலகையில் திடீரென சீன மொழியில் ஊர் பெயர் இடம் பெற்றது. இதனை பார்த்த பயணிகள் குழப்பம் அடைந்தனர்.
- Oct 08, 2025 08:18 IST
துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
சென்னையில் கிரீன்வே சாலையில் உள்ள துல்கர் சல்மானிற்கு சொந்தமான வீட்டில் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது தயாரிப்பு நிறுவன அலுகத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர். பூடானில் இருந்து சொகுசு கார்கள் இறக்குமதி செயப்பட்ட விவகாரத்தி சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.