/indian-express-tamil/media/media_files/2025/09/24/peela-ias-2025-09-24-20-19-47.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.93-க்கும், டீசல் 92.52 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏரி நிலவரம்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் நீர் இருப்பு 65.94% ஆக உள்ளது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில், தற்போதைய நிலவரப்படி 7.753 டி.எம்.சி.க்கு நீர் இருப்பு உள்ளது.
- Sep 24, 2025 22:01 IST
முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம் நீட்டிப்பு!
முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகானின் பதவிகாலத்தை 2026 மே 30 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அவரது 3 ஆண்டு பதவிக்காலம் இம்மாதம் நிறைவடைய உள்ள் நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- Sep 24, 2025 21:43 IST
‘புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் நீண்டகால நன்மை!’ -ரிசர்வ் வங்கி
புதிய ஜி.எஸ்.டி சீர்த்திருத்தங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் நீண்டகால நன்மையை ஏற்படுத்தும். சில்லறை விற்பனை விலைகள் குறையும் மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
- Sep 24, 2025 21:41 IST
பீலா வெங்கடேசன் மறைவு - முதலமைச்சர் இரங்கல்
பீலா வெங்கடேசன் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். கோவிட் காலத்தில் சவால் மிகுந்த மருத்துவத்துறை செயலராக பணியாற்றியவர் பீலா வெங்கடேசன். பீலா வெங்கடேசனை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- Sep 24, 2025 21:20 IST
ராதிகா தாயார் மறைவு - மோடி இரங்கல்
ராதிகா சரத்குமாரின் தாயார் மறைவுக்கு இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
- Sep 24, 2025 20:34 IST
பீலா வெங்கடேஷன் மரணம்
தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளரும், ஐஏஎஸ் அதிகாரியுமான டாக்டர் பீலா வெங்கடேசன், 55, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- Sep 24, 2025 20:17 IST
பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் காலமானார்!
பீலா வெங்கடேஷன் ஐஏஎஸ் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிர்பிரிந்தது.
- Sep 24, 2025 19:48 IST
பஹல்காம் தாக்குதல் - ஜம்மு காஷ்மீரில் ஒருவர் கைது
பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு உதவிய முகமது கட்டாரியா என்பவரை கைது செய்த ஜம்மு காஷ்மீர் காவல்துறை. ஆபரேஷன் மகாதேவ் - ன் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் குறித்த விசாரணையின் அடிப்படையில் கைது ச்செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட முகமது கட்டாரியா லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
- Sep 24, 2025 19:46 IST
டிடிவி தினகரனை சந்திக்கவில்லை... அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன், எனது சொந்த வேலையாகவே சென்னைக்கு வந்தேன், யாரையும் பார்க்கவில்லை. அதிமுகவை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையை தவிர வேறு எதையும் செய்யவில்லை. நல்லதே நடக்கும் என்பதே என் நோக்கம் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் தினகரனை சந்திக்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
- Sep 24, 2025 19:19 IST
மின்வாரியம் விருப்பு வெறுப்பின்றி பணியை செய்கிறது - தமிழக மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் பதில்
தமிழக மின்சார வாரியம் விருப்பு வெறுப்பின்றி தனது பணியை செய்து வருகிறது, பிரசாரத்தின்போது மின்சாரம் தடை செய்யப்படுவதாக விஜய் குற்றச்சாட்டிய நிலையில் தமிழக மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.
- Sep 24, 2025 19:16 IST
அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி விஸ்வாசமாக இருக்கிறார? - செல்வப்பெருந்தகை பதில்
எங்கள் கட்சியை பேசக்கூடிய அருகதை, தகுதி அவருக்கு கிடையாது. நாங்கள் நாற்காலிக்கு கீழே சென்று காலை பிடித்து பதவி பெறவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
- Sep 24, 2025 18:36 IST
கூட்டணி பெயரால் காங்கிரஸுக்கு அவமரியாதை - ஜோதி மணி கண்டனம்
கூட்டணி பெயரால் காங்கிரஸ் அவமரியாதை செய்யப்படுவதை ஏற்க முடியாது. ஒரு முன்னாள் அமைச்சர் காங்கிரஸை இப்படி பொதுவெளியில் அவமதிப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது. கூட்டணி தர்மம் என்பது இரு பக்கமும் இருக்க வேண்டும். இப்படி நடப்பது முதல்முறையல்ல. கரூர் நகர் காங்கிரஸ் மகளிர் அணி தலைவரை தி.மு.க-வில் இணைத்த செந்தில் பாலாஜிக்கு ஜோதிமணி எம்.பி. கண்டனம்
- Sep 24, 2025 18:14 IST
தினகரனுடன் செங்கோட்டையன் சந்திப்பு
சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டுக்கு வந்த செங்கோட்டையன் அவரை நேரில் சந்தித்து பேசினார். இருவரும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தியதாக தகவல்
- Sep 24, 2025 17:39 IST
பொதுக்கூட்டங்களால் சேதம் - தமிழக அரசுக்கு காலக்கெடு
பொதுக்கூட்டங்களால் ஏற்படும் சேதத்திற்கான இழப்பீட்டை சம்பந்தப்பட்ட கட்சிகளிடம் வசூலிப்பது தொடர்பாக விதிமுறை வகுக்க வேண்டும். அக்டோபர் 16-ஆம் தேதிக்குள் விதிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது.
- Sep 24, 2025 17:21 IST
திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி - பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்
சமூக நீதியை உண்மையாகவே ஸ்டாலின் பின்பற்றுகிறார் என்றால், இந்த ஆட்சியில் மீதமிருக்கும் 6 மாத காலத்திற்காவது துணை முதல்வர் பதவியை திருமாவளவனுக்கு கொடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
- Sep 24, 2025 17:08 IST
திறமையான இந்தியர்கள் ஜெர்மனி வருமாறு அழைப்பு!
அமெரிக்காவின் எச்1பி விசா சர்ச்சைக்கு மத்தியில் திறமையான இந்தியர்களுக்கு ஜெர்மனி அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஜெர்மனியின் குடியேற்றக் கொள்கைகள் நம்பகமானவை என்றும் பல்வேறு துறைகளில் இந்தியர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்து ஜெர்மனி தூதரகம் வீடியோ வெளியிட்டுள்ளது.
- Sep 24, 2025 16:34 IST
ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 10 லட்சத்து 90 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
- Sep 24, 2025 16:11 IST
மாதம்பட்டி ரங்கராஜ்-க்கு போலீசார் சம்மன்
திருமண மோசடி புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ்-க்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நீலாங்கரை காவல்நிலையத்தில் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா திருமண மோசடி புகார் அளித்திருந்த நிலையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது
- Sep 24, 2025 15:57 IST
“அதிமுகவை யாரும் அடிமையாக்க முடியாது” - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக யாருக்கும் அடிமை இல்லை; அதிமுகவை யாராலும் அடிமையாக்க முடியாது. கூட்டணிக் கட்சிகளை சுயமரியாதையோடு நடத்திவரும் கட்சி அதிமுக; கூட்டணி கட்சிகளை அடிமையாக நடத்திவருகிறது திமுக; சாறை உறிஞ்சிவிட்டு சக்கையை கூட்டணிக்கு தருகிறது திமுக என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- Sep 24, 2025 15:56 IST
திமுக கூட்டணியில் பிளவு - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
1999 மக்களவைத் தேர்தல், 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்கலாம், அதிமுக கூட்டணி வைக்கக் கூடாதா? காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் கூட்டணி ஆட்சி கேட்கிறார்கள்; செல்வப்பெருந்தகை மறுக்கிறார்; திமுக கூட்டணிக்கு உள்ளேயே பிளவு ஏற்படத் தொடங்கியுள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
- Sep 24, 2025 15:26 IST
ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. தங்களை தொடர்புப்படுத்தி ஜாய்கிரிசில்டா பேச தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது; தனது சமூக வலைதள பதிவுகளால் நிறுவனத்துக்கு ரூ.11 கோடி நஷ்டம் ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லை; மாதம்பட்டி பாகாலா நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டதற்கு நான் பொறுப்பேற்க முடியாது என்று ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
- Sep 24, 2025 14:52 IST
“காற்றில் ஊழல்செய்தது திமுக”- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
“கண்ணுக்கு தெரியாத காற்றில்கூட ஊழல் செய்யும் கட்சி, திமுகதான். ஊழல் என்றால் திமுக; திமுக என்றால் ஊழல். ஊழலின் ஊற்றுக்கண் திமுக. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு, திமுக அரசு” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
- Sep 24, 2025 14:46 IST
கலைமாமணி விருது... ஸ்வேதா மோகன் உருக்கம்!
“ரசிகர்களால்தான் இது சாத்தியமானது. இசையமைப்பாளராக வேண்டும் என்பதே என் ' கனவு. 15 வருடங்களுக்கு மேலாக பாடிவரும் எனக்கு கிடைக்கப்பட்ட அங்கீகாரம் இது..” என்று கலைமாமணி விருது கிடைத்தது குறித்து பாடகி ஸ்வேதா மோகன் கூறியுள்ளார்.
- Sep 24, 2025 14:19 IST
“மன்னிப்பு கேட்டு முடிவுக்கு வாருங்கள்”- சீமான் விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு கருத்து
"இருவரும் அவரவர் கருத்துக்கு மன்னிப்பு கேட்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வாருங்கள்; இல்லையென்றால் இருவரையும் நீதிமன்றத்திற்கு வர வைக்க நேரிடும். இந்த விவகாரத்தை எத்தனை நாள் இழுப்பது? இருவரும் குழந்தைகள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். பக்குவமாக நடந்து கொள்ளுங்கள்” என்று சீமானுக்கு எதிராக நடிகை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவில் உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
- Sep 24, 2025 14:10 IST
பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு
பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 6 மாதத்தில் முதற்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சிபிசிஐடி விசாரித்து வரும் இவ்வழக்கில் 27 பேர் கைதாகி சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- Sep 24, 2025 13:29 IST
‘தி.மு.க அரசுக்கு எதிரான கருத்துகளை வெறுப்பு அரசியலாக முவைக்கிறார் விஜய்’ - திருமாவளவன் விமர்சனம்
வி.சி.க தலைவர் திருமாவளவன் பேட்டி: “பேரணி பொதுக்கூட்ட மாநாடு என்றாலே கட்டுப்பாடுகள் இருக்கும்தான். விஜக்குதான் அவையாவும் புதிதாக இருக்கிறது. எங்களுக்கு 35 வருங்கங்களாக பழகிவிட்டது. அரசோ, காவல்துறையோ நெருக்கடி தருவதாக நினைக்கவில்லை. விஜய் தான் செய்யப்போவது என்ன என்பதைவிட தி.மு.க அரசுக்கு எதிரான கருத்துகளை வெறுப்பு அரசியலாக முவைக்கிறார்” என்று விமர்சனம் செய்தார்.
- Sep 24, 2025 12:46 IST
சிலரின் கவர்ச்சியான வார்த்தைகளால் இளைஞர்கள் ஏமாற வேண்டாம் - ஸ்டாலின் அறிவுரை
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளைஞர்கள் தங்கள் இலக்குகளை நோக்கி நடைபோட வேண்டும் என்றும், கவர்ச்சியான வார்த்தைகளை கூறி பின்னுக்கு இழுக்கும் சக்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னையில் நடைபெற்ற அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "சிலர் கவர்ச்சியான சொற்களைக் கூறி, இளைஞர்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலைகளில் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிர்காலத்திற்கும், உங்களுக்கும் எது தேவையோ அதை நோக்கி நீங்கள் நடைபோடுங்கள். உங்கள் சொந்த இலக்குகளையும், முன்னேற்றத்தையும் மனதில் கொண்டு செயல்படுங்கள்" என்று அறிவுறுத்தினார்.
- Sep 24, 2025 12:36 IST
நடிகர் ரவி மோகன் இல்லத்தில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டிய வங்கி ஊழியர்கள்
நடிகர் ரவி மோகன் இல்லத்தில் வங்கி ஊழியர்கள் ஜப்தி நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டிற்கான கடன் தொகையை செலுத்தாததால் தனியார் வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஈசிஆரில் சொகுசு பங்களாவை வாங்கி மனைவியுடன் ரவி மோகன் வசித்து வந்தார். தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்த ரவி மோகன் அந்த வீட்டிற்கு செல்வதில்லை. ரவி மோகன் இல்லத்தை ஜப்தி செய்வதாக தனியார் வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
- Sep 24, 2025 12:14 IST
‘மோடி போலதான் விஜய்’ - சீமான் விமர்சனம்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “மோடி எப்படி தமிழ் பேசுகிறாரோ, எப்படி திருக்குறள் பற்றி பேசுகிறாரோ, அது போலதான் மீனவர்கள் மீதான விஜயின் அக்கறை” என்று விமர்சித்துள்ளார்.
- Sep 24, 2025 11:58 IST
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான உத்தரவு ரத்து
"பொன்னியின் செல்வன்" திரைப்படத்தின் 'வீரா ராஜா வீரா' பாடல் தொடர்பான பதிப்புரிமை வழக்கில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த வழக்கு தாசர் சகோதரர்களால் தொடரப்பட்டது.
- Sep 24, 2025 11:33 IST
சென்னையில் சீமான் பேட்டி
ஜி.எஸ்.டி சீர்திருத்தம் கொண்டு வந்தது ஏன்? நீங்களெல்லாம் என்ன ஆட்சியாளர்? என்ன தலைமை அது? பண மதிப்பிழப்பால் நடந்த ஒரேயொரு நன்மையையாவது சொல்லுங்க...
மக்களுக்கு சுமையாக இருக்கிறது என தெரிந்தும் வரியை விதித்த நீங்கள் என்ன தலைமையாளர்கள்? தங்க பிஸ்கட்டுக்கு 3 சதவீதம், குழந்தைகள் சாப்பிடும் பிஸ்கட்டுக்கு 18 சதவீதம் வரி விதிக்கிறீர்கள். இந்த நாட்டில் பிறந்ததை தவிர்த்து நாங்கள் வேறு என்ன பிழை செய்தோம்?
சென்னையில் சீமான் பேட்டி
- Sep 24, 2025 11:28 IST
3 போலீசாருக்கு ஆயுள் தண்டனை
2009ஆம் ஆண்டு கோட்டூர்புரத்தில் மதுபோதையில் தகராறு செய்த பயணி ஒருவர் காவல் நிலையம் சென்று வீடு திரும்பிய பின் மரணமடைந்தது தொடர்பான வழக்கில், மூத்த காவலர் எஸ்.ஜே. மற்றும் இரண்டு காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- Sep 24, 2025 11:08 IST
மு.க.ஸ்டாலின் - எச்.வி.ஹண்டே சந்திப்பு
மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், தற்போது பா.ஜ.க-வில் இருப்பவருமான எச்.வி.ஹண்டேவை நேரில் சந்தித்து பேசினார். ஹண்டே, அரசின் திட்டங்களைப் பாராட்டி தொடர்ந்து கடிதம் எழுதி வந்த நிலையில், முதல்வர் அவரை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.
- Sep 24, 2025 11:00 IST
உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி
நாளை (செப். 25) வட வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு நோக்கி நகர்ந்து, தெற்கு ஒரிசா - வட ஆந்திர கடலோரப் பகுதிகளில் கரையைக் கடக்கக்கூடும்
-சென்னை வானிலை ஆய்வு மையம்
- Sep 24, 2025 10:32 IST
தமிழ்நாடு அரசின் கலை வித்தகர்களுக்கான சிறப்பு விருதுகள் அறிவிப்பு
முதுகெழில் பாண்டியனுக்கு "பாரதியார் விருது", கே.ஜே.யேசுதாஸுக்கு "M.S.சுப்புலட்சுமி விருது", முத்துக்கண்ணம்மாளுக்கு "பாலசரஸ்வதி விருது" அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர்களுக்கு 3 சவரன் தங்கப் பதக்கம் மற்றும் விருது வழங்கப்படும் விருதுகளை முதல்வர் ஸ்டாலின் அடுத்த மாதம் வழங்குகிறார்.
- Sep 24, 2025 10:20 IST
கலைமாமணி விருது அறிவிப்பு
இயக்குனர், நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகை சாய் பல்லவி, இயக்குனர் லிங்குசாமி ஆகியோருக்கு 2021-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரம் பிரபுவுக்கு 2022 ஆம் ஆண்டும், நடிகர் மணிகண்டனுக்கு 2023 ஆண்டுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- Sep 24, 2025 09:47 IST
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு
2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது 30 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர்களுக்கு 3 சவரன் தங்கப் பதக்கம் மற்றும் விருதுகளை அடுத்த மாதம் வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்.
- Sep 24, 2025 09:30 IST
சென்னையில் இன்று தங்கத்தின் விலை ரூ.320 குறைவு
சென்னையில் கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.2800 அதிகரித்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று ரூ.320 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.84,800-க்கும் ஒரு கிராம் ரூ.10,600-க்கும் விற்பனையாகிறது.
- Sep 24, 2025 09:26 IST
மணிகண்டன், சாண்டி, அனிருத்துக்கு கலைமாமணி விருது
2023-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் திரைத் துறையில் நடிகர் மணிகண்டன், இசையமைப்பாளர் அனிருத், நடன இயக்குநரும் நடிகருமான சாண்டி, குணச்சித்திர நடிகர் ஜார்ஜ் மரியான், பின்னணி பாடகி ஸ்வேதா மோகன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
- Sep 24, 2025 09:18 IST
விக்ரம் பிரபு, பாடலாசிரியர் விவேகாவுக்கும் கலைமாமணி
2022ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் திரைத் துறையில் நடிகர் விக்ரம் பிரபு, ஜெயா வி.சி.குகநாதன், பாடலாசிரியர் விவேகா, டைமண்ட் பாபு, டி.லட்சுமிகாந்தன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- Sep 24, 2025 09:15 IST
SJ சூர்யா, சாய் பல்லவிக்கு கலைமாமணி விருது அறிவிப்பு
2021, 2022, மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 2021-ஆம் ஆண்டுக்கான விருதுகள் திரைப்படத் துறையில் எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, லிங்குசாமி, சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
- Sep 24, 2025 09:08 IST
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், உடனடியாக மோப்ப நாய் உதவியுடன் களத்தில் இறங்கிய போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
- Sep 24, 2025 08:54 IST
கவின் கொலை வழக்கு - விசாரணையில் புதிய தகவல்
நெல்லை ஐடி ஊழியர் கவின் ஆணவ கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணையில், காதலை கைவிட கூறி சுர்ஜித் உறவினர் ஜெயபால் கவினை தனியே அழைத்து மிரட்டல் விடுத்தது அம்பலமாகி உள்ளது. கவினை கயத்தாறு பகுதிக்கு வரவழைத்து காதலை கைவிடுமாறு மிரட்டியது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. கவின் கொலையில் சுர்ஜித்தின் தாயாருக்கு தொடர்பு உள்ளதா என சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Sep 24, 2025 08:53 IST
மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 9,425 கன அடி நீர்வரத்து
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 9425 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 119.19 அடியாகவும் நீர் இருப்பு 92.185 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணையில் இருந்து மொத்தமாக 6500 கன அடிக்கு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- Sep 24, 2025 08:36 IST
ஜி.எஸ்.டி குறைப்பு - கார் விற்பனையில் புதிய சாதனை
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு எதிரொலியாக நாடு முழுவதும் செப்.22ம் தேதி ஒரே நாளில் மாருதி சுசுகி நிறுவனம், 32,000 கார்கள் விற்பனையாகி உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் 12,000 கார்களையும், டாடா நிறுவனம் 11,000 கார்களையும் விற்பனை செய்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்தியாவில் 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கார் விற்பனை அதிகரித்துள்ளது.
- Sep 24, 2025 08:17 IST
சென்னை: கஞ்சா விற்பனை செய்த எம்பிஏ மாணவர் கைது
சென்னை ஓட்டேரியில் கஞ்சா விற்பனை செய்த எம்.பி.ஏ. மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுமன் என்பவர் கஞ்சா கொடுத்து தன்னை விற்கச் சென்னதாக போலீசில் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
- Sep 24, 2025 08:14 IST
திருப்பதியில் ஒரு மணி நேரத்தில் இலவச தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று தொடங்குகிறது. இருப்பினும், பக்தர்கள் கூட்டம் குறைவாக இருப்பதால், இலவச தரிசனத்திற்கு காத்திருக்கத் தேவையில்லை என்றும், நேரடியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 63 ஆயிரத்து 837 பக்தர்கள் தரிசனம் செய்து ரூ.2.85 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.
- Sep 24, 2025 08:12 IST
இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கிடம் இ.டி விசாரணை
ஆன்லைன் சூதாட்ட செயலி மோசடி வழக்கில், அமலாக்கத்துறை (ED) டெல்லியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது. இதே வழக்கில் இதற்கு முன்னர் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது.
- Sep 24, 2025 08:11 IST
தி.மலை தீபத் திருவிழா பூர்வாங்கப் பணிகள் தொடக்கம்
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான பூர்வாங்கப் பணிகள் செய்வதற்காக ராஜகோபுரம் அருகில் பந்தக்கால் நடும் பணி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோயிலில் உள்ள சம்பந்த விநாயகர் ஆலயத்தில் பந்தக்காலுக்கு பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நவ.24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிச.3ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயிலினுள் பரணி தீபமும், அதனை தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
- Sep 24, 2025 08:00 IST
கோவை, நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் புதன்கிழமை (செப்.24) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை(செப்.25) பலத்த மழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Sep 24, 2025 07:58 IST
கூடுதல் பெட்டியுடன் நெல்லை வந்தே பாரத் ரயில் இயக்கம்
நெல்லை - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் இன்று முதல் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் 20 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக்கம், இருக்கைகள் எண்ணிக்கை 1,128ல் இருந்து 1,440ஆக உயர்வு. இதில், 18 சேர் கார் பெட்டிகளும், 2 எக்சிகியூட்டிவ் சேர் கார் பெட்டிகளும் அடங்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us