/indian-express-tamil/media/media_files/2025/10/11/thiruma-2025-10-11-15-31-10.jpg)
Today Latest Live News Update in Tamil 10 October 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.80 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.39 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. சி.என்.ஜி. ஒரு கிலோ கிராம் ரூ.91.50 காசுகளுக்கு விற்பனையாகிறது.
16-ம் தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை: தென்மேற்கு பருவமழை 16ம் தேதி விலக இருப்பதை அடுத்து, தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை 16-18ம் தேதிகளில் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் தெரிவித்துள்ளார். தற்போது கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை, 16 அல்லது 17ம் தேதியுடன் விலகும். அதேநேரத்தில் தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வட கிழக்கு பருவமழை 16 அல்லது 18-ம் தேதிக்கு இடைப்பட்ட நாளில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Oct 12, 2025 07:17 IST
த.வெ.க உடன் கூட்டணி என வதந்தி - திருமாவளவன்
தவெகஉடன்கூட்டணிஎனஅதிமுகவதந்திபரப்புவதாகவி.சி.கதலைவர்திருமாவளவன்குற்றம்சாட்டியுள்ளார். த.வெ.கவும்வதந்திபரப்புவதாககம்யூனிஸ்ட்தலைவர்கள்விமர்சித்துள்ளனர்.
- Oct 12, 2025 00:27 IST
ஹிண்டன்பர்க் அறிக்கையால் ரூ.8.8 லட்சம் கோடி இழப்பு - கவுதம் அதானி
கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியை அதானி குழுமம் செய்துள்ளது என்று குற்றம்சாட்டி ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையின் காரணமாக $100 பில்லியன் (ரூ.8.8 லட்சம் கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக கவுதம் அதானி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Oct 11, 2025 21:45 IST
முதல்வராக 15 ஆண்டுகள் நிறைவு - சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை செல்போனில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக 15 ஆண்டுகள் நிறைவடைந்ததற்கு வாழ்த்து தெரிவித்ததாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- Oct 11, 2025 20:44 IST
சபரிமலை தங்கக் கொள்ளை - 10 பேர் மீது வழக்கு
சபரிமலை தங்கக் கொள்ளை தொடர்பாக உன்னிகிருஷ்ணன் போற்றி மற்றும் சபரிமலை ஊழியர்கள் உட்பட 10 பேர் மீது, கொள்ளை, போலி தடயங்கள் உருவாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றப் பிரிவு தலைமை அலுவலக போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- Oct 11, 2025 20:10 IST
'யு ஆர் கிரேட்' அதிபர் டிரம்ப் கைப்பட எழுதிய புகைப்படம் - மோடிக்கு வந்த பரிசு
மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் யூ ஆர் கிரேட்" என அதிபர் டிரம்ப் கைப்பட எழுதி கையொப்பமிட்ட புகைப்படத்தை பிரதமர் மோடியிடம் பரிசாக அமெரிக்க தூதர் வழங்கினார்.
- Oct 11, 2025 20:05 IST
2026 ஏப்-20.ல் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி - நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் ஏப்-20ஆம் தேதிக்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். தேர்தல் கூட்டணி குறித்து வரும் ஜன-10 ஆம் தேதிக்கு மேல் முடிவு செய்யப்படும். திமுக கூட்டணியில் விசிக - திமுக இடையே விரிசல் உள்ளது; காங்., திமுக கூட்டணியில் தொடருமா? என தெரியவில்லை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஸ்ரீவில்லிபுத்தூர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
- Oct 11, 2025 19:07 IST
கலைஞர்களின் உழைப்புக்கு அங்கீகாரம்தான் கலைமாமணி விருது - ஸ்டாலின் பேச்சு
கலைஞர்களுக்கு விருது வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையறையுள்ளார். 'உங்களது கலையை, கலைத் தொண்டை இத்தனை ஆண்டுகாலம் வெளிப்படுத்தி உள்ளீர்கள். கலைஞர்களின் உழைப்புக்கு அங்கீகாரம்தான் கலைமாமணி விருது. மூத்த கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் இளம் கலைஞர்களையும் அடையாளம் கண்டு விருது வழங்கப்பட்டுள்ளன' என்று அவர் கூறியுள்ளார்.
- Oct 11, 2025 18:27 IST
ராக்கெட் வேகத்தில் ஏறுகிறது தங்கம் விலை - விருது வழங்கும் விழாவில் ஸ்டாலின் கலகல பேச்சு
சென்னை கலைவாணர் அரங்கில் கலைமாமணி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. 2021,2022 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகின்றன. எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, உள்ளிட்ட 90 பேருக்கு கலைமாமணி விருதுகள் வழங்குகிறார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் ஒரே நாளில் 2 முறை ஏறுகிறது. தங்கப் பதக்கத்தை விட கலைமாமணி என புகழ் சேர்க்கும் பட்டத்திற்கான மதிப்பு அதிகம். ஏன்னென்றால் இது தமிழ்நாடு தருகிற பட்டம்." என்று கூறினார்.
- Oct 11, 2025 18:15 IST
கலைஞர்களுக்கு விருது வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் - ஸ்டாலின் பேச்சு
கலைஞர்களுக்கு விருது வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் கலைமாமணி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. 2021,2022 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகின்றன. எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, உள்ளிட்ட 90 பேருக்கு கலைமாமணி விருதுகள் வழங்குகிறார்.
- Oct 11, 2025 17:41 IST
கரூர் கூட்ட நெரிசல் சம்பம்: சி.பி.ஐ விசாரணை கோரிய த.வெ.க. - அக்.13ல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரிய த.வெ.க. வழக்கில் உச்சநீதிமன்றம் வரும் திங்களன்று தீர்ப்பளிக்கிறது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரி த.வெ.க. உள்ளிட்டோர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எஸ்.ஐ.டி. விசாரணையை எதிர்த்து தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல் செய்தார்.
சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்த ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக த.வெ.க சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சி.பி.ஐ விசாரணை பா.ஜ.க நிர்வாகி ஜி.எஸ்.மணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் விசாரணைக்கு வருகிறது. திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, அஞ்சாரியா அமர்வு தீர்ப்பளிக்கிறது.
- Oct 11, 2025 17:27 IST
சக்திவாய்ந்த ஐ.சி.பி.எம் ஏவுகணை - உலகிற்கு வெளிப்படுத்தியது வட கொரியா
மிகவும் சக்திவாய்ந்த ஐ.சி.பி.எம் ஏவுகணையை உலகிற்கு வட கொரியா வெளிப்படுத்தி உள்ளது.வட கொரியாவை ஆளும், கொரிய தொழிலாளர் கட்சியின் 80வது ஆண்டு விழாவை ஒட்டி நடந்த ராணுவ அணிவகுப்பில் முதல்முறையாக ஹ்வாசோங்-20 ஏவுகணை காட்சிப்படுத்தப்பட்டது.
- Oct 11, 2025 16:59 IST
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,280 உயர்வு
தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.680 உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.600 உயர்ந்துள்ளது ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.92,000க்கு விற்பனை; கிராம் ரூ.160 உயர்ந்து ரூ.11,500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- Oct 11, 2025 16:24 IST
“உரத்திற்கான மானியம் மட்டும் ரூ.13 லட்சம் கோடி” - பிரதமர் மோடி
காங்கிரஸ் அரசு ஒரு வருடத்தில் விவசாயத்திற்காக செலவிட்ட தொகை, எங்கள் அரசு விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் டெபாசிட் செய்வதை விடக் குறைவு. பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.13 லட்சம் கோடிக்கும் அதிகமான உர மானியங்களை வழங்கியுள்ளது என்று டெல்லியில் பிரதமர் மோடி பேசியபோது கூறியுள்ளார்.
- Oct 11, 2025 16:23 IST
திருமாவளவன் சந்தேகம் நியாயமானது - கமல்
திருமாவளவன் சந்தேகம் நியாயமானது; இயக்குநர் பா.ரஞ்சித்தின் அக்கறை உண்மையானது. திருமாவளவன் சென்ற கார் வழிமறிக்கப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறை விசாரணையை வேகப்படுத்த வேண்டும்; அவரது பாதுகாப்பை அதிகரிக்க தமிழ்நாடு அரசு ஆவன செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் மநீம தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
- Oct 11, 2025 16:17 IST
சென்னை, கோவையில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: பொது சுகாதாரத்துறை அறிவிப்பு
சென்னை, கோவை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொசு அதிகமாக உள்ள பகுதிகளில் மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார். ஒரே இடத்தில் அதிக பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்தால் தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தினார். 4 நாள்களாகியும் காய்ச்சல் குறையாவிட்டால் உடனடியாக தேவையான சிகிச்சை பெற வேண்டும் என்றும் சோமசுந்தரம் தெரிவித்தார். அரசு, தனியார் மருத்துவமனைகளில் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் சோமசுந்தரம் என்றும் சோமா சுந்தரம் தெரிவித்துள்ளார்.
- Oct 11, 2025 15:44 IST
அறநிலையத்துறை ஆணையர் பதில்தர கோர்ட் கிளை ஆணை
பிரசித்தி பெற்ற கோயில்களில் தரிசன பதிவுக்கு பயோமெட்ரிக் ஓ ஆர் முறையை கொண்டு வரக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்துசமய அறநிலையத் துறை செயலர் மற்றும் ஆணையர் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணையிட்டது.மேலும், 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
- Oct 11, 2025 15:39 IST
ஜாதிப் பெயர்களை நீக்குவதை இ.பி.எஸ் பழனிசாமி சிறுமைப்படுத்தி பேசுகிறார்: தங்கம் தென்னரசு கண்டனம்
ஜாதிப் பெயர்களை நீக்குவதை எடப்பாடி பழனிசாமி சிறுமைப்படுத்தி பேசுகிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த பெயரைதான் வைக்க வேண்டுமென அரசாணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. குறிப்பிட்ட தலைவர்களின் பெயரைத்தான் வைப்பதாக எடப்பாடி சொல்வது தவறானது. கோவை மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயரை வைத்ததை குறையாக சொல்வதா?.ஜி.டி.நாயுடு பாலம் என்று வைத்தால்தான் அவர் யார் என்பதை அறிய முடியும். ஜி.டி.நாயுடு பாலம் என்பதை ஜி.டி. பாலம் என்று எப்படி வைக்க முடியும். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சிலர் ஜி.டி.நாயுடு பெயரை வைத்ததை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
- Oct 11, 2025 15:25 IST
டெல்லியில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை
மத்தியப்பிரதேசத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்த 19 குழந்தைகள் பலியான சம்பவம். ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் மருந்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் டெல்லியிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- Oct 11, 2025 15:23 IST
20 வால்வோ பேருந்துகளை கொள்முதல் செய்ய அரசு முடிவு
வரும் டிசம்பர் மாதத்துக்குள் முதற்கட்டமாக 20 வால்வோ பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. பயணிகளின் வசதிக்காகவும் பாதுகாப்புக்காவும் வால்வோ பேருந்துகளை வாங்க அரசு முடிவு செய்துள்ளது.
- Oct 11, 2025 15:10 IST
மூத்த சினிமா ஒளிப்பதிவாளர் பாபு காலமானார்
தமிழ் சினிமாவின் மூத்த ஒளிப்பதிவாளர் ஆனந்த் கிருஷ்ணன் என்ற பாபு(88) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக ஆனந்த் கிருஷ்ணன் என்ற பாபு மருத்துவமனையில் காலமானார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். முரட்டுக்காளை, பாயும் புலி, சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
- Oct 11, 2025 15:10 IST
கோ கலர்ஸ் ஆடையகத்தில் ஐ.டி. சோதனை நிறைவு
கோ கலர்ஸ் ஆடையகத்தின் உரிமையாளர் வீடுகளில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பிரகாஷ், அவரது சகோதரர் வீடுகளில் 5 நாட்கள் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது.
- Oct 11, 2025 14:35 IST
இறைமகன் இயேசு மேல் ஆணையாக எவரோடும் கூட்டணி கிடையாது -சீமான் திட்டவட்டம்
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
- Oct 11, 2025 13:48 IST
வழக்கறிஞரை தாக்கிய வி.சி.க தொண்டர்கள்- திருமாவளவன் விளக்கம்
சமீபத்தில் உயர்நீதிமன்றம் அருகே வி.சி.க தொண்டர்கள் வழக்கறிஞர் ஒருவரை தாக்கினர். அந்த வழக்கறிஞர் வி.சி.க தொண்டர்களிடம் திமிராக பேசியதால் தான் அவர்கள் தாக்கியதாக திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
- Oct 11, 2025 13:27 IST
ஆப்கானியர்களின் தைரியத்தை சோதிக்க வேண்டாம்- பாகிஸ்தானுக்கு தாலிபான் அரசு எச்சரிக்கை
ஆப்கானிஸ்தானுடன் விளையாடினால் என்ன ஆகும் என சோவித் யூனியன், அமெரிக்கா, நேட்டோவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர்கான் முட்டாகி பேச்சு.
- Oct 11, 2025 12:58 IST
மகளிர் உரிமைத் தொகையா? அல்லது மகளிரை இழிவுபடுத்தும் தொகையா? நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்சி அரியணை ஏறும் முன் அனைவருக்கும் வழங்கப்படும் என்று கூறிவிட்டு, ஆட்சி அமைத்ததும் "தகுதியற்றவர்கள்" என்று சிலரை முத்திரை குத்துவது தான் திராவிட மாடல் சமத்துவமா?
இத்திட்டத்தின் பயனாளிகளை அநாகரீகமாக விமர்சித்து திமுகவினர் புளகாங்கிதம் அடையும் வேளையில், இது உண்மையிலேயே மகளிர் உரிமைத் தொகையா? அல்லது மகளிரை இழிவுபடுத்தும் தொகையா?
மகளிர் உரிமைத் தொகையா அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா முதல்வர் திரு. @mkstalin அவர்களே?
— Nainar Nagenthran (@NainarBJP) October 11, 2025
2021 தேர்தலுக்கு முன் அனைத்து மகளிருக்கும் மாதம் ₹1000 உரிமைத் தொகையாக வழங்கப்படும் என்று கூறிவிட்டு 2023 ஆம் ஆண்டு வரை கிடப்பில் போட்டது ஏன்?
30 மாதங்கள் வழங்காமல், 2024 பாராளுமன்றத்… pic.twitter.com/r6POvDQjfs - Oct 11, 2025 12:45 IST
சிபிஐ விசாரணை தேவை
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை மட்டுமே உண்மையைக் வெளிக்கொண்டுவரும். கரூர் சம்பவத்தை வைத்து ஆளுங்கட்சி, அதன் கூட்டணி கட்சிகள் அரசியல் செய்கின்றன
- ஜி.கே.வாசன்
- Oct 11, 2025 12:38 IST
கரூர் சம்பவம்: தவெக மாவட்ட செயலாளரிடம் விசாரணை
கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சேலம் மத்திய மாவட்ட தவெக செயலாளர் பார்த்திபன் மற்றும் பிரசாரத்திற்கு சவுண்ட் சர்வீஸ் அமைத்த ஆடியோ இன்ஜினியர்களும் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரணையில் ஆஜராகினர்.
- Oct 11, 2025 12:37 IST
அதிமுக தொண்டர்கள் எங்க கட்சி கொடியவே பிடிக்க மாட்டாங்க: செல்லூர் ராஜு
"அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கள் கட்சி கொடியை வேறு எங்கும் பிடிக்க மாட்டார்கள். இதெல்லாம் அடுத்த கட்சி கொடியை பிடித்ததா? அ.தி.மு.க. தொண்டர்கள் மாற்றுக் கட்சி கொடியை பிடித்ததாக வரலாறே கிடையாது"
இ.பி.எஸ். பரப்புரையில் த.வெ.க. (விஜய் கட்சி) கொடியைப் பிடித்ததாக வெளியான செய்திக்கு செல்லூர் ராஜு பதில்
- Oct 11, 2025 12:32 IST
த.வெ.க.வுடன் கூட்டணி - அதிமுக பரப்பும் வதந்தி – திருமாவளவன்
எனக்கு மக்கள் பாதுகாப்பு போதும், Z+ பாதுகாப்பு தேவையில்லை.
தவெகவுடன் கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி.
தவெகவை (விஜய் கட்சி) ஏற்றுக்கொண்டு பா.ஜ.க.வை கழற்றிவிடத் தயாராகிவிட்டதா அதிமுக? பா.ஜ.க.வை அதிமுக கழற்றிவிடும் என்றால், கூட்டணி வைக்க நம்பகத்தன்மையற்ற கட்சியாக அதிமுக மாறிவிடும்.
-திருச்சியில் திருமாவளவன் பேட்டி
- Oct 11, 2025 12:16 IST
ராஜஸ்தானில் பாகிஸ்தான் உளவாளி கைது
ராஜஸ்தானில் பாகிஸ்தான் உளவாளி மங்கத் சிங் ஹனி டிராப் மூலம் கைது செய்யப்பட்டார். இஷா ஷர்மா என்ற போலிப் பெயரைக் கொண்ட பாகிஸ்தான் பெண் ஏஜென்டிற்கு, மங்கத் சிங் அல்வார் கண்டோன்மென்ட் பகுதி பற்றிய ரகசியங்களை உளவு பார்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
- Oct 11, 2025 11:54 IST
நாட்டின் முதுகெலும்பு கிராமங்களே: கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் உரை
நம் நாட்டின் முதுகெலும்பும் கிராமங்கள்தான்; விடுதலை இந்தியாவின் வலிமை கிராமங்கள் எனக் காந்தி கூறினார்; கிராமப் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும், நிர்வாகங்கள் வலிமையாக இருக்க வேண்டும் என்றே திட்டங்கள் தீட்டியுள்ளோம்.
இத்திட்டங்கள்தான் தமிழ்நாடு கிராம ஊராட்சிகளின் மேம்பாட்டிற்கு அடிப்படை; முதல்வராக 3வது முறையாக கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன்.
- கிராம சபை கூட்டத்தில் காணொளிக் காட்சி மூலம் ஸ்டாலின் உரை
- Oct 11, 2025 11:52 IST
குடிசையே இல்லாத தமிழ்நாடு: கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் உரை
கிராம சபைக் கூட்டங்கள் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணர வைக்கும் தருணம். கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்க உரிய உரிமைகளை அளிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அதற்காகத்தான் ஆண்டுதோறும் 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
கிராமங்களின் தேவைகள், வளர்ச்சி இலக்குகள், நலன் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் விழா. குடியிருப்பு, சாலை, நெருக்கடிகளில் சாதிப் பெயர்களை நீக்கி பொதுப் பெயர்களை வைக்க நடவடிக்கை. கிராம சபையில் மக்கள் ஆலோசித்து 3 முக்கிய தேவைகளைத் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
குடிசையே இல்லாத தமிழ்நாடு இலக்கை எட்ட இதுவரை 99,453 வீடுகள் கட்டிக் முடிக்கப்பட்டு வழங்கப்பட்டன.
- கிராமசபை கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் ஸ்டாலின் உரை
- Oct 11, 2025 11:41 IST
சமையல் கேஸ் லாரிகள் வேலை நிறுத்தம்: உயர்நீதிமன்றத்தில் மனு
சமையல் கேஸ் டேங்கர் லாரிகள் நடத்தி வரும் வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி இந்தியன் ஆயில் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. எல்பிஜி என்பது அத்தியாவசியப் பொருள், அதை விநியோகம் செய்யாமல் இருப்பது சட்டவிரோதம் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் மனுவில் தெரிவித்துள்ளது.
தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், 1,500 லாரிகளுக்கு ஓட்டுநர் / உதவியாளரை நியமிக்கக் கோரி, 3ஆம் நாளாக வேலைநிறுத்தத்தைத் தொடர்கின்றனர். 5,500 சமையல் கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படாததால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்பிஜி விநியோகம் செய்யும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்திற்கு அரசு உத்தரவு அளிக்குமாறு மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
- Oct 11, 2025 11:32 IST
ஊராட்சி தலைவர்களுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுரை
ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் படிப்பதை உறுதி செய்ய வேண்டும். குழந்தை தொழிலாளர்களாக ஈடுபடுத்தினால் மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் கூறி மீட்க வேண்டும்.
- ஊராட்சி தலைவர்களுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுரை
- Oct 11, 2025 11:31 IST
10,000க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை இணைந்து கிராம சபைக் கூட்டம் நடத்துவது இதுவே முதல்முறை
இந்தியாவில் எந்த முதலமைச்சரும் இதுபோன்று கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றதில்லை. தமிழ்நாட்டிலேயே 10,000க்கும் மேற்பட்ட ஊராட்சி நிலையங்களை இணையம் மூலமாக இணைத்துக் கிராம சபைக் கூட்டம் நடத்துவது இதுவே முதல்முறை
- கிராம சபை கூட்டங்களில் மு.க.ஸ்டாலின் உரை
- Oct 11, 2025 11:29 IST
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை இன்று திறப்பு
இந்தியாவில் முதல்முறையாக ரூ.53 கோடியில் சர்வதேசத் தரத்தில் கட்டப்பட்டுள்ள கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை இன்று மாலை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்.
- Oct 11, 2025 11:12 IST
அனில் அம்பானியின் உதவியாளர் கைது
பண மோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் பாலாவை கைது செய்தது அமலாக்கத்துறை. அசோக் பாலா, ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தில் இருந்து நிதியைத் திசை திருப்புவதிலும், பொதுத் துறை நிறுவனமான SECI-ஐ (Solar Energy Corporation of India) மோசடியில் சிக்கவைக்க முக்கியப் பங்காற்றியதாகவும் அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
- Oct 11, 2025 11:09 IST
இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம்
ஜம்மு காஷ்மீர், கிஷ்த்வார் மலைத்தொடரில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது, லான்ஸ் ஹவில்தார் பாலாஷ் கோஷ் மற்றும் லான்ஸ் நாயக் சுஜய் கோஷ் ஆகிய இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
- Oct 11, 2025 11:03 IST
தமிழ்நாடு காவல்துறை மீது மக்களுக்கு நம்பகத்தன்மை போய்விடும்
திருவண்ணாமலை: "தமிழ்நாடு காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும் என்ற கருத்தின் அடிப்படையில்தான் சிபிஐ விசாரணை தேவை இல்லை என அரசு மேல்முறையீடு செய்திருக்கும்."
- கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு எதிராக அரசின் மேல்முறையீடு தொடர்பாக டிடிவி தினகரன் கருத்து.
- Oct 11, 2025 10:58 IST
பழனிசாமிக்கு துரோகத்தைத் தவிர ஒன்றும் தெரியாது- டிடிவி
அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால், பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி கழற்றிவிடுவார்.
"எங்கள் தலைமையில்தான் ஆட்சி அமையும்" என விஜய் சொல்கிறார்;
பழனிசாமி அதற்குத் தயாராகிவிடுவாரா? விஜய் தலைமையையேற்கும் வகையில் அதிமுக பலமடைந்துவிட்டதா?பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதும் அவரைப் பேசிய எடப்பாடி பழனிசாமி இப்போது நன்றியுடன் இருப்பதாகச் சொல்கிறார். பழனிசாமி நம்பகத்தன்மையற்றவர்; துரோகத்தைத் தவிர அவருக்கு ஒன்றும் தெரியாது.
உரிமைகளை விட்டுத்தரக் கூடாது என்பதற்காகவே சிபிஐ விசாரணை கோரிய வழக்குகளில் தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறது. இப்படி கூறுவதால் திமுகவை நான் ஆதரிப்பதாகச் சொல்ல வேண்டாம்"
- டிடிவி தினகரன்
- Oct 11, 2025 09:50 IST
இட்லியை சிறப்பிக்கும் வகையில் ’டூடுல்’ வெளியிட்ட கூகுள்
தென்னிந்திய உணவில் மிகவும் முக்கியமான இட்லியை கொண்டாடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது. இட்லியின் மகத்துவம் மற்றும் அதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.
- Oct 11, 2025 09:33 IST
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்வு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.91,400-க்கும், கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.11,425-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Oct 11, 2025 09:19 IST
ஐகோர்ட் அருகே நடந்த சம்பவம் குறித்து திருமா பேச்சு
சென்னை உயர்நீதிமன்றம் அருகே தாம் சென்ற கார், ஸ்கூட்டர் மீது இடித்ததாக கூறப்படும் சம்பவத்தில், ஸ்கூட்டரில் சென்றவர் திமிராக முறைத்து பார்த்ததால்தான் தங்களது கட்சியினர் அடித்தார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இதனை கூறினார். அடங்க மறு என்று தான் தாம் கூறியிருப்பதாகவும், எந்த இடத்திலும் வன்முறையை தூண்டியதில்லை என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.
- Oct 11, 2025 08:44 IST
நாளை நடக்கிறது முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு
தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்க உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 809 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வுக்கு வரும் ஆசிரியர்கள் அதற்காக தங்களை தயார்படுத்தி கொண்டு வரும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
- Oct 11, 2025 08:41 IST
தீபாவளி - ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 17 மற்றும் 18ம் தேதிகளில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை-கோவை இடையே வழக்கமாக ரூ.600-ரூ.900 ஆக இருந்த டிக்கெட் கட்டணம் ரூ.2000-ரூ.3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையில் இருந்து மதுரை செல்ல ஆம்னி பேருந்து டிக்கெட் கட்டணம் ரூ.2000-ரூ.3200ஆக உயர்ந்துள்ளது. சென்னை - நெல்லை ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.3,500, ஏ.சி. இருக்கை கட்டணம் ரூ.2,700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
- Oct 11, 2025 08:27 IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 29,540 கனஅடியாக உயர்வு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,033 கன அடியில் இருந்து 29,540 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக 12,000 கன அடியும் கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக 500 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் மட்டம் 112.48 அடியாகவும் நீர் இருப்பு 81.98 டி.எம்.சி உள்ளது.
- Oct 11, 2025 08:20 IST
ரயிலில் பட்டாசுகள் கொண்டு சென்றால் 3 ஆண்டு சிறை
ரயில்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றால் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
- Oct 11, 2025 08:02 IST
தீபாவளி முடிந்து சொந்த ஊர் திரும்ப 4 சிறப்பு ரயில்கள்
தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர்கள் திரும்பும் 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை துவங்கும் உள்ளதாகவும், அக்.21, அக்.22ம் தேதிகளில் நெல்லை - செங்கல்பட்டு இரு மார்க்கத்திலும் 1 சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்.19ம் தேதி போத்தனூர் - சென்னை சென்றடையவும், அக்.20ம் தேதி சென்னை - மங்களூருவுக்கும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அக்.21ம் தேதி திருவனந்தபுரம் - எழும்பூருக்கும், 22ம் தேதி மறு மார்க்கத்திலும் ஒரு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
- Oct 11, 2025 07:58 IST
அமெரிக்க ராணுவ ஆயுத ஆலையில் விபத்து; 19 பேர் பலி?
அமெரிக்காவின் தெற்கே டென்னஸ்ஸி மாகாணத்தின் ராணுவ வெடிபொருள் ஆலையில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சத்தம் பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மக்களுக்கும் கேட்டுள்ளது. இதனால், வீடுகள் குலுங்கின. சிலர் வெடிவிபத்து ஏற்பட்ட காட்சிகளை அவர்களுடைய கேமராவில் படம் பிடித்தனர். இதில், 19-க்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்டனர். அவர்களை காணவில்லை. இந்த வெடிவிபத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விவரம் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. ஆனால், 19 பேரும் உயிரிழந்து இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
- Oct 11, 2025 07:44 IST
7 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் பட்டாசு வெடிக்க அனுமதி
தீபாவளியை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 5 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் பண்டிகைகளை கொண்டாடும் விதமாக தடையை தளர்த்தலாம் என மத்திய அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் டெல்லி மக்களும், பட்டாசு விற்பனையாளர்களும் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.