Chennai News Highlights: தனது கடமையை உறுதியுடன் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Tamil Nadu Latest News live Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu Latest News live Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
stalin

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

புதிய துணை ஜனாதிபதி யார்? இன்று தேர்தல்: 

துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய துணை ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மகாராஷ்டிரா கவர்னர் சி. பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்தியா கூட்டணி சார்பில் தெலுங்கானாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.

துணை ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க, நாடாளுமன்றத்தின் 2 அவைகளின் எம்.பி.க்கள் வாக்களிப்பார்கள். மக்களவையில் 542 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 228 எம்.பி.க்களும் (12 நியமன எம்.பி.க்கள் உட்பட) என மொத்தம் 782 எம்.பி.க்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். வெற்றி பெற 392 வாக்குகள் தேவை.

பா.ஜ.க. கூட்டணிக்கு 422 எம்.பி.க்கள் பலம் இருந்ததாலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 11 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்ததாலும் சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு 433 வாக்குகள் கிடைப்பது உறுதியாகி உள்ளது. எனவே, அவர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தல் நாடாளுமன்ற வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட உள்ளன.

Advertisment
Advertisements
  • Sep 09, 2025 22:46 IST

    தனது கடமையை உறுதியுடன் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    துணைக் குடியரசு தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அரசியலமைப்பு மற்றும் நாட்டின் ஜனநாயக கொள்ளைகளுக்கான, தனது கடமையை உறுதியுடன் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • Sep 09, 2025 21:27 IST

    குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சகோதரர் வாழ்த்து

    40 ஆண்டுகால அரசியல் பொது வாழ்விலிருந்து இந்த நிலையை அவர் அடைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது பணி சிறக்க வாழ்த்துகள்” குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற தன் இளைய சகோதரர் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு, சி பி குமரேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • Sep 09, 2025 20:33 IST

    தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை தேர்வு செய்ததற்கு பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ் நன்றி

    தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளராகத் தேர்வு செய்தமைக்கு மாண்புமிகு இந்தியப் பிரதமர் மோடி,  பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுக்கும்,  தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த  வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என இ.பி.எஸ் பதிவிட்டுள்ளார்.



  • Sep 09, 2025 19:49 IST

    ‘இசைஞானி’ இளையராஜா பெருமிதம்

    தமிழ்நாடு அரசு சார்பில் வரும் 13ம் தேதி நடைபெறவுள்ள பாராட்டு விழா குறித்து ‘இசைஞானி’ இளையராஜா பெருமிதம் தெரிவித்துள்ள இளையராஜா, “உங்களுக்கெல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளதோ அதே மகிழ்ச்சி தான் எனக்கும் உள்ளது என்று கூறியுள்ளார்.



  • Sep 09, 2025 19:47 IST

    குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எத்தனை?

    சி.பி. ராதா கிருஷ்ணன் 452 வாக்குகளும், சுதர்ஷன் ரெட்டி 300 வாக்குகளும் பெற்றுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு



  • Sep 09, 2025 19:12 IST

    "சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் பணியில் இருக்கக்கூடாது" - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

    "பள்ளிகளில் சாதிய வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் பள்ளிகளில் பணிபுரிய கூடாது. ஆசிரியர் உடனடியாக வேறு பள்ளிக்கு மாற்றப்பட வேண்டும். மாணவர்களின் சாதிய அடையாளங்கள் ரகசியம் காக்கப்பட வேண்டும்" என்று மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 



  • Sep 09, 2025 18:54 IST

    காசா படுகொலைகளுக்கு எதிர்ப்பு-  இஸ்ரேல் சினிமா விழாக்கள் புறக்கணிப்பு 

    காசாவில் நடைபெறும் படுகொலைக்கு உடந்தையாக இருப்பதாகக் கூறி, இஸ்ரேல் சினிமா அமைப்புகளைப் புறக்கணிக்கப் போவதாக 1800க்கும் மேற்பட்ட உலக சினிமா பிரபலங்கள் அறிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு எதிராக உலக அளவில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

    இந்தச் சூழலில், எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப் பல தரப்பினரும் இஸ்ரேல் மீது பொருளாதார மற்றும் கலாசாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த மாதம் கூட, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த 200 எழுத்தாளர்கள் இஸ்ரேலுக்கு முழுமையான புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, தற்போது உலகப் புகழ்பெற்ற திரைப்படக் கலைஞர்கள் இஸ்ரேலுக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளனர்.



  • Sep 09, 2025 18:38 IST

    குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் - வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

    இன்று நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. வாக்குச்சீட்டு முறையில் நடந்த இத்தேர்தலில் 767 எம்.பி.க்கள் வாக்களித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஜு ஜனதா தளம், பி.ஆர்.எஸ்., சிரோன்மணி அகாலி தளம் ஆகிய கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. 



  • Sep 09, 2025 18:29 IST

    இ.பி.எஸ் சூறாவளி சுற்றுப்பயணம் - தம்பிதுரை

    "எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் தலைமையில் ஒன்றுபட்ட இயக்கமாக உள்ள அ.தி.மு.க-வை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இ.பி.எஸ்-ன் முடிவுதான் சரியான முடிவு, அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி. நாங்கள் இ.பி.எஸ் தலைமையில் கட்டுக்கோப்புடனும், ஒற்றுமையாகவும் உள்ளோம். அ.தி.மு.க பொதுக்குழு, செயற்குழு அதிகாரத்தின் படி இ.பி.எஸ் செயல்பட்டு வருகிறார்." என்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க எம்.பி., தம்பிதுரை தெரிவித்துள்ளார். 



  • Sep 09, 2025 18:01 IST

    நேபாள அதிபர் ராஜினாமா 

    நேபாள பிரதமரை தொடர்ந்து அதிபரும் ராஜினாமா செய்துள்ளார். வன்முறை எதிரொலியாக நேபாள பிரதமரை தொடர்ந்து நேபாள
    அதிபர் ராம் சந்திர பவுடேல் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 

     



  • Sep 09, 2025 17:42 IST

    குடியரசு துணை தலைவர் தேர்தல் நிறைவு - சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை 

    குடியரசு துணை தலைவர் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி போட்டியிட்டனர். காலை 10 மணி அளவில் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிந்தது. இன்னும் சற்று நேரத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



  • Sep 09, 2025 16:56 IST

    ஈஷா மையத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    ஈஷா மையத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை ஈஷா மையத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஏற்பாடு செய்யாமல் விழாக்கள் நடத்த தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் தனது விவசாய நிலம் பாதிக்கப்படுவதாக சிவஞானம் வழக்கு தொடர்ந்திருந்தார்.கால்நடைகள், மக்களுக்கு பாதிப்பு, நிலத்தடி நீர் மாசடைவதாகவும் சிவஞானம் தரப்பு மனு தாக்கல் செய்திருந்தது.கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது, அனுமதிக்கப்பட்ட அளவில்தான் ஒலி அளவு உள்ளது என ஈஷா மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Sep 09, 2025 16:40 IST

    என் படங்களை பயன்படுத்த தடை விதியுங்கள் - நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கு

    "என் அனுமதியின்றி என் பெயர், படம், குரல் உட்பட எந்தவொரு விவரத்தையும் பயன்படுத்த இணையதளங்கள், சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் தனிநபர்களுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கு பதிவிட்டுள்ளார். 



  • Sep 09, 2025 16:25 IST

    நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் - தீ வைக்கப்பட்ட நாடாளுமன்றம், பிரதமர் இல்லம்

    நேபாள் நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள ஒரே விமான நிலையமும் மூடல். விமான நிலையம் அருகே தீ வைப்பு சம்பவங்கள் தொடர்ந்ததால் நடவடிக்கை என்று தங்கள் வெளியாகியுள்ளது. 



  • Sep 09, 2025 15:20 IST

    காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் மீதான கைது உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

    அடிதடி வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை என தொடரப்பட்ட வழக்கில் காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவு அளித்துள்ளது. டி.எஸ்.பி. சங்கர் கணேஷை விடுதலை செய்யவும் மனுதாரருக்கு எதிரான விசாரணைக்கும் தடை விதித்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.



  • Sep 09, 2025 15:03 IST

    மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் சகோதரி சென்னையில் காலமானார்

    மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் சகோதரி, மருத்துவர் விஜயலட்சுமி (78) சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். இறுதி சடங்கு மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நாளை (10.09.2025) நடைபெறவுள்ளது.



  • Sep 09, 2025 14:33 IST

    வெளிநாட்டு முதலீடு எவ்வளவு? வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் - இ.பி.எஸ்

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “வெளிநாட்டு முதலீட்டுகள் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 5 முறை வெளிநாட்டு பயணம், முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன? 

    எவ்வளவு முதலீடு வந்துள்ளன? எவ்வளவு தொழில்கள் தொடங்கப்பட்டன? என வெளிப்படையாக சொல்லாதது ஏன்? தமிழ்நாடு முதலீட்டு வழிக்காட்டி நிறுவன இணையத்திலோ தொழில்துறை இணையத்திலோ வெளியிடாதது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Sep 09, 2025 14:26 IST

    துணை ஜனாதிபதி தேர்தல்: “இந்தத் தேர்தல் எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது” - சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி

    குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க வந்த சிவசேனா (உத்தவ் பால் தாக்கரே அணி) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, "பா.ஜ.க ஜனநாயகத்தின் ஆன்மாவைக் கொலை செய்ய முயற்சித்துள்ளது. இந்தத் தேர்தல் எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் துணைத் தலைவரின் பதவிக்காலத்தைக் குறைத்துவிட்டனர். அரசியலமைப்பின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் பி. சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிப்பார்கள், ஏனெனில் அவர் தனது வாழ்க்கையை அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்காக செலவிட்டுள்ளார்," என்று கூறினார்.



  • Sep 09, 2025 14:23 IST

    நேபாள பிரதமர் ஒலி ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களால் ராஜினாமா; காத்மாண்டு விமான நிலையம் மூடல்

    நேபாளத்தில் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.

    நேபாளத்தில் கடந்த இரு நாட்களாக ஊழலுக்கு எதிராக இளைஞர்கள் போராடி வருகின்றனர். போராட்டங்கள் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், நாட்டின் முக்கியப் பகுதிகளான காத்மாண்டு, பொக்காரா, புட்வால், தாரன், கோரகி உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



  • Sep 09, 2025 13:56 IST

    “பா.ஜ.க அரசின் அடையாளம் அடக்குமுறை; அ.தி.மு.க அரசின் அடையாளம் அடிமைத்தனம்” - உதயநிதி ஸ்டாலின்

    காஞ்சிபுரத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஒவ்வொரு அரசுக்கும் ஒரு அடையாளம் இருக்கும், ஒன்றிய பா.ஜ.க அரசின் அடையாளம் அடக்குமுறை. அ.தி.மு.க அரசின் அடையாளம் அடிமைத்தனம், ஆனால் நமது திராவிட மாடல் அரசு முன்னேற்றம், சமூக நீதிக்காக செயல்படுகிறது” என்று கூறினார்.



  • Sep 09, 2025 13:49 IST

    அ.தி.மு.க-வில் இருந்து யார் பிரிந்து சென்றாலும் பின்னடைவில்லை - முன்னாள் அமைச்சர் வளர்மதி 

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி,  “அ.தி.மு.க-வில் இருந்து யார் பிரிந்து சென்றாலும் பின்வாங்கப்போவதில்லை. அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் எனக்கூறும் அந்த 4 பேரும் முதலில் இணையட்டும். இது எம்.ஜி.ஆர் போட்ட விதை. அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் உள்ளோம்” என்று கூறினார்.



  • Sep 09, 2025 13:46 IST

    நேபாளத்தில் பிரதமர், அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைப்பு 

    நேபாள அதிபர் ராம் சந்திர பவுடல் வீட்டிற்கு தீ வைப்பு, செனாபா பகுதியில் உள்ள நேபாள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கும் தீ வைப்பு, ராஜினாமா செய்த உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டது. சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கப்பட்ட நிலையில் தொடரும் போராட்டம், வன்முறை தொடரும் நிலையில் மேலும் 2 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.



  • Sep 09, 2025 13:31 IST

    தேர்தல் ஆணையத்திற்கு எதிரான மனு ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி - ஐகோர்ட் உத்தரவு

    கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் வெங்கட சிவக்குமார் ஆகியோர் தொடர்ந்த மனுவில், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்ததாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தனர். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கு விளம்பர நோக்கத்திற்காகத் தொடரப்பட்டதாகக் கருதி, மனுதாரர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.



  • Sep 09, 2025 13:28 IST

    செப்டம்பர் 13-ம் தேதி இசைஞானிக்கு பாராட்டு விழா - தமிழக அரசு அறிவிப்பு

    இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப்பணிக்குத் தமிழக அரசு பாராட்டு விழா நடத்தவுள்ளது. வரும் செப்டம்பர் 13ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5:30 மணிக்கு இந்த விழா நடைபெற உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும், வெளிநாட்டு இசைக் கலைஞர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். இளையராஜாவின் இசைப்பணியைப் பாராட்டும் வகையில் இந்த விழா தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



  • Sep 09, 2025 13:08 IST

    த.வெ.க தலைவர் விஜய் சுற்றுப்பயணம் - அட்டவணை வெளியீடு

    த.வெ.க தலைவர் விஜய் மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்திற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற 13 ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்



  • Sep 09, 2025 12:43 IST

    ஸ்டாலின் தலைமையில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்

    தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கூட்டம் தொடங்கியுள்ளது. இணைய வழியில் நடைபெறும் இக்கூட்டத்தில் தி.மு.க முப்பெரும் விழா குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது



  • Sep 09, 2025 12:34 IST

    பெயர், படத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் – ஐஸ்வர்யா ராய்

    தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கு தொடர்ந்துள்ளார். டி சர்ட், பாத்திரங்கள், ஜாரில் ஐஸ்வர்யா ராய் புகைப்படம் பயன்படுத்த தடை விதிக்க உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி உறுதி அளித்துள்ளார்



  • Sep 09, 2025 12:18 IST

    போலி மருத்துவர்களின் சொத்துக்களை முடக்க பரிந்துரை

    போலி மருத்துவர்களின் சொத்துக்களை முடக்க தமிழக அரசுக்கு, தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் கடிதம் எழுதியுள்ளது. போலி மருத்துவர்களை கட்டுப்படுத்த, சொத்துக்களை முடக்கினால் மட்டுமே தீர்வு ஏற்படும் என தமிழக அரசுக்கு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் மருத்துவர் சித்ரா கடிதம் எழுதியுள்ளார்



  • Sep 09, 2025 12:12 IST

    ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை நிறுத்தி வைப்பு

    சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது 



  • Sep 09, 2025 11:59 IST

    விஜயலட்சுமி பாலியல் புகார் வழக்கு

    விஜயலட்சுமி பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று விஜயலட்சுமி உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.



  • Sep 09, 2025 11:56 IST

    வேலை கேட்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது: அமைச்சர் ராஜகண்ணப்பன்

    தமிழ்நாட்டில் வேலை கேட்டு வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பாஜகவோடு இணக்கமாக போவது பிரச்சனை இல்லை; ஆனால் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்; நிதிநிலை மோசமாக இருந்தாலும் மக்களின் அடிப்படை தேவைகளை அரசு நிறைவேற்றுகிறது.

    அமைச்சர் ராஜகண்ணப்பன்    



  • Sep 09, 2025 11:53 IST

    மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கைவரிசை! நவோனியா கும்பல் குறித்து ரயில்வே போலீசார் எச்சரிக்கை

    சென்னை: ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்போன் திருட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த "நவோனியா கும்பல்" குறித்து ரயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்தக் கும்பல் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கைக்குட்டை, துண்டு போன்ற பொருட்களால் மறைத்து செல்போன்களைத் திருடுவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில், மெரினா கடற்கரையில் சுற்றித் திரிந்த ஒரு சிறுவன் உட்பட நான்கு நபர்களை ரயில்வே தனிப்படையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Sep 09, 2025 10:57 IST

    சைபர் கிரைம் மோசடி - ரூ.314 கோடி முடக்கம்!

    2025 ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை சைபர் கிரைம் மோசடியில் ரூ.1010 கோடியை பொதுமக்கள் இழந்துள்ளனர். கடந்த 7 மாதங்களில் 88,479 புகார்கள் பெறப்பட்டுள்ளன! இழந்த பணத்தில் ரூ. 314 கோடியை சைபர் கிரைம் முடக்கி இருப்பதாகவும், ரூ.62 கோடியை மீட்டு புகார்தாரரிடம் கொடுத்துள்ளதாகவும் தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளது. 



  • Sep 09, 2025 10:21 IST

    வாக்குப்பதிவு தொடங்கியது

    டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர்; மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், இன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். 

    தே.ஜ. கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன், இந்திய கூட்ணி சார்பில் சுதர்சன் ரெட்டி போட்டியிடுகின்றனர்



  • Sep 09, 2025 09:37 IST

    அ.தி.மு.க. கோமா நிலையில் உள்ளது: சேகர்பாபு

    அ.தி.மு.க. கோமா நிலையில் உள்ளது: அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்தார். திருவள்ளுவர் கோயில் புனரமைப்பு பணியை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; 210 தொகுதிகளோடு நிறுத்திவிட்டார்; 234 தொகுதிகளிலும் வெல்வதாக பழனிசாமி கூறியிருக்க வேண்டும். தி.மு.க.வை வசைபாடிய அண்ணாமலையே தி.மு.க. வலுவாக இருக்கிறது என பேசியிருக்கிறார். தை மாதத்திற்குள் 4,000 கோயில்களில் குடமுழுக்கு நடத்தவிருக்கிறோம் என்று கூறினார்.



  • Sep 09, 2025 09:34 IST

    புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.720 உயர்வு

    சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.81,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.90 உயர்ந்து கிராம் ரூ.10,150க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது.



  • Sep 09, 2025 08:33 IST

    தங்கக் கலசங்கள் திருட்டு - மேலும் 3 பேர் கைது

    டெல்லி செங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் தங்கக் கலசங்கள் திருடிய விவகாரத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். துறவி போல் வந்து தங்கக் கலசங்களை திருடிய பூஷண் வர்மாவை ஏற்கனவே போலீசார் கைதுசெய்தனர்.



  • Sep 09, 2025 08:32 IST

    தேர்தல் சுற்றுப்பயணம்: நீதிமன்றத்தை நாட விஜய் முடிவு?

    த.வெ.க தரப்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர். ஆனால், அந்த இடம் பேருந்து நிலையம் என்பதால், அனுமதி கொடுத்தால் நாள் முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டது. மரக்கடை பகுதியில் இருந்து சுற்றுப்பயணம் தொடங்குவதற்கு மீண்டும் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அதற்கும் காவல்துறை மறுப்பு தெரிவித்தது. தொடர்ந்து, 2 முறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மாற்று இடம் குறித்து த.வெ.க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். 3-வது முறையும் காவல்துறை அனுமதி மறுத்தால், நீதிமன்றத்தை அணுக த.வெ.க தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Sep 09, 2025 08:18 IST

    நாட்டில் நிலக்கரி உற்பத்தி கடந்த மாதம் 8% உயர்வு

    நாட்டில் நிலக்கரி உற்பத்தி கடந்த மாதம் 8 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஜூலையில் 64.86 மெட்ரிக் டன் உற்பத்தி செய்த நிலையில் ஆகஸ்டில் 69.87 மெட்ரிக் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.



  • Sep 09, 2025 08:06 IST

    என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளருக்கு அதிக வெற்றி வாய்ப்பு

    துணை குடியரசுத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வேட்பாளரான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். இரு அவைகளிலும் உள்ள மொத்தமுள்ள 788 உறுப்பினர்களில் 7 இடங்கள் காலியாக உள்ளன. வேட்பாளரின் வெற்றிக்கு 391 வாக்குகள் தேவை. என்.டி.ஏ. கூட்டணிக்கு 422 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதால், அவர்களின் வேட்பாளர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



  • Sep 09, 2025 08:04 IST

    வாள்வீச்சு- வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை

    உத்தராகண்டில் நடைபெற்ற தேசிய வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது வீராங்கனை வெண்கலம் வென்று அசத்தினார். 16 வயதான வீராங்கனை பிளெஸ்ஸிலா ஏ சங்மா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் விளையாட்டு வீரர்களுக்கான விடுதி வீரர் வாள்வீச்சு போட்டியில் பெரும் முதல் பதக்கம் இது.



  • Sep 09, 2025 08:02 IST

    இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்

    இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் காரணத்திற்காக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தடை உத்தரவு செப்டம்பர் 15 வரையும், பிறகு அக்டோபர் 25 முதல் அக்டோபர் 31 வரையும் அமலில் இருக்கும். தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் தேவர் குருபூஜை போன்ற நிகழ்வுகள் வர உள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



  • Sep 09, 2025 08:00 IST

    வேலூர் இப்ராஹிம் கடலூர் சிறையில் அடைப்பு

    பா.ஜ.க சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சையில் முறைகேடு நடப்பதாகக் கூறி அவதூறு பரப்பி, ராஜீவ் காந்தி மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற வேலூர் இப்ராஹிம் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இப்ராஹிமை கைதுசெய்த போலீசார், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். 



  • Sep 09, 2025 07:48 IST

    இன்று நடக்கிறது திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடக்கிறது. தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை குறித்தும், கரூரில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.



  • Sep 09, 2025 07:42 IST

    6 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி தஞ்சாவூர், திருவாரூர், தேனி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Sep 09, 2025 07:40 IST

    தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

    தமிழகத்தில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • Sep 09, 2025 07:21 IST

    நேபாளம்: சமூகவலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்

    நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, கே.பி. சர்மா ஓலி தலைமையிலான அரசு 26 சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்கியுள்ளது. நேற்று நடந்த வன்முறையில் 19 பேர் உயிரிழந்தது குறித்து பிரதமர் வேதனை தெரிவித்தார். மேலும், கலவரம் குறித்து விசாரணை செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டு, 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



  • Sep 09, 2025 07:20 IST

    வெள்ள பாதிப்பு - இன்று பஞ்சாப் செல்கிறார் மோடி

    பஞ்சாபில் வெள்ள பாதிப்பை பார்வையிட பிரதமர் மோடி இன்று குருதாஸ்பூர் செல்கிறார். காலையில் இமாச்சலப் பிரதேசத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மோடி, பிற்பகல் பஞ்சாப் செல்கிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.



  • Sep 09, 2025 07:15 IST

    ஆசிய கோப்பையை தக்க வைக்குமா இந்திய அணி?

    17-வது ஆசியக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

    பிரிவு A: இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், பிரிவு B: ஆப்கானிஸ்தான், ஹாங்காங், வங்கதேசம், இலங்கை.



  • Sep 09, 2025 07:14 IST

    காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: 2 வீரர்கள் வீர மரணம்

    ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சண்டையில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த மோதலில், சுபேதார் பெர்பத் கவுர் மற்றும் லான்ஸ் நாயக் நரேந்தர் சிங் என்ற 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.



Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: