Chennai News Updates: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Tamil Nadu Latest News live Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu Latest News live Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil nadu rains today

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Sep 11, 2025 07:38 IST

    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய  மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 


    சென்னை வானிலை ஆய்வு மையம் 



  • Sep 11, 2025 07:05 IST

    ஒசூரில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு

    ஓசூரில் இன்று நடைபெறும் முதலீட்டார்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.24,307 கோடி முதலீட்டிற்கான 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. 49 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.



  • Advertisment
  • Sep 10, 2025 22:45 IST

    23 நிபந்தனைகளுடன் தவெக பிரசாரத்துக்கு அனுமதி

    23 நிபந்தனைகளை தவெக நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டதை அடுத்து தவெக தலைவர் விஜய் திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகே பொதுமக்களிடையே திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



  • Sep 10, 2025 22:41 IST

    தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி

    அரசியல் காழ்புணர்ச்சியால் ஏழைகளுக்காக கொண்டுவரப்பட்ட அதிமுகவின் திட்டங்களை திமுக  நிறுத்தியது. ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட கட்சி அதிமுக, மக்களுக்கு என்ன தேவை என்பதை சிந்தித்தவர்கள் அதிமுக தலைவர்கள் என ஈபிஎஸ் ஆவேசமாக  பொள்ளாச்சியில் பேசியுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Sep 10, 2025 21:51 IST

    சென்னையில் பொது இடங்களில் உள்ள கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவு

    சென்னையில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக்கம்பங்களை செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும். ‌ இது தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3,154 கம்பங்கள் அகற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



  • Sep 10, 2025 21:49 IST

    நேபாளத்தில் சிக்கியவர்களை மீட்க சிறப்பு விமானம்

    கலவர பூமியாக மாறியுள்ள நேபாளத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க சிறப்பு விமானம் இயக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. காத்மாண்டுவில் உள்ள விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த சில நாட்களுக்கு கூடுதல் விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



  • Sep 10, 2025 21:11 IST

    தேர்தல் அதிகாரிகளுக்கு இ.சி.ஐ அறிவுறுத்தல்

    தகுதியுள்ள எந்தவொரு குடிமகனும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தகுதியற்ற நபர் யாரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.



  • Sep 10, 2025 20:30 IST

    அதிமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டம் - இ.பி.எஸ்

    அதிமுக ஆட்சி அமைந்ததும் தென்னைமரத்தில் ஏற்படும் வாடல்நோயை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், மீண்டும் தாலிக்கு தங்கம், திருமண உதவித்திட்டம் தொடங்கப்படும், மணமகளுக்கு சேலை, மணமகனுக்கு வேஷ்டி வழங்கப்படும், தரமான கான்கிரீட் வீடு கட்டிதரப்படும், ஆட்டோ வாங்க ரூ.75ஆயிரம் மானியம் வழங்கப்படும் என  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.



  • Sep 10, 2025 20:27 IST

    அரசமைப்பை காக்கவே திமுகவுடன் கூட்டு: திருமாவளவன்

    அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்கவே முதல்வர் ஸ்டாலினுடன் கைக்கோத்து நிற்கிறோம். ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அக்கறை கொண்டது திமுக, தமிழ்நாட்டில் அம்பேத்கரின் பெயரை ஆங்காங்கே நிறுவியதில் திமுகவுக்கு பங்கு உண்டு என திருமா தெரிவித்துள்ளார்.



  • Sep 10, 2025 20:18 IST

    நேபாளத்தில் தப்பியோடிய சிறை கைதிகள்

    கடந்த 2 நாட்களாக நடைபெற்ற வன்முறைகளால், பதற்றமான சூழ்நிலையில் பயன்படுத்தி 3 சிறைகளில் இருந்து 1047 கைதிகள் தப்பினர். இதில் 147 பேரை தேடிப்பிடித்து ராணுவம் கைது செய்துள்ளது. மீதமுள்ள 900 பேர் தலைமறைவாகிவிட்ட நிலையில் அவர்களை காவல் துறையினரும் ராணுவத்தினரும் தேடி வருகின்றனர்.  



  • Sep 10, 2025 19:51 IST

    நிதானத்தை இழந்த செங்கோட்டையன்

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடர்பாக செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள் அவருடைய அம்மாவே இறந்து கிடக்கிறார், அதை பார்க்க சொல்லுங்கள் என செங்கோட்டையன் ஆவேசமாக பதிலளித்துள்ளார்.



  • Sep 10, 2025 19:49 IST

    அதிமுக ஒன்றாக இருக்கின்றது; 2026 சட்டமன்றத் தேர்தலில் காண்பிப்போம் - இபிஎஸ்

    அதிமுக நான்காக போய்விட்டது, மூன்றாக போய்விட்டது என்கிறார்கள் எல்லாம் ஒன்றாக இருக்கின்றது. 2026 சட்டமன்றத் தேர்தலில் காண்பிப்போம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் வால்பாறையில் நடந்த பரப்புரையில் அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.



  • Sep 10, 2025 18:56 IST

    நேபாள நாட்டின் இடைக்காலத் தலைவராக சுசிலா கார்கி - போராடும் இளைஞர்கள் விருப்பம் 

    நேபாள நாட்டின் இடைக்கால தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டார். GEN Z இளைஞர்களின் போராட்டதை அடுத்து பிரதமராக இருந்த சர்மா ஓலி ராஜினாமா செய்தார். சர்மா ஒலியை தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம் சத்திர பவுடலும் ராஜினாமா செய்தார். குடியரசுத் தலைவர், பிரதமர் என அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில் இடைக்கால தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.



  • Sep 10, 2025 18:08 IST

    காத்மாண்டு விமான நிலையம் மீண்டும் திறப்பு

    நேபாள வன்முறையால் இடைநிறுத்தப்பட்ட விமானங்களின் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், காத்மாண்டுவிற்கு செல்லும் சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்திருந்தது. பயணிகள் அதிகாரப்பூர்வ விமான டிக்கெட்டுகள், அடையாள ஆவணங்களை கொண்டு வர அறிவுறுத்தல்



  • Sep 10, 2025 17:32 IST

    ஒ.என்.ஜி.சி அனுமதியை ஏன் ரத்து செய்யக்கூடாது: சுற்றுச்சூழல் ஆணையம் கேள்வி

    ஒ.என்.ஜி.சி (ONGC) அனுமதியை ஏன் ரத்து செய்யக்கூடாது என மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதி அறிவிக்கப்பட்ட நிலையில் ஒ.என்.ஜி.சி அனுமதி ரத்து குறித்து விளக் அறிக்கை அளிக்க நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் எரிபொருள் குறித்த ஆராய்ச்சி, அகழ்வுத் தொழில்கள் மேற்கொள்ள தடை அறிவிகக்ப்பட்டுள்ள நிலையில், ஒ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியினை திரும்பப் பெற மதிப்பீட்டு ஆணையத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.



  • Sep 10, 2025 17:25 IST

    எடப்பாடியை அசைத்துப்பார்த்தால் தோற்பது நீங்கள் தான்; ஆர்.பி உதயகுமார்

    வயிற்றெரிச்சல் மனிதர்களுக்கு ஜெயலலிதாவின் ஆன்மா தோல்வியை தான் தரும். மூத்த முன்னோர்கள் இப்படி செய்தால் சாதாரண தொண்டர்கள் எங்கே போக முடியும்?  எடப்பாடியை அசைத்துப்பார்க்க்கலாம் என்று நினைத்தால் தோற்றபது நீங்களாகத்தான் இருக்கும் என்று ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.



  • Sep 10, 2025 16:10 IST

    பார்சலில் அனுப்பிய 52 சவரன் நகை மாயம் என புகார்

    சென்னையில் இருந்து திருச்செந்தூர் வந்த ஆம்னி பேருந்தில் பார்சலில் இருந்து 52 சவரன் நகை மாயம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயல்பட்டினம் எம்எம் கோல்டு கடை உரிமையாளர் அபுதாகீருக்கு. நேற்று முன்தினம் சென்னையில் இருந்து அபுதாகீர் நண்பர் ஆரிஸ் 52 சவரன் நகையை பார்சலில் அனுப்பியுள்ளார்.



  • Sep 10, 2025 15:28 IST

    ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் அடைக்க மனு

    ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. விசிக வழக்கறிஞர் அணி மாநில துனைச் செயலாளர் உதயகுமார் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. விசிக நிர்வாகிகளை கத்தியால் தாக்கிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார் ஏர்போர்ட் மூர்த்தி.



  • Sep 10, 2025 15:06 IST

    நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது?: உயர்நீதிமன்றம் கேள்வி

    நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடப்பதால் தேர்தல் நடத்தினால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படும் என நடிகர் சங்கத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்த வழக்கின் விசாரணை வரும் 15ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.



  • Sep 10, 2025 14:32 IST

    இளையராஜாவுக்கு பாராட்டு விழா: “ராஜாவைத் தாலாட்டும் தென்றல்” - மு.க.ஸ்டாலின்

    இசைஞானி இளையராஜாவுக்கு செப்டம்பர் 13-ம் தேதி பாராட்டு விழா தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற உள்ளது. இந்நிலையில், “ராஜாவைத் தாலாட்டும் தென்றல்” - நம் பாராட்டு விழா! இது இசையின் அரசனுக்கு மட்டுமல்ல; அவரை வியக்கும் உலகில் உள்ள அத்தனை இசை இரசிகர்களுக்குமான பாராட்டு விழா!” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Sep 10, 2025 14:27 IST

    தமிழ்நாட்டில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியல் வரை வெப்பம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியல் வரை வெப்பம் அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. இதனால், வெயில் நேரத்தில் வெளியே செல்பவர்கள் குடையுடன் செல்வது நல்லது.



  • Sep 10, 2025 14:20 IST

    மெரினாவில் உழைப்பாளர் சிலை முன் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் கைது 

    பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரி தூய்மைப் பணியாளர்கள் 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலை முன் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.



  • Sep 10, 2025 13:47 IST

    ‘இ.பி.எஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கக் கூடாது’; டி.டி.வி. தினகரன் கருத்துக்கு ஓ.பி.எஸ் வரவேற்பு

    அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கக் கூடாது என்று கூறியது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ், “எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கக் கூடாது என்பது நல்ல கருத்து, சத்தான கருத்து” என்று கூறினார். 



  • Sep 10, 2025 13:32 IST

    தி.மு.க நாடகங்களுக்கு அரசுப் பள்ளிகள் பலிகடா - அண்ணாமலை கடும் விமர்சனம்

    திருச்சி, உப்பிலியாபுரம் பகுதியில் உள்ள பள்ளிக்கு விடுமுறை அளித்து, நேற்றுமுன்தினம் (செப்டம்பர் 8, 2025), தி.மு.க அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் முகாம் நடத்தப்பட்டிருக்கிறது. இதனைச் சுட்டிக்காட்டி அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், "தி.மு.க-வின் விளம்பர நாடகங்களுக்கு அரசுப் பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவது கண்டிக்கத்தக்கது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், "பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே நடந்துள்ள இந்தச் சம்பவம் அதிகார துஷ்பிரயோகம். தி.மு.க-வினருக்குச் சொந்தமாக திருச்சியில் வேறு இடங்கள் இல்லையா? ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகள்தானா?" என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.



  • Sep 10, 2025 13:23 IST

    ‘முதலில் வெளியே வரட்டும்...’ - விஜய் பரப்புரை குறித்து அமைச்சர் துரைமுருகன் பதில்

    விஜய் பரப்புரை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன்: “விஜய் முதலில் வெளியே வரட்டும். அவர் புரப்புரையை வெள்ளிக்கிழமை வைத்தால் என்ன, சனிக்கிழமை வைத்தால் என்ன? எங்கள் பணியை நாங்கள் செய்கிறோம்’ என்று கூறினார்.



  • Sep 10, 2025 13:20 IST

    அ.தி.மு.க ஒன்றிணையாவிட்டால் தி.மு.க-வுக்கு சாதகம் - ஓ.பன்னீர்செல்வம்

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்: “அ.தி.மு.க ஒன்றிணையாவிட்டால் தி.மு.க-வுக்குத்தான் சாதகமாக அமையும். டெல்லி பா.ஜ.க தலைமையிலிருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை” என்று கூறினார்.



  • Sep 10, 2025 13:14 IST

    11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - கல்வி வாரிய குழு ஒப்புதல்

    பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கை அறிவிப்பில், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு முதலே தேர்வு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பள்ளிக் கல்வி வாரிய குழு ஒப்புதல் அளித்துள்ளது.



  • Sep 10, 2025 13:01 IST

    நயன்தாரா ஆவணப்படம் - பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

    நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதியின்றி சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்தியது தொடர்பாக சந்திரமுகி படத்தின் பதிப்புரிமை பெற்றுள்ள ஏ.பி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், அக்டோபர் 6 ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நயன்தாரா ஆவண பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • Sep 10, 2025 12:44 IST

    மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நாடு முழுவதும் மேற்கொள்வது தொடர்பாக தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார்



  • Sep 10, 2025 12:32 IST

    9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் திண்டுக்கல், கோவை, நீலகிரி, தேனி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Sep 10, 2025 12:12 IST

    ஆம்புலன்சிற்கு வழி விடுபவர்கள் தான் உண்மையான தலைவர்கள் - உதயநிதி

    எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தின் போது ஆம்புலன்ஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆம்புலன்சிற்கு வழி விடுபவர்கள் தான் உண்மையான தலைவர்கள். நடுரோட்டில் கூட்டம் நடத்தும்போது ஆம்புலன்ஸ் வர தான் செய்யும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்



  • Sep 10, 2025 12:10 IST

    திருமண நிதியுதவி திட்டம் - தங்க நாணயங்கள் கொள்முதல் செய்ய டெண்டர்

    சமூக நலத் துறையால் செயல்படுத்தப்படும் திருமண நிதியுதவி திட்டத்தில், பயனாளிகளுக்கு வழங்குவதற்காக 8 கிராம் தங்க நாணயங்களை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. மொத்தம் 45 கோடி ரூபாய் அளவுக்கு தங்க நாணையங்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது



  • Sep 10, 2025 11:55 IST

    அதிமுகவின் பொதுச்செயலாளராக இ.பி.எஸ்.தொடர வேண்டும்: உதயநிதி

    அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக இபிஎஸ்தான் தொடர வேண்டும். அதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்யும் ஒரே நல்ல காரியம். அப்போதுதான் எங்கள் வேலையும் சுலபமாக இருக்கும். அதிமுகவினர் இதை ஒத்துக்கொள்வார்களா என தெரியாது, ஆனால் நான் முன்மொழிகிறேன், நீங்கள்தான் நிரந்தர பொதுச்செயலாளர்

    உதயநிதி ஸ்டாலின்



  • Sep 10, 2025 11:49 IST

    சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல்

    பாமக பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அன்புமணி தரப்பில் கட்சி மற்றும் சின்னத்துக்கு உரிமை கோரினால் தங்கள் தரப்பை கேட்க வேண்டும் எனக்கூறி உயர்நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



  • Sep 10, 2025 10:53 IST

    ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

    காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால், 10 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. 



  • Sep 10, 2025 10:52 IST

    சுற்றுப்பயணம்

    செங்கல்பட்டு தொகுதியில் உள்ள திமுக நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். காஞ்சிபுரத்தை தொடர்ந்து 2வது நாளாக ஆலோசனை நடத்துகிறார்.



  • Sep 10, 2025 10:52 IST

    சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரேமலா வாழ்த்து

    ஒரு தமிழர் குடியரசு துணை தலைவராக தேர்வானது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த பெருமை; சவால்களை முறியடித்து அர்ப்பணிப்போடு உழைத்ததன் விளைவாக கிடைத்த மாபெரும் வெற்றி. 

    குடியரசு துணைத் தலைவராக தேர்வான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து



  • Sep 10, 2025 10:28 IST

    அதிமுகவை முழுமையாகக் கபளீகரம் செய்ய பாஜக முயற்சி: திருமா

    அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்துப் பேசிய நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “அதிமுகவை கூட்டணியில் இணைத்துக் கொண்டு, அந்தக் கட்சியை முழுமையாகக் கபளீகரம் செய்ய பாஜக முயற்சி செய்கிறது.

    சென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் பேட்டி 



  • Sep 10, 2025 10:27 IST

    செங்கோட்டையனை சந்திக்க நிர்வாகிகள் வருகை

    டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பிறகு, செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார். இதையடுத்து, கட்சியின் பல்வேறு நிலைகளில் உள்ள நிர்வாகிகள், அவரை சந்திப்பதற்காக அவரது வீட்டின் முன்பு குவிந்து வருகின்றனர். இந்த சந்திப்பு, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.



  • Sep 10, 2025 09:53 IST

    இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை

    இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கை குறித்து நாளை மாலை 3 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் 4ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அனைத்து சங்கங்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.



  • Sep 10, 2025 09:31 IST

    தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை

    டெல்லியில் நேற்று அமித் ஷாவை சந்தித்துவிட்டு வந்த நிலையில் செங்கோட்டையன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கோபிச்செட்டிபாளையத்தில் ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் செங்கோட்டையன் இல்லத்திற்கு வந்துள்ளனர்.



  • Sep 10, 2025 09:01 IST

    சித்தாந்த போர் வீரியத்துடன் தொடர்கிறது: சுதர்சன் ரெட்டி

    துணை ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும் சித்தாந்த போர் வீரியத்துடன் தொடர்கிறது என சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஜனநாயகம் வெற்றியால் மட்டுமல்ல; உரையாடல், கருத்து வேறுபாடு, உணர்வாலும் பலப்படுத்தப்படுகிறது. நாங்கள் கூட்டாக முன்னேற முயன்ற பெரிய நோக்கம் குறையாமல் உள்ளது எனவும் கூறினார்.



  • Sep 10, 2025 08:59 IST

    டெல்லி - நேபாளம் காத்மாண்டு இடையே விமான சேவை ரத்து

    நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தால் டெல்லி - காத்மாண்டு இடையே விமான சேவை ரத்து செய்யபப்ட்டுள்ளது. காத்மாண்டு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால் டெல்லி-காத்மாண்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இண்டிகோ, நேபாள ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா தங்களது விமான சேவைவை நிறுத்தியுள்ளன.



  • Sep 10, 2025 08:58 IST

    இந்தியாவில் எழுத்தறிவு விகிதம் 80.9% ஆக உயர்வு: அமைச்சர்

    இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் 2023-24 ஆம் ஆண்டில் 80.9 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் 74% ஆக இருந்தது. அரசின் தொடர்ச்சியான கல்வித் திட்டங்கள் மற்றும் முயற்சிகளால் இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது என்றார்.



  • Sep 10, 2025 08:55 IST

    அதிக ஒலி எழுப்பிய வாகனங்கள் - அபராதம் விதித்த அமைச்சர்

    உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் நள்ளிரவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு செய்தார். காதைக் பிளக்கும் ஒலி எழுப்பான்களை பொருத்தி வந்த கனரக வாகனங்களை நிறுத்தி ஆய்வுக்குப் பின் அமைச்சர் சிவசங்கர் அபராதம் விதித்தார். ஒலியின் அளவு 90 என இருக்க வேண்டும். ஆனால் பரிசோதித்த அனைத்து வாகனத்திலும் 106, 107, 108 என இருந்ததால் அந்த வாகனங்களில் இருந்து ஒலி எழுப்பான்களை அகற்ற அறிவுறுத்திய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஒலி மாசு ஏற்படுத்தியதற்காக அபராதமும் விதிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



  • Sep 10, 2025 08:34 IST

    சென்னையில் 5 இடங்களில் அமலாக்க அதிகாரிகள் சோதனை

    சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அடையாறு, வேளச்சேரி, மேற்கு மாம்பலத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது; துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்



  • Sep 10, 2025 08:33 IST

    ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் இன்று ஆலோசனை 

    டெல்லி பயணத்திற்கு பிறகு, ஆதரவாளர்களுடன் அடுத்த கட்ட நகர்வு குறித்து செங்கோட்டையன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை 9 மணிக்கு ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.



  • Sep 10, 2025 08:29 IST

    கொடைக்கானலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மழை காரணமாக 1-5ஆம் வகுப்புகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை அடுத்து கொடைக்கானலில் 1 முதல் 5 வரையுள்ள வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு நடப்பதால் விடுமுறை அளிப்பதை தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Sep 10, 2025 08:01 IST

    நேபாளத்தில் பதற்றம்: இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

    நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த போராட்டங்களால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த மோதலில் 19 பேர் கொல்லப்பட்டனர், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் காரணமாக, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். நேபாளத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்திய தூதரகம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. அவசர உதவி தேவைப்படும் இந்தியர்கள் +977 98086 02881 மற்றும் +98103 26134 ஆகிய எண்களில் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்புகொள்ளலாம் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

     



  • Sep 10, 2025 07:59 IST

    செங்கோட்டையனை தொடர்ந்து அமித்ஷாவை சந்திக்கும் டி.டி.வி.

    செங்கோட்டையனை தொடர்ந்து டி.டி.வி.தினகரனும் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. செங்கோட்டையனுக்கு முன்னதாக டி.டி.வி. அமித்ஷாவை சந்திக்கும் வாய்ப்பு உருவானதாகவும், ஆனால் அது தள்ளிப்போனதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் இன்று அல்லது நாளை சந்திப்பு நடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சசிகலாவும் சந்திப்பார் எனக் கூறப்படுகிறது.



Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: