சென்னையில் ஓடும் ரயிலில் இருந்து பீகாரைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் வெளியே தள்ளப்பட்டதாக பொய்யான வீடியோவை திங்கள்கிழமை வெளியிட்ட பீகார் செய்திச் சேனல் மீது மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பீகார் செய்திச் சேனல் ஒன்று சென்னையில் ஓடும் ரயிலில் இருந்து பீகாரைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் வெளியே தள்ளப்பட்டதாக பொய்யான வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோவில் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும், மற்றொருவர் பலத்த காயம் அடைந்ததாகவும் கூறுகிறது. அந்த வீடியோவில் இறந்தவரின் உடலுடன் ஒரு சவப்பெட்டியும் காட்டப்பட்டுள்ளது. இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்றும், அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்றும் சென்னை போலீஸ் தெரிவித்துள்ளது. மேலும், ஐபிசி பிரிவு 153 (கலவரத்தை தூண்டுதல்), 153A (1) (a), 505 (1) (b),& 505 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்றும், அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்றும் சென்னை போலீஸார் புதன்கிழமை செய்திக் குறிப்பு வெளியிட்டனர்.
இது குறித்து மேலும் விளக்கம் அளித்து போலீஸ் அதிகாரி ஒருவர்: “பிப்ரவரி 6-ம் தேதி, பீகாரைச் சேர்ந்த மோகன் மஹ்தோ கிராம் துர்குலியா என்ற நபர், விழுப்புரம் ரயில் நிலையத்தில் தாம்பரம் நோக்கிச் சென்ற ரயிலின் மீது ஏறியதால் மின்சாரம் தாக்கியது. பலத்த தீக்காயம் அடைந்த அவர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விழுப்புரம் அரசு ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
மோகன் இறந்த பிறகு, விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் தடையில்லாச் சான்றிதழ் பெறப்பட்டு, அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“