விர்ரு... விர்ரு-னு பசங்க ஆக்ஸிலேட்டரை திருவினால் பெற்றோருக்கு ஜெயில்!

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் எந்த ஒரு நபரும் பொது இடத்தில் வாகனத்தை ஓட்டக்கூடாது

ஓட்டுநர் உரிமம் இல்லாத, 18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை இன்று எச்சரித்துள்ளது.

சென்னை சாலைகளில் சிறார்கள் தங்களது பெற்றோரின் வாகனத்தை ஓட்டுவதுடன் பந்தயத்திலும் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில், சென்னை காவல்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறார்கள் வாகனம் ஓட்ட அனுமதித்தால், பெற்றோர்களுக்கு ரூ. 1,000 அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை விதிக்கப்படும்.

சிறுவர்கள் வாகனங்களை ஓட்டுவதால் அவர்கள் பாதிக்கப்படுவதுடன் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் எந்த ஒரு நபரும் பொது இடத்தில் வாகனத்தை ஓட்டக்கூடாது” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

×Close
×Close