சென்னையில் பிராய்லர் கறிக்கோழி திடீர் விலை உயர்வு; வெங்காயத்தின் விலையும் மீண்டும் உயரும் அபாயம்!

onion and tomato price in Chennai Tamil News: சென்னையில் 1 கிலோ பிராய்லர் கோழி கறியின் விலை ரூ.280 விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், வெங்காயம் மற்றும் தக்காளி போன்ற காய்கறிகளின் விலை சத்தமில்லாமல் உயர்ந்து வருகிறது.

Chennai city Tamil News: Broiler chicken and onion prices hike in Chennai

broiler chicken price chennai Tamil News:- கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொடங்கிய காலத்தில் பிராய்லர் கறிக்கோழி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனா அச்சத்தில் பலர் பிராய்லர் கோழியை தவிர்த்து வந்ததால் பல இடங்களில் கடை உரிமையாளர்கள் அவற்றை இலவசமாக வழங்கினார்கள். இந்த நேரத்தில் நாட்டுக் கோழி மற்றும் ஆட்டு இறைச்சிகளின் பக்கம் மக்கள் திரும்பியதால் அவற்றின் விலை ஏகிறியது. நாட்டுக்கோழி ரூ.400க்கும் ஆட்டு இறைச்சி கிலோ ரூ.1000-க்கும் விற்கப்பட்டு வந்தது.

இதனால் சில நாட்களில் மக்கள் பிராய்லர் பக்கம் திரும்பினர். எனவே பிராய்லர் கறி கோழிக்கு மீண்டும் கிராக்கி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா 2ம் அலையின் போது பிராய்லர் கோழி கறியின் விலை ரூ.220-க்கு விற்பனை செய்யப்பட்டது. சில இடங்களில் அவை ரூ. 250-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது சென்னையில் 1 கிலோ பிராய்லர் கோழி கறியின் விலை ரூ.280 விற்பனை செய்யப்படுகிறது. இப்படி கோழிக் கறியின் விலை உயர்வது இந்த மாதத்தில் 2வது முறையாகும். இருப்பினும் சென்னையின் சில பகுதிகளில் 1 கிலோ பிராய்லர் கோழி கறி ரூ.240க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஆட்டு இறைச்சியை பொறுத்தவரையில் 1 கிலோ ரூ.800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் விற்பனை செய்யப்படும் பிராய்லர் கோழிகள் பெரும்பாலும் ஆந்திராவின் சித்தூர், தமிழகத்தின் கோயம்புத்தூர், வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து பெறப்பட்டு வரும் நிலையில், அவற்றில் போதிய வரவு இல்லாததால் இந்த திடீர் விலை உயர்வு என கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து பேசிய சென்னை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் டி டி சந்திரசேகர், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு (40 கிமீ தூரம்) தினசரி பிராய்லர் கோழி கறி தேவை சுமார் 5 லட்சம் கிலோஆகும். ஆனால், தற்போது ஒவ்வொரு நாளும் 3.5 லட்சம் கிலோ மட்டுமே கிடைக்கிறது. 10 நாட்களுக்கு முன்பு, கோழி கறி கிலோ 180க்கு விற்பனை செய்யப்பட்டது. கறியின் பற்றாக்குறை அதிகரித்து வருவதால் அவற்றின் விலையும் இப்போது அதிகரித்துள்ளது,” என்று கூறியுள்ளார்.

ஆட்டு இறைச்சியின் விலை நிலையாக உள்ளது (ஆட்டிறைச்சி விலை ரூ.800/கி.கி) குறித்து பேசியுள்ள தென் சென்னை ஆட்டு இறைச்சி வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் கரீம், “இறைச்சியின் நிலையான விநியோகம் மற்றும் நிலையான தேவை, விலை உயரவில்லை என்பதை உறுதி செய்துள்ளது.” என்றுள்ளார்.

இது ஒருபுறமிருக்க, சந்தைகளில் ஒரு சில காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்படுகின்றன. குறிப்பாக வெங்காயம் மற்றும் தக்காளி போன்ற காய்கறிகளின் விலை சத்தமில்லாமல் உயர்ந்து வருகிறது. இவற்றின் விலையை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை கிலோவுக்கு 5 முதல் 10 வரை அதிகரித்துள்ளது. வெங்காயம் கிலோ 40க்கு விற்கப்பட்டு வரும் நிலையில் ​​தக்காளி கிலோ ரூ.27 முதல் 30 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai city tamil news broiler chicken and onion prices hike in chennai

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com