சென்னையில் கட்டிட அனுமதி இனி 30 நாட்களில் பெறலாம்; மாநகராட்சி தகவல்!

Greater Chennai Corporation (GCC) latest Tamil News: கட்டிட அனுமதி பெறுவதற்கான முழு செயல்முறையையும் ஆன்லைனில் நகர்த்த பரிசீலித்து வருவதாகவும், அனுமதி மறுக்க சரியான காரணம் இல்லாவிட்டால் அனைத்து விண்ணப்பங்களையும் 30 நாட்களுக்குள் கையாள வேண்டும் எனவும் பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Chennai city Tamil News: get building permits within 30 days in Chennai says gcc

சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடியிருப்பு மற்றும் வணிக கட்டிட அனுமதி இனி 30 நாட்களில் பெறலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி (கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன்) சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த வாரத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், சென்னையில் குடியேற விரும்பும் மக்கள் கட்டிட அனுமதி பெற ஒவ்வொரு அலுவலமாக ஏறி இறங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது எனவும், எனவே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கட்டிட அனுமதி பெறுவதற்கான முழு செயல்முறையையும் ஆன்லைனில் நகர்த்த பரிசீலித்து வருவதாகவும், அனுமதி மறுக்க சரியான காரணங்கள் இல்லாவிட்டால் அனைத்து விண்ணப்பங்களையும் 30 நாட்களுக்குள் கையாள வேண்டும் எனவும் கூறியுள்ளது.

“குடியிருப்பு கட்டிடம் மற்றும் வணிக நிறுவனங்கள் கட்டிட அனுமதி பெறுவதற்கான நடைமுறை என்ன என்று சொல்லப்படாமல் ஒரு சிறிய வட்டத்திற்குள் இயங்கி வந்தது. எனவே, இந்த சுற்றறிக்கை விண்ணப்பதாரர்களுக்கு கட்டிட அனுமதி பெறுவதற்கான செயல்முறை பற்றி தெரிவிக்க உதவும், ”என்று ஒரு மூத்த பெரு நகர சென்னை மாநகராட்சியின் (ஜிசிசி) அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கட்டிட அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்களை செயலாக்குவதற்கான படிகளாக சுற்றறிக்கை குறிப்பிடுவது பின்வருமாறு:

உதவி நிர்வாக பொறியாளர்கள் விண்ணப்பத்தை ஒப்புக்கொண்ட ஐந்து நாட்களுக்குள் ஒரு தளத்தைப் பார்வையிட வேண்டும், அடுத்த இரண்டு நாட்களுக்குள் ஆய்வு அறிக்கையை ஆன்லைனில் உள்ளிட வேண்டும் மற்றும் அடுத்த ஐந்து நாட்களுக்குள் ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும். ஏதேனும் கூடுதல் ஆவணம் தேவைப்பட்டால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் விண்ணப்பதாரருக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர் அதை 15 நாட்களுக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். கட்டண கணக்கீடு ஆன்லைனில் செய்யப்படும் மற்றும் ஆவண ஆய்வுக்கு 15 நாட்களுக்குள் அதிகாரம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இந்த கட்டிட அனுமதி செயல்முறை ஆன்லைனுக்கு மாற்றப்படும் வரை, ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான ஆவணங்களைப் பெறுவதற்காக ஒவ்வொரு மண்டல அலுவலகத்திலும் தனி கவுண்டர் உருவாக்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப எண்ணுடன் ஒப்புதல் வழங்கப்படும் மற்றும் ஆவணங்களைப் பெற்ற பிறகு பதிவேட்டில் பதிவு செய்யப்படும். மேலும், ஜிசிசி தலைமையகத்தில், அம்மா மாளிகையின் ஐந்தாவது தளத்தில் உள்ள உதவி நிர்வாக பொறியாளரால் ஆவண சமர்ப்பிப்பு கவுண்டர் நிர்வகிக்கப்படும்.

உயரமில்லாத குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களுக்கான திட்டமிடல் ஒப்புதல்களை (அதிகபட்சமாக 464.5 சதுர மீட்டர் மற்றும் தரை மட்டம் + முதல் தளம் அல்லது ஸ்டில்ட் + 2 மாடிகள் வரை 9 மீட்டர் உயரம்) மண்டல அலுவலகங்களில் உள்ள மண்டல நிர்வாக பொறியாளர்கள் செயல்படுத்த அனுமதி உண்டு. மேலும், கட்டிட இடிக்க வேண்டிய விண்ணப்பங்களையும் இவர்களால் செயலாக்க முடியும்.

124 உயரம் கொண்ட 464.5 சதுர மீட்டர் முதல் 929 சதுர மீட்டர் வரை எஃப்எஸ்ஐ பரப்பளவு கொண்ட கட்டிடங்களுக்கு மட்டுமே தலைமை அலுவலகத்தில் உள்ள தலைமை பொறியாளரிடம் (திட்டமிடல்) அனுமதி கிடைக்கும். 18.3 மீ உயரத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் மாநகராட்சி ஆணையரால் அங்கீகரிக்கப்படும்.” இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai city tamil news get building permits within 30 days in chennai says gcc

Next Story
கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி பெயர்… சட்டமன்றத்தில் புகார்; அதிமுக வெளிநடப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express