Chennai city Tamil News: தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றிய மூத்த ஐ.ஏ.எஸ். கிரிஜா வைத்தியநாதன் கடந்த 2019ம் ஆண்டு ஓய்வு பெற்றார். தொடர்ந்து இவர் சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (என்ஜிடி) தெற்கு மண்டல உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மேலும் இவரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் என்று வரையறுக்கப்பட்டது.
இந்த நிலையில் என்ஜிடியின் தெற்கு மண்டல பெஞ்சில் பணியாற்றிய நிபுணர் உறுப்பினர் சைபல் தாஸ்குப்தா, கொல்கத்தாவில் உள்ள கிழக்கு மண்டல பெஞ்சிற்கு மாற்றப்பட்டுள்ளார். எனவே அவருக்கு பதில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று என்ஜிடியின் முதன்மை பெஞ்ச் கடந்த திங்களன்று (ஏப்ரல் 5ம்தேதி) வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது.
கிரிஜா வைத்தியநாதன் ஆரம்பத்தில் இந்த பதவிக்கு விண்ணப்பித்தபோது, சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் குழுவான பூவுலகின் நண்பர்கள், அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (என்ஜிடி) சட்டத்தின் படி, மத்திய அல்லது மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் விஷயங்களை கையாள்வதற்கு, ஐந்து ஆண்டுகள் உட்பட குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் நிர்வாக அனுபவம் வேண்டும். ஆனால் இந்த விதிமுறையை மீறி, சுற்றுச்சூழல் விஷயங்களை கையாள்வதில் ஐந்தாண்டுகள் கூட அனுபவம் இல்லாத இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது" என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோரின் முதல் பெஞ்ச், ஆறு வாரங்களில் தங்கள் பதில்களை தாக்கல் செய்யுமாறு அரசிற்கும், கிரிஜா வைத்தியநாதனுக்கும் உத்தரவிட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)