மரம் விழுந்து பெண் காவலர் உயிரிழப்பு; கூடுதலாக ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Woman constable kavitha dies, nother injured In TN Secretariat After Tree Falls Due To Heavy Rain Tamil News: தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்து உயிரிழந்த பெண் காவலர் கவிதாவின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Chennai city Tamil News: Woman constable kavitha dies In TN Secretariat After Tree Falls On Her

Chennai: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் நகரில் அங்கங்கே மரங்கள் சாய்ந்துள்ளன. ஒரு சில பகுதிகளில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு அருகே மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் முத்தியால் பேட்டை காவல் நிலைய போக்குவரத்து பெண் காவலர் கவிதா என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு காவலர் முருகன் லேசான காயங்களுடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

தலைமைச் செயலர் வே.இறைய ன்பு, காவல் துறை இயக்குநர் சி.சைலேந்திரபாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அரக்கோணத்தை சேர்ந்த கவிதா கடந்த 2005ம் ஆண்டு பணியில் சேர்த்துள்ளார். தண்டையார்பேட்டை போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கவிதாவுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள்.

23 வயதான அருண்குமார் சேலம் மகேந்திரா கல்லூரியில் படித்து வருகிறார். 18 வயதான அவரது மகள் சினேகா பிரியா பிஎஸ்சி நர்சிங் முதலாமாண்டு படித்து வருகிறார். மேலும் இளைய மகன் விஷால் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனைக்குச் சென்று அவரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், மரம் விழுந்த விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் கவிதாவின் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ15 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ரூ10 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக ரூ15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்த காவலர் முருகன் மற்றும் தீயணைப்பு வீரர் செந்தில்குமார் ஆகியோருக்கு தலா ரூ 5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai city tamil news woman constable kavitha dies in tn secretariat after tree falls on her

Next Story
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் – மு.க ஸ்டாலின்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com