Advertisment

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை; உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை; சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு

author-image
WebDesk
New Update
AIADMK, OPS, EPS, general council, அ.தி.மு.க பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரம், ஒற்றைத் தலைமை லேட்டஸ்ட் நிகழ்வுகள், AIADMK single leadership issue, AIADMK single leadership latest updates, OPS vs EPS, general council meeting arrangements going on

Chennai civil court dismiss plea against to stop ADMK meeting: அதிமுகவுக்கு பொதுக்குழுவுக்கு தடைகோரி தொடரப்பட்ட வழக்கில், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த அதிமுக உறுப்பினரான சி.பாலகிருஷ்ணன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையும் படியுங்கள்: அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிப்பு; வானகரத்தில் பரபரப்பு

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எதிர் மனுதாரர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது. அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ​​அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது. நீதிபதி தனது உத்தரவில், பொதுக்குழு கூட்டம் நடத்துவது தொடர்பாக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Admk Ops
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment