/indian-express-tamil/media/media_files/2025/09/08/chennai-car-fire-accident-2025-09-08-15-27-09.jpeg)
சென்னை நொளம்பூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருக்கு சொந்தமான காரை டிரைவர் ஆறுமுகம் என்பவர் ஓட்டி வருகிறார் இந்த நிலையில் இன்று காலை ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பாலசுப்பிரமணியன் மகன் கல்லூரியில் படித்து வரும் நிலையில், அவரை கல்லூரியில் விடுவதற்காக ஆறுமுகம் காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பூந்தமல்லி நெடுஞ்சாலை பூந்தமல்லி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து புகை வருவதை கண்டதும் அதிர்ச்சி அடைந்து காரை அப்படியே சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் அலறியடித்து கீழே இறங்கிப் பார்த்தனர். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் செய்வது அறியாமல் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த காரை தண்ணீர் ஊற்றி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் கார் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கு காரணம் மின்கசிவா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.