கொரோனா வைரஸ் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாளை காலை 6 மணி முதல் 29.4.2020 இரவு 9 மணி வரை சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளிலும் ஊரடங்கு முழுமையாக அமல் படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும், சேலம், திருப்பூர் மாநகராட்சிகளிலும் நாளை காலை 6 மணி முதல் 28.4.2020 இரவு 9 மணி வரை அமல் படுத்தப்படும் ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படுகிறது.
Advertisment
இந்த முழுமையான ஊரடங்கு காலங்களில், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச்செயலகம், சுகாதாரம், காவல், வருவாய் (ம) பேரிடர் மேலாண்மை, மின்சாரம், ஆவின், உள்ளாட்சிகள், குடிநீர் வழங்கல் துறைகளும் தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும். இதர மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும் அத்தியாவசிய பணிகளுக்கு தேவைப்படும் 33% பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
Advertisment
Advertisements
அம்மா உணவகங்கள், தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் (ATM Center) வழக்கம் போல் செயல்படும். மேற்கண்ட நாட்களில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட பிற கடைகள் எவற்றுக்கும் அனுமதியில்லை. மேற்கண்ட பணிகள் தவிர, பிற பணிகளுக்கு முழுயான தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
வீடு தேடி வரும் ஆவின்:
முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை மாநகர பொது மக்களுக்கு எவ்வித சிரமுமின்றி, வீடுகளைத் தேடி சென்று பால் மற்றும் பால் உபபொருட்கள் கிடைக்க, ஆவின் நிறுவனம் 24.04.2020 முதல் ZOMATO மற்றும் DUNZO நிறுவனங்களுடன் இணைந்த சேவையாற்ற ஒப்பந்தம் செய்துள்ளது.
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதால் சென்னையில் மக்களின் வீடுகளிலேயே இன்று முதல் ஜோமோட்டோ (zomato), டன்சோ (dunzo) நிறுவனங்கள் மூலம் ஆவின் பால் மற்றும் வெண்ணெய், நெய், பால்கோவா போன்ற பால் உபபொருள்கள் விநியோகிக்கும் பணி தொடங்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவிப்பு ????#TNLockdownpic.twitter.com/xvqisjzr5J
பொது மக்கள், நுகர்வோர்கள், மற்றும் வாடிக்கையாளர்கள் இந்த அறிய வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆவின் நிறுவனம் வெண்ணெய், நெய், பால்கோவா, போன்ற பால் உபபொருட்களை சென்னை மாநகரில் அமைந்துள்ள 50க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. இதில் 21 பாலகங்கள் குளிர் சாதன வசதி, சிறுவர் விளையாட்டு பூங்கா, Wi-fi வசதி போன்ற வசதிகளுடன் அதிநவீன பாலகங்களாக (Hi-tech parlour) இயங்கி வருகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil