ஓஹோ! இது தான் பாதுகாப்பு பணியா சார்? உருட்டுக் கட்டையுடன் ”ட்யூட்டியில்” காவலர்!

சென்னை மாநகர காவல்த்துறை, மக்களிடம் கணிவுடன் காவலர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

By: October 1, 2020, 2:42:10 PM

Chennai cop doing his duty with wooden stick at Marina Beach : மக்களுக்கு பல்வேறு பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்யவும், சட்ட ஒழுங்கு பிரச்சனையில் இருந்து நம்மை காத்து அமைதிக்கு வழி செய்வதும் தான் காவல்துறையின் தலையாய பொறுப்பாக இருக்கிறது. பணிச்சுமை, அலைச்சல், மன உளைச்சல் போன்ற காரணங்களால் நிகழும் தற்கொலைகளும், அதே காரணங்களால் மக்கள் மீது திருப்பப்படும் கோபங்களையும் நாம் கேட்டும் கண்டும் வருகிறோம்.

சென்னை மெரினா கடற்கரையில் போக்குவரத்து பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டிருக்கும் காவலர் ஒருவர் கையில் உருட்டுக்கட்டையுடன் பணியை மேற்கொண்டு வருகிறார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவில், கையில் உருட்டுக்கட்டையுடன் பணியை மேற்கொண்டு வருவதால் பயணிகள் பெரிதும் கலக்கம் அடைந்துள்ளனர். இதற்கான காரணம் என்ன என்று தெரியாமல் குழப்பம் அடைந்துள்ளனர் பொதுமக்கள். இவருடைய உயர் அதிகாரிகள் முன்னிலையிலும் கூட கையில் இப்படி பெரிய உருட்டுக்கட்டையை வைத்து பணியில் ஈடுபட்டிருப்பது எந்த வகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்புகின்றனர் மக்கள். சென்னை மாநகர காவல்த்துறை, மக்களிடம் கணிவுடன் காவலர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Chennai cop doing his duty with wooden stick at marina beach

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X