chennai corona treatment anna university : அண்ணா பல்கலைக்கழக கோவிட் பாதுகாப்பு மையத்தில் 1,500 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதுக் குறித்த தகவலை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
Advertisment
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் தினமும் சராசரியாக 1,500 முதல் 2,000 பேர் வரை, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவி வருவதால் அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கும் மாணவர்கள் விடுதிகளை கொரோனா மையமாக மாற்றுவதாக மாநகராட்சி அண்ணா பல்கலைக்கழகத்திடம் கேட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்லூரிகள், குடிசை மாற்று வாரிய குடியிருப்பகள், மற்றும் ரயில் பெட்டிகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
Advertisment
Advertisements
இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 5 மாணவர் விடுதிகளை சென்னை மாநகராட்சிக்கு வரும் ஜூன் 20 ம்தேதி ஒப்படைக்க வேண்டுமென கமிஷனர் ஜி. பிரகாஷ் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இல்லையேல் பேரிடர் மேலாண்மை சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டய்ஜி.
இதுக் குறித்து பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாவது, “ஓரிரு நாட்களில் எப்படி மாணவர்கள் விடுதிகளை ஒப்படைக்க முடியும் என்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பெரும்பாலோர் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தாலும் அவர்களது உடமைகள் பூட்டப்பட்ட மாணவர் விடுதிகளின் அறைகளில் இருக்கிறது, அவற்றை மாணவர்கள் அனுமதியின்றி எப்படி திறந்து விடுதிகளை மாநகராட்சிக்கு வழங்க முடியம்” .
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக கோவிட் பாதுகாப்பு மையத்தில் 1,500 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் இது தயாராகிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் என்னவென்றால் ஒரு நபருக்கு நோய் தொற்று ஏற்பட்டால், அவரது குடும்ப உறுப்பினரை சோதிக்க வேண்டும். தொற்று ஏற்பட்ட நபருடன் ஒருவர் குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் செலவழிக்கிறார், பழகுகிறார் என்றால் அவரை கண்டிப்பாக சோதிக்க வேண்டும். வெளியூர், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இதற்கான படுக்கை வசதிகள் போதாது என்பதற்காக இந்த நடவடிக்கையை மாநகராட்சி எடுத்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil