சென்னையில் கொரோனா தடுப்பு மருந்து மனிதப் பரிசோதனை: அரசு மருத்துவர்களும் பங்கேற்பு
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் – ஆஸ்ட்ரா ஜெனிக்கா உருவாக்கிய கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்தின் 2 மற்றும் 3 கட்ட மனிதப் பரிசோதனைகள், சென்னைச் சார்ந்த இரண்டு நிறுவனங்களில் நடக்க இருக்கிறது.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் – ஆஸ்ட்ரா ஜெனிக்கா உருவாக்கிய கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்தின் 2 மற்றும் 3 கட்ட மனிதப் பரிசோதனைகள், சென்னைச் சார்ந்த இரண்டு நிறுவனங்களில் நடக்க இருக்கிறது.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் – ஆஸ்ட்ரா ஜெனிக்கா உருவாக்கிய கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்தின் 2 மற்றும் 3 கட்ட மனிதப் பரிசோதனைகள், சென்னையில் இரண்டு பெரிய நிறுவனங்களில் நடக்க இருக்கிறது.
Advertisment
தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை , 150 முதல் 200 வரையிலான ஆரோக்கியமான மனிதர்களுக்கு இரண்டாவது , மூன்றாவது கட்டப் பரிசோதனைகளை மேற்கொள்கிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள பொது சுகாதாரம் அலுவலகத்தில் இந்த மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரியில் சமூக மருத்துவத் துறையின் மருத்துவர்கள் இந்த சோதனைக்கு இணை ஆய்வாளர்களாக இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Advertisment
Advertisements
அடுத்ததாக, இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக்கழகமும் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்தின் 2 மற்றும் 3 கட்ட மனிதப் பரிசோதனைகளில் ஈடுபட முன்வந்துள்ளது.
பாரத் பயோடெக் கோவாக்சின், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் – ஆஸ்ட்ரா ஜெனிக்கா கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகளுக்கும் எங்கள் நிறுவனத்தில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. ஆஸ்ட்ரா ஜெனிக்கா கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை குறைந்தது 120 மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.
இந்தியாவில், கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யும் பூனேவில் உள்ள சீரம் ஆராய்ச்சி நிலையம் இந்தியாவின் பல்வேறு இடங்களில், 1,600 தன்னார்வலர்களுக்கு மருந்தை பரிசோதிக்க திட்டமிட்டுள்ளது. மனிதப் பரிசோதனைகளில் 10 முதல் 15 மருத்துவமனைகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil