சென்னையில் நேற்று 1,842 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை அங்கு 64,674ல் இருந்து 66,538ஆக உயர்ந்தது. மேலும், சென்னையில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,033 ஆக அதிகரித்தது.
இதற்கிடையே, சென்னையில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் எண்ணிக்ககை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உதாரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 11, 144 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் கடந்த மாதங்களில் இருந்து அதிகரித்தது கணப்படுகிறது . உதரணாமாக, ஜூன் 12 நிலவரப்படி சென்னையில் 360 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறித்த வரையறையை சென்னை மாநகராட்சி மாற்றியமைத்ததை அடுத்து இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைய ஆரம்பித்தது. உதாரணமாக, ஜூன் 30ம் அன்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 108க குறைந்தது. இதனையடுத்து, அண்ணா நகர் பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையை 4ல் இருந்து 39-க அதிகரித்ததையடுத்து மொத்த எண்ணிக்கை ஜூலை 2 அன்று 155க அதிகரித்தது. ஜூலை 3, 4 ஆகிய இரண்டு தேதிகளில் சென்னையில் கொரோன தொற்று அதிகரித்து காணப்பட்டாலும், கட்டுப்படுத்த பகுதிகளின் எண்ணிக்கை 158 என்ற அளவில் தான் உள்ளது.

மேலும், கடந்த மே மாதம் முதல் ஜூலை வரை 12,354 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது. இதில், 8,02,787 பேர் கலந்து கொண்டுள்ளனர். அறிகுறிகள் காணப்பட்ட 37,004 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சென்னை பெருநகர மாநகராட்சி தெரிவித்தது.
சென்னையில், இதுவரை 80 வயதை கடந்த 436 நோயாளிகள் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை குணமடைந்துள்ளனர். இவர்களின் மண் உறுதி கோவிட் -19 க்கு எதிரான போரில் வெற்றியடைய வைத்தது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil