நிவர் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து கன மழை பெய்துவருகிறது. புயல் கரையைக் கடக்கும்போது, சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்கு சென்னை மாநகராட்சி 2 உணவு சமைக்கும் முகாம்களையும் 77 நிவாரண மையங்களையும் அமைத்துள்ளது. சென்னையில் எந்தெந்த இடங்களில் புயல் நிவாரண மையங்களை அமைத்துள்ளது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
வர்தா புயல் பாதிப்பில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களுடன் சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்கள் நிவர் புயலை எதிர்க்கொள்ள அரசுத் துறைகள் தயார் நிலையில் உள்ளது. புதன்கிழமை மாலை நிவர் புயல் கரையை கடக்கும்போது திருவாரூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மணிக்கு 80 கி.மீ முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நிவர் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. அதனால், சென்னையில் மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கலாம் என்பதால், சென்னை மாநகராட்சி சென்னையில் உள்ள மொத்தம் 15 மண்டலங்களில் மக்கள் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஒவ்வொரு மண்டலத்திலும் 5 புயல் நிவாரண மையங்களை அமைக்க அறிவுறுத்தியது.
அதன்படி, சென்னையில் சமையல் செய்யும் இடங்கள் 2 மற்றும் 77 புயல் நிவாரண மையங்களை அமைத்துள்ளது. அருகில் உள்ள மக்கள் அந்த மையங்களுக்கு சென்று பாதுகாப்பாக தங்கிக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
சென்னையில் எந்தெந்த இடங்களில் புயல் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்ற பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில், நிவாரண மையங்கள் அமைந்துள்ள இடம் தொடர்புகொள்வதற்கான தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
Dear Chennaites,
Here is the list of details about Cooking / Relief centres within the limits of Greater Chennai Corporation to accommodate affected people and to provide food during the cyclone. https://t.co/C7dCFO8OFM#GCC #Chennai #ChennaiRains #Nivar #NivarCyclone
— Greater Chennai Corporation (@chennaicorp) November 24, 2020
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“