கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் வீடு தேடிச் சென்று விண்ணப்பத்தை வழங்குவார்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்திற்கான இரண்டாம் கட்ட முகாமை பார்வையிட்டு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
இதையும் படியுங்கள்: சென்னை ஓ.எம்.ஆர் டிராபிக் தொல்லைக்கு வந்தாச்சு தீர்வு; ரூ. 459 கோடியில் 4 புதிய மேம்பாலங்கள்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான 2 ஆம் கட்ட முகாம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நடைபெறும். முதற்கட்ட முகாமில் சென்னையில் 4.7 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. மண்டல வாரியாக 150க்கும் மேற்பட்ட குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும், இதுவரை விண்ணப்பங்களை பெற முடியாமல் விடுபட்டவர்களை சென்றடையும் நோக்கில், ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை தன்னார்வலர்கள் வீடு தேடிச் சென்று விண்ணப்பங்களை வழங்குவார்கள் என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil