சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில், கட்டிட உரிமைச் சான்று பெருவதற்கான கட்டணம் 100 % அதிகரிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை ரிப்பன் மாளிகையில், மாநகராட்சி மன்ற கூட்டத்தில், கட்டிடங்கள் அமைப்பதற்கான கட்டிட உரிமைச் சான்று பெருவதற்கான கட்டணம் 100% அதிகரிக்கப்படுவதாக திர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த மாற்றம் நவம்பர் 10 தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் கட்டிடங்கள் அமைப்பதற்கான திட்டத்திற்கு அனுமதி வழங்கும் போது செலுத்தப்படும் கட்டணத்தின் தொகை அதிகரித்துள்ளது. ஆனால் கட்டிட உரிமைச் சான்று பெருவதற்கான கட்டணம் கடந்த செப்டம்பர் 29, 2003 ஆண்டு முதல் மாறாமல் உள்ளது என்று கூட்டத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது.
கட்டுமானம் கட்டுவதற்கான அனுமதி பெரும்போது, சென்னை மாநகராட்சி சார்பில் கட்டிட உரிமைச் சான்றுக்கான தொகை மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மேலும் புதிய கட்டிடங்களை கட்டுவதற்காக பழைய கட்டிடங்கள் இடிக்கப்படும்போது, அதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கட்டணமும் 100% அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“