Advertisment

சென்னையில் அதிகரிக்கும் தெரு நாய்கள்; மாநகராட்சி அதிரடி திட்டம்

Chennai Tamil News: சென்னையில் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக இரண்டு விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னையில் அதிகரிக்கும் தெரு நாய்கள்;  மாநகராட்சி அதிரடி திட்டம்

தெருநாய்களை கட்டுப்படுத்த 2 பிறப்பு கட்டுப்பாடு மையங்களை சென்னை மாநகராட்சி கொண்டுவரவுள்ளது.

Chennai Tamil News: சென்னையில் இரண்டு புதிய விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கவிருக்கின்றனர். கிரேட்டர் சென்னை மாநகராட்சி ஆணையர் (ஜிசிசி) ககன்தீப் சிங் பேடி தலைமையில் கால்நடை பொது சுகாதாரக் குழுவுடன் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Advertisment

தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக் குறித்து ஆய்வு செய்வதே இந்த சந்திப்பின் நோக்கமாகும். 

publive-image

நகராட்சி அதிகாரிகளின் கூற்றுப்படி, 2018 கணக்கெடுப்பில், சென்னையில் சுமார் 57,366 தெரு நாய்கள் உள்ளன. இங்கு தற்போது லாயிட்ஸ் காலனி, புளியந்தோப்பு மற்றும் கண்ணமாப்பேட்டை ஆகிய இடங்களில் மூன்று விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளது.

தற்போது நாய்களை பிடிக்க 16 சிறப்பு வாகனங்கள் உள்ளதாகவும், ஒவ்வொன்றிலும் சுமார் 5 தொழிலாளர்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

GCC கமிஷனர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, "தொழிலாளர்கள் நாய்களைப் பிடிப்பதற்கான நடைமுறையைப் பின்பற்றி, நாய்களைப் பிடிப்பதற்காக வலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நாய்களுக்கு தீங்கு விளைவிக்கும் கயிறுகள் அல்லது பிற பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது", என்று தெரிவித்துள்ளார். நாய் பிடிக்கும் வாகனங்களுக்கும் அவ்வப்போது கருத்தடை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பணியாளர்கள் தங்கள் கடமையைச் செய்யும்போது மாநகராட்சி வழங்கும் பாதுகாப்புக் கவசங்களை அணிந்து கொள்ள வேண்டும், மேலும் இளம் நாய்களைப் பிடிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

"அவர்கள் நாய்களை ஏபிசி (விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையங்கள்)க்கு அழைத்துச் சென்றதும், கால்நடை மருத்துவர்கள் விலங்குகளின் உடல்நிலையை சரிபார்த்து, அறுவை சிகிச்சை செய்யலாமா என்பதை முடிவு செய்வார்கள்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குடிமை அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2022-23 ஆம் ஆண்டு வரை, சுமார் 7,018 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 

தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டங்களை நடத்துமாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Greater Chennai Corporation
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment