பெருநகர சென்னை கார்ப்பரேஷன் ஸ்மார்ட் பார்க்கிங் (ஜி.சி.சி ஸ்மார்ட் பார்க்கிங்) மொபைல் செயலி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. உதாரணமாக, ஷாப்பிங் செய்வதற்காக நாம் அடிக்கடி டி.நகர் செல்வதுண்டு. சரவணா ஸ்டோர் போன்ற பெரிய கடைகளுக்கு செல்லும் போது உள்ளுக்குளே வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டமைப்பு இருக்கும், ஆனால் நாம் பல கடைகள் ஏரி இறங்க வேண்டும் என்றால்….. சில கடைகளில் அதுபோன்ற வசதி இல்லை என்றால்…. நமது வண்டியை ஒரு பாதுகாப்பான இடத்தில் நிறுத்தவேண்டும் என்றால் …… நமக்கு டி.நகரில் ஏதோ ஒரு வாகனத்தை பார்க்கிங் செய்யும் இடம் ஒன்று தேவைப்படுகிறது. இதுபோன்று, நாளொன்றுக்கு சென்னையில் பல ஆயிரம் மக்கள் பார்க்கிங் பகுதி முழுமையான தகவல் தெரியாமல் திணறுகின்றனர்.
இந்த பிரச்சனையை சமாளிப்பதற்காகத் தான் சென்னை கார்ப்பரேஷன் தற்போது இந்த செயலியை வெளியிட்டுள்ளது. இந்த செயலி என்ன செய்கிறது என்றால்: சென்னையில் இருக்கும் 7,667 பார்க்கிங் இடங்களைப் பற்றிய முழு தகவல்களை கொடுக்கின்றது. மேலும், இந்த சென்சார் தொழிநுட்பத்தின் மூலம் ஒரு பார்க்கிங் இடம் முழுவதும் நிரம்பிவிட்டால், பக்கத்தில் இருக்கும் அடுத்த பார்க்கிங் இடங்களைப் பற்றிய முழுத் தகவல்களையும் கொடுக்கின்றது. இந்த செயலியின் மூலமே, நமது அருகில் இருக்கும் பார்க்கிங் ஏரியாவில் நாம் புக் செய்து கொள்ளலாம்.
சென்னை கார்ப்பரேஷன் கடந்த ஆண்டு ஜூன் மாதம், இந்த ஸ்மார்ட் பார்க்கிங் மேலாண்மைக்காக தனக்கு சொந்தமான காலி இடங்களையும், மற்ற அரசு நிறுவனங்களுக்கு சொந்தமான காலி இடங்களை அடையாளம் கண்டது . அடுத்தகட்ட நடவடிக்கையாக, 20,000க்கும் அதிகமான பார்க்கிங் இடங்களை சென்னை கார்ப்பரேஷன் இந்த செயலியின் மூலம் நிர்வகிக்க முனைகிறது.
தற்போது கார் வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திக்கு 20 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஐந்து ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இந்த செயலியை அண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் கூகுள் ப்ளே ஸ்டரில் பதிவு இறக்கம் செய்துக் கொள்ளலாம்.