சென்னை மாநகராட்சியுடன் ஒரு மண்டலமாக சேர்க்கப்பட்டதில் இருந்து, மாதவரம் பகுதிவாசிகள் முறையான தண்ணீர் விநியோகம் இல்லை என்று புகார் கூறி வந்த நிலையில், அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், டிசம்பர் மாதம் முதல் குழாய் மூலம் மெட்ரோ வாட்டர் சப்ளை செய்யப்படும் என மெட்ரோ வாட்டர் நிர்வாக இயக்குநர் ஆர்.கிர்லோஷ் குமார் தெரிவித்துள்ளார். “மாதவரம் மக்களுக்கு குழாய் மூலமாக குடிநீர் வழங்குவதற்கான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது” என்று அவர் கூறினார்.
செப்டம்பர் நடுப்பகுதியில், சோதனை நடவடிக்கை தொடங்கும். இதில் மேல்நிலைத் தொட்டிகளை நிரப்பி, குழாய்களில் தண்ணீர் விடப்படும். பின்னர், குழாய்களில் கசிவு ஏற்படுகிறதா என்று சோதிக்கப்படும். இந்த சோதனை நடவடிக்கை இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும். இப்பகுதியில் 14,000-க்கும் மேற்பட்ட இணைப்புகள் மூலம் சுமார் 3.83 லட்சம் மக்கள் பயனடைவார்கள். மாதவரம் பகுதிக்கு நாளொன்றுக்கு 10.7 மில்லியன் லிட்டர் தண்ணீர் குழாய்கள் மூலம் 167.6 கி.மீ. புழல் ஏரி மற்றும் மீஞ்சூர் உப்பு நீக்கும் ஆலையில் இருந்து தண்ணீர் வழங்கப்பட உள்ளது.
மாதவரம் 32-வது வார்டு கவுன்சிலர் ஏழுமலை, ஜூலை மாதம் நடந்த பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், மெட்ரோ வாட்டர் பைப்பில் கசிவு ஏற்பட்டதால், ஆறு மாதங்களாக இந்த மக்களுக்கு தண்ணீர் வரவில்லை, மற்ற பகுதிகளில் மெட்ரோ வாட்டர் இணைப்புகளே இல்லை என்று கூறினார்.
பெரும்பாலான பகுதிகள் தனியார் லாரிகளில் விநியோகம் செய்யப்படும் தண்ணீர் அல்லது நிலத்தடி நீரை நம்பியே உள்ளன. மாதவரம் ஆஸ்க்வெல் ஆஸ்க் வெல்ஃபேர் அசோசியேஷன் செயலர் டி.கோவிந்தராஜ் கூறுகையில், “இங்கே நிலத்தடி நீர் உப்பு தண்ணீராக உள்ளது. சாக்கடை நீரால் நிலத்தடி நீரும் கெட்டு விட்டது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, நிலத்தடி நீரும் ஜூலை 2023 நிலவரப்படி நில மட்டத்திலிருந்து 9மீ ஆழத்தில் இருக்கிறது” ஆங்கில செய்தித்தாளிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியுடன் ஒரு மண்டலமாக சேர்க்கப்பட்டதில் இருந்து, மாதவரம் பகுதிவாசிகள் முறையான தண்ணீர் விநியோகம் இல்லை என்று புகார் கூறி வந்த நிலையில், டிசம்பர் மாதம் முதல் குழாய் மூலம் மெட்ரோ வாட்டர் சப்ளை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி நிர்வாகம் மாதவரம் பகுதியில் குடிநீர் பிரச்னையை விரைவில் தீர்த்து வைத்தால், மாதவரம் மக்கள் வாழ தகுதியான பகுதியாக மாறும், என மாதவரம் மண்டல தலைவர் நந்தகோபால் எஸ் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”