/tamil-ie/media/media_files/uploads/2023/01/beach.jpeg)
சென்னையை குப்பையில்லா நகரமாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக, பொங்கல் விடுமுறையின் போது கடற்கரைகளில் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஜனவரி 17 மற்றும் 18ஆகிய தேதிகளில் (செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில்) மெரினா, எலியட்ஸ், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
சென்னை மாநகரில் சட்ட ஒழுங்கை பராமரிக்க, 15,000க்கும் மேற்பட்ட பணியாளர்களை சென்னை போலீசார் நிறுத்தியுள்ள நிலையில், கடலோர பகுதிகளில் குப்பை கொட்டுவதை தடுக்க குடிமைத்துறை அதிகாரிகளும் தங்களால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விடுமுறை நாட்களில் துப்புரவு பணிகளை தீவிரப்படுத்த அனைத்து கடற்கரைகளிலும் கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, மெரினா கடற்கரையில் கூடுதலாக 45 பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் ஈரமான மற்றும் உலர் கழிவுகளை சேகரிக்க, 50 லிட்டர் முதல் 240 லிட்டர் கொள்ளளவு கொண்ட 103 குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. கழிவுகளை விரைவாக அகற்ற, கூடுதலாக காம்பாக்டர் வாகனமும் பயன்படுத்தப்படும்.
இதேபோல், எலியட்ஸ் கடற்கரையில் 20 துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் 50 குப்பைத் தொட்டிகள், பாலவாக்கம் கடற்கரையில் 15 துப்புரவுத் தொழிலாளர்கள், இரண்டு பேட்டரியில் இயங்கும் வாகனங்கள், ஒரு டிராக்டர் மற்றும் ஒரு மெக்கானிக்கல் துப்புரவு இயந்திரம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. நீலங்கரை மற்றும் அக்கரை கடற்கரை பகுதிகளில் சுழற்சி முறையில் ஆறு துப்புரவு பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.