தற்போது வடகிழக்கு பருவமழைக் காலம் என்பதால், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. பருவமழையின் காரணமாக, சென்னை மக்கள் வெள்ளம் வரும் வாய்ப்புள்ளதை எண்ணி அஞ்சுகின்றனர்.
இப்பிரச்சனையை கையாள சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கையைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடந்த வாரம் பள்ளிக்கரணையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, பருவ மழையினால் மின் பொருத்துதல்களின் பாதுகாப்பு குறித்து சிவில் ஏஜென்சிகள் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.
பள்ளிக்கரணை குடியிருப்புவாசிகளின் புகார்களை அடுத்து மரங்களை கத்தரிக்க குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதையடுத்து சென்னையில் 15 மண்டலங்களில் 21,271 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அண்ணாநகரில் அதிகளவில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
மழையின் போது ஏற்படும் மின்கசிவைத் தடுக்க 2.3 லட்சம் தெருவிளக்குகள் மற்றும் 7,000 தூண் பெட்டிகள் உட்பட அனைத்து மின் நிறுவல்களையும் சோதனை செய்ய ஆரம்பித்துள்ளன.
சென்னையில் உள்ள எல்லா விளக்கு கம்பங்களையும் ஆய்வு செய்து கேபிள்களை இறுக்க வைத்து வருகின்றன. கூடுதலாக, ஆபரேட்டர்கள் மற்றும் டீசல் ஜெனரேட்டர் செட்களுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த வாரம் பருவமழை தொடங்குவதை முன்னிட்டு, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி முன்னிலையில், மேயர் பிரியா ராஜன், துறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்தினார். மொபைல் டவர்கள் மற்றும் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்களுக்கு அருகில் ஜெனரேட்டர்களை வைக்க தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விபத்துகளை தவிர்க்க கட்டிடத்தின் முதல் தளம் அல்லது அதற்கு மேல் ஜெனரேட்டர்களை வைக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் சமையலுக்கான போதுமான அளவு தானியங்கள் மற்றும் பருப்புகளை வாங்கி வைக்குமாறு குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, 15 மண்டலங்களிலும் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
குடிமை அமைப்பு அதிகாரிகளுக்கான பேரிடர் மேலாண்மை செயலியை உருவாக்கியுள்ளனர். இதில் மாநில அரசின் துறைகள் முழுவதும் உள்ள கள அதிகாரிகளின் தொடர்புகள், நிவாரண முகாமின் தகவல்கள், தனியார் திருமண மண்டபங்கள் மற்றும் கல்லூரிகளில் தங்குமிடம் மற்றும் பாம்பு பிடிப்பவர்களை ஒருங்கிணைக்க தேவையான எண்கள் ஆகியவை உள்ளது.
வெள்ளம், மோட்டார் பம்புகள், மரங்கள் விழுதல் மற்றும் உணவு விநியோகம் குறித்து அதிகாரிகளுக்கு இந்த செயலி தொடர்ந்து அறிக்கைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நகரவாசிகள் மழைக்காலத்தில் குடிமைப் பிரச்சனைகளைப் புகாரளிக்க கார்ப்பரேஷன் ஹெல்ப்லைன் எண்ணான 1913ஐ அழைக்கலாம். ரிப்பன் கட்டிடங்களில் உள்ள மாநகராட்சிக்கான வெள்ளக் கட்டுப்பாட்டு அறையின் தரைவழி எண்கள் 044-25619206, 044-25619207 மற்றும் 044-25619208.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil