சென்னை மாநகராட்சியில் ரூ.10.8 கோடி முதல் ரூ.7 லட்சம் வரை சொத்து வரி நிலுவை வைத்துள்ள டாப் 100 நிறுவனங்களின் பட்டியலை மாநகராட்சி நிர்வாகம் நேற்று ( சனிக்கிழமை) வெளியிட்டது. சென்னையின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் மொத்தமாக ரூ.1.4 கோடி வரி செலுத்த வேண்டியுள்ளது. அதேசமயம் மண்ணூர்பேட்டையில் உள்ள ஆர்.ஆர் இன்ஃபோ பார்க் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அதிகபட்சமாக மாநகராட்சிக்கு ரூ.10.84 கோடி வரி செலுத்த வேண்டியுள்ளது.
ஓ.எம்.ஆரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் ரூ.47.8 லட்சமும், தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் விற்பனை நிலையம் ரூ.49 லட்சமும், உஸ்மான் சாலையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் ரூ.19.3 லட்சமும், வேளச்சேரியில் உள்ள கடை ரூ.18.49 லட்சமும் வரி பாக்கி செலுத்த வேண்டும். மாநகராட்சி பதிவேடுகளின்படி, இந்த நிலுவைத் தொகை
ஒய். பல்லக்குதுரை என்பவரின் பெயரில் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபா ரூ.17.3 லட்சமும், தி.நகரில் உள்ள ஆந்திர சமூக மற்றும் கலாச்சார சங்கம் ரூ.15.8 லட்சமும் வரி பாக்கி செலுத்த வேண்டும். மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பாலிடெக்னிக் கல்லூரிக்கு ரூ.1.27 கோடி மாநகராட்சி வரி பாக்கி உள்ளது. வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள CeeDeeYes ஸ்டாண்டர்ட் டவர்ஸ் நிறுவனம் ரூ.98.75 லட்சம் செலுத்த வேண்டும்.
மொத்தம் ரூ.8 கோடியே 2 லட்சம் வரை வரி நிலுவை பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஸ்ரீ ராமச்சந்திரா எஜுகேஷனல் அண்ட் ஹெல்த் டிரஸ்ட், மெட்ராஸ் ரேஸ் கிளப், ஸ்பென்சர் அண்ட் கம்பெனி லிமிடெட், சிட்டாடைன்ஸ் ஓ.எம்.ஆர் அபார்ட் ஹோட்டல்ஸ், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரி ஆகியவையும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/