Mk Stalin | தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 15.09.2022 அன்று மதுரை அரசுப் பள்ளியில் (CMBFS) காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
முன்னதாக, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்” என்று ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 7.5.2022 அன்று விதி 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.
தொடர்ந்து, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவினை பரிமாறி தொடங்கிவைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய சென்னை மேயர் பிரியா, “சென்னை உள்பட பிற பகுதிகளிலும் தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“