தியாகராய நகரில் உள்ள பிரபல துணிக் கடையில் கடந்த 18-ம் தேதி கட்டுக்கடங்காத கூட்டம் இருந்துள்ளது. அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில் இன்று துணிக்கடைக்கு மாநகராட்சி சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.
‘பிஸிக்கலி டிஸ்டர்ப் பண்றீங்க’ கொந்தளித்த ஆரி
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட கடைகள் அன்லாக் விதிமுறைகள் படி திறக்கப்பட்டன. கொரோனா பரவாமல் தடுக்க சமூக இடைவெளி, சானிட்டைசர் வழங்குவது உள்ளிட்ட உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வணிக நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. ஆனால் இந்த உத்தரவை முறையாக பின்பற்றாமல் வாடிக்கையாளர்கள் சில கடைகளில் அதிகமாக கூடுவதாக புகார்கள் வந்தன.
After seeing the lack of fear and respect for it #Covid will think of committing suicide. What do we say to such people? https://t.co/67xLmMWbdm
— Sumanth Raman (@sumanthraman) October 20, 2020
எனவே விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து சீல் வைக்க தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அதிகாரி தலைமையிலான குழுவினர் நேரடியாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றன.
விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்குப்பதிவு
அந்த வகையில், சென்னை டிநகரில் உள்ள பிரபல துணிக்கடையான குமரன் சில்க்ஸ் கடையில், கடந்த 18-ம் தேதி கட்டுக்கடங்காத கூட்டம் இருந்துள்ளது. அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதுஅதிக அளவுக்கு வாடிக்கையாளர்கள் கூட்டம் சேர்ந்தது தடுக்காததை, காரணம் காட்டி, குமரன் சில்க்ஸ் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை சீல் வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அந்த துணிக் கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அரசு அறிவுறுத்தல்களை கடைபிடிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில் நேற்று மீண்டும் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில், அரசு வழங்கிய அறிவுறுத்தல்களை முறையாக கடைபிடிக்காதது தெரியவந்ததை அடுத்து, அந்தக் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”