சென்னையின் வாழ்வாதாரங்களான நீர்நிலைகளை கண்காணிக்க குழுக்கள் அமைப்பு
Panel to monitor water bodies in chennai : சென்னை நகர்ப்புற பகுதிக்குள் உள்ள 130 நீர்நிலைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக கிரேட்டர் சென்னை கார்ப்பரேசன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Panel to monitor water bodies in chennai : சென்னை நகர்ப்புற பகுதிக்குள் உள்ள 130 நீர்நிலைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக கிரேட்டர் சென்னை கார்ப்பரேசன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Chennai,water bodies,Sholinganallur,monsoon,monitor water bodies,Greater Chennai Corporation,chennai corporation, சென்னை, நீர்நிலைகள், கிரேட்டர் சென்னை, சென்னை கார்ப்பரேசன், ஆக்கிரமிப்பு, மறுசீரமைப்பு
சென்னை நகர்ப்புற பகுதிக்குள் உள்ள 130 நீர்நிலைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக கிரேட்டர் சென்னை கார்ப்பரேசன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisment
சென்னை நகர்ப்புற பகுதிகளுக்குள் உள்ள நீர்நிலைகளை குறித்த காலங்களில் மறுசீரமைத்து மீண்டும் அங்கே ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவண்ணம் கண்காணிப்பதற்காக அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக கிரேட்டர் சென்னை கார்ப்பரேசன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா – அமித்ஷா தாக்கல்
Advertisment
Advertisements
சென்னை சிட்டி கார்ப்பரேசன் 15 ஜோன்களாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு ஜோனுக்கும் ஒரு அசிஸ்டெண்ட் இஞ்ஜினியர், ஒரு சானிட்டரி இன்ஸ்பெக்டர், ஜோனல் ஆபிசர், மற்ற ஊழியர்கள் என ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை கிரேட்டர் கார்ப்பரேசன் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது, நீர்நிலைகளை மறுசீரமைக்கும் பணிகள் மட்டுமல்லாது இந்த குழுவினர், நீர்நிலைகளில் குப்பைகள் உள்ளிட்ட கழிவுகள் சேராவண்ணமும் பாதுகாப்பர்.
சென்னை நகர எல்லைக்குள் 210 நீர் நிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவைகளில் 130க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. நீர்நிலைகளின் கரைகளை வலுப்படுத்துதல், நடைபாதைகளை அமைத்தல், தெரு விளக்கு வசதி செய்தல், அவைகைள பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் மறுசீரமைப்பு பணிகளில் அடங்கும்.
எஞ்சிய நீர்நிலைகளில், மறுசீரமைப்பு பணிகள் 2020 ஜனவரி மாதம் இறுதிவாக்கில் துவங்கும். மாதவரம் ( ஜோன் 3) பகுதியில் உள்ள ஊத்துக்குளம், சாமியார் குளம், வளசரவாக்கம் ( ஜோன் 11) பகுதியில் உள்ள அப்பாத்துரை குளம், ஆலங்குளம், பெருங்குடி ( ஜோன் 14) பகுதியில் உள்ள ரெட்டை கட்டை குளம், மடிப்பாக்கம் ஏரி, சோழிங்கநல்லூர் (ஜோன் 15) பகுதியில் உள்ள கருமஞ்சாவடிகுளம் உள்ளிட்ட நீர்நிலைகளின் தோற்றமே தற்போது மாறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்களை சந்தித்த சென்னை கார்ப்பரேசன் தலைமை இஞ்ஜினியர் நந்தகுமார் கூறியதாவது, சென்னை நகர்ப்பகுதிக்குள் உள்ள அனைத்து நீர்நிலைகளும் மழைக்காலம் துவங்குவதற்குள் மறுசீரமைக்கப்படும்.
ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை மறுசீரமைப்பதிலும் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதிலும் அதிகாரிகள் நிறைய சவால்களை எதிர்கொண்டனர். ராமாபுரம் குளம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு கொலைமிரட்டலும் விடுக்கப்பட்டது. நீர்நிலைகள் சீரமைப்பு பணிகளில் மக்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.