சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை குறித்த காலத்திற்குள் தரமாக முடிக்க வேண்டும் என்றும் தாமதமாக பணிகளை மேற்கொண்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களை எச்சரித்துள்ளது.
தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் சென்னையில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ள நீர் தேங்குவதைத் தவிர்க்க மழைநீர் வடிகால் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
சென்னை முழுவதும் மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த இடங்களில் மழை காலங்களில் மழை நீர் தேங்காமல் உடனடியாக வடிந்து வருகிறது.
அதே நேரத்தில், சென்னையில் சில பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் இன்னும் முழுவதுமாக முடிவடையாமல் இருந்து வருகிறது. இதனால், மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் சிலர் தவறி விழும் சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்நிலையில், மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை முழுவதுமாக விரைவாக முடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களை துரிதப்படுத்தி வருகிறது.
தற்போது மழைநீர் வடிகால் பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு, விரைவாக சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மழைநீர் வடிகால் பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி கூறியிருப்பதாவது: “மழைநீர் வடிகால் பணிகளை குறித்த காலத்திற்குள் தரமாக முடிக்க வேண்டும். தாமதமாக பணிகளை மேற்கொண்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். பணிகள் நடைபெறும் இடத்தை சுற்றி தடுப்புகள் அமைப்பது, எச்சரிக்கை பதாகைகள் வைப்பது உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும். விதிகளை கடைப்பிடிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும்” விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், வடிகால் பணிகள் நடைபெறும் இடத்தை சுற்றி தடுப்புகள் அமைப்பது, எச்சரிக்கை பதாதைகள் வைப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“