ஐ .பெரியசாமி தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கீழமை நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை பார்க்கும் போது, நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு துறை தொடர்பான வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் நடந்து கொள்ளும் செயலை பார்த்தால், நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் மீதான முறைகேடு மற்றும் சொத்து குவிப்பு வழக்குகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அவற்றை மீண்டும் விசாரணை செய்ய நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று நடந்த விசாரணையின் போது அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், லட்ச ஒழிப்புத்துறையினர் தொடரும் வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் செயல்படும் விதத்தை பார்க்கையில் நீதித்துறையை ஆண்டவந்தான் காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பின்பற்றும் நடைமுறைகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது போன்ற வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுக்க உத்தரவிடும் என்னை வில்லனாக பார்க்கிறார்கள் என கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகிய இருவருமே இது தொடர்பான வழக்கின் விசாரணை எதிர்கொள்ள விரும்பவில்லை எனவும் கூறியுள்ள நீதிபதி, வழக்கு விசாரணையை அக்.12ம் தேதி ஒத்தி வைத்தார்.
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“